For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பரவும் புதிய ஓமிக்ரான்.. இது தீபாவளிக்கு பின் புதிய அலையைத் தூண்டும் திறன் கொண்டதாம்.. உஷார்..

ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை மாறுபாடான ஓமிக்ரான் BF.7 அதிகம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், தீபாவளிக்கு பின் ஒரு புதிய அலையை இது தூண்டும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

|

ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸின் பிடியில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் போராடி வந்தோம். இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், கொரோனா வைரஸ் பல உருமாற்றங்கள் அடைந்து மக்களை தாக்கிக் கொண்டிருந்தது. அப்படி உருமாற்றமடைந்த கொரோனாவின் ஒரு வகை தான் ஓமிக்ரான். ஆனால் ஓமிக்ரான் மாறுபாடு கொரோனா தொற்றுநோயின் போக்கையே மாற்றியது.

Omicron BF.7 In India: Will Diwali Trigger A Fresh Covid Wave?

இந்த ஓமிக்ரான் மாறுபாடு ஆபத்தான டெல்டா மாறுபாடு போலன்றி, லேசான ஆபத்தையே ஏற்படுத்தியது மற்றும் இது மற்ற சுவாச தொற்றுக்களான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டிருந்தது. இருப்பினும், ஓமிக்ரானின் ஒவ்வொரு புதிய மாறுபாடு மற்றும் துணை மாறுபாடுகளால், கொரோனா வழக்குகள் அதிகரித்ததோடு, பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்ந்து ஆபத்தில் இருந்தனர்.

இந்த ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை மாறுபாடுகளாக BA.5.1.7 மற்றும் BF.7 கூறப்படுகிறது. இவற்றில் ஓமிக்ரான் BF.7 அதிகம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், தீபாவளிக்கு பின் ஒரு புதிய கோவிட் அலையை இது தூண்டும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓமிக்ரான் BF.7 என்றால் என்ன?

ஓமிக்ரான் BF.7 என்றால் என்ன?

ஓமிக்ரான் BF.7 என்பது ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய துணை மாறுபாடாகும். இந்த மாறுபாடு முதன்முதலாக வடமேற்கு சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடு 'ஓமிக்ரான் ஸ்பான்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய துணை மாறுபாடு வேகமாக பரவக்கூடியது மற்றும் இந்த புதிய மாறுபாடானது தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் வழக்கு

இந்தியாவில் முதல் வழக்கு

ஓமிக்ரான் BF.7 மாறுபாடு இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, இந்தியாவில் BF.7 மாறுபாட்டின் முதல் வழக்கானது குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல உடல்நல நிபுணர்கள் இந்த மாறுபாட்டை அலட்சியமாக எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றனர். ஏனெனில் BF.7 மற்றும் BA.5.1.7 ஆகிய மாறுபாடுகள் தான் சீனாவில் கொரோனா வழக்குகள் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏன் BF.7 கவலைக்குரியது?

ஏன் BF.7 கவலைக்குரியது?

இரண்டு ஆய்வுகளின் படி, ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடான BF.7 நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கக்கூடியது மற்றும் இது பல ஓமிக்ரான் துணை மாறுபாடுகளை விட முந்தைய தொற்று அல்லது தடுப்பூசிகளின் ஆன்டிபாடிகளை தடுக்கக்கூடியது. முக்கியமாக சிறப்பாகப் பிணைக்கும் திறனைக் கொண்டுள்ளது.

தற்போது தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அடுத்த 2-3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இன்னும் நம்மைச் சுற்றி கொரோனா உள்ளது மற்றும் உலகின் பல பகுதிகளில் புதிய மாறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. எனவே நாம் பண்டிகை நாட்களில் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் என்று தடுப்பூசி தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகிறார்.

ஓமிக்ரான் BF.7 அறிகுறிகள்

ஓமிக்ரான் BF.7 அறிகுறிகள்

அறிக்கைகளின் படி, ஓமிக்ரான் BF.7-ன் பொதுவான அறிகுறிகளானது முந்தைய கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருக்கும். தொண்டை புண், சோர்வு, இருமல், மூக்கு ஒழுகல் போன்றவை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாகும். எனவே இம்மாதிரியான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

தீபாவளி இந்தியாவில் கொரோனாவின் புதிய அலையை தூண்டுமா?

தீபாவளி இந்தியாவில் கொரோனாவின் புதிய அலையை தூண்டுமா?

தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடக்கூடிய பண்டிகை என்பதால், மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகைகளை அதிகம் கொண்டாடியதில்லை. எனவே இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதன் விளைவாக தீபாவளிக்கு பின் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க வேண்டுமானால் மக்கள் மாஸ்க்குகளை அணிவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அறிகுறிகளைக் கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தீபாவளியை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* தீபாவளி பண்டிகை நாட்கள் முடிந்தவரை குறைந்தபட்ச நபர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் அவர்களை வீட்டிற்குள் சந்திக்காமல், வெளியிடங்களில் சந்திக்க முயற்சி செய்யுங்கள்.

* இருமலின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள் மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவுங்கள்.

* மாஸ்க் அணியும் போது, அந்த மாஸ்க் மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்கு மறைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

* உடல்நிலை சரியில்லாதது போல் உணர்ந்தால், யாரையும் சந்திக்காமல் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Omicron BF.7 In India: Will Diwali Trigger A Fresh Covid Wave?

In this article, we share about Omicron’s latest variant BF.7. Will this diwali trigger a fresh covid wave in india? Read on to know more...
Story first published: Tuesday, October 18, 2022, 10:34 [IST]
Desktop Bottom Promotion