Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வாரத்திற்கு இத்தனை முறை விந்தணுக்கள் வெளியேற்றும் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வராதாம்...!
உடலுறவின் மூலமாகவோ, தூக்கத்தில் அல்லது சுயஇன்பம் செய்யும் போது, விந்து வெளியேறுவது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் ஒரு புற்றுநோய். குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஆண்கள் எப்போதுமே உஷாராக இருக்க வேண்டும். அதிலும் 35 வயதிற்கு மேல் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் 35 வயதிற்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் தாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் என்றால், அனைவருக்கும் மரணம் என்பதுதான் நினைவில் வரும்.

ஆரம்ப காலத்திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்து விட்டால், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு குணப்படுத்தி விடலாம். புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு வழியை இங்கே, எந்த மனிதனும் வேண்டாம் என்று சொல்லமாட்டார். அந்த வகையில், ஆண்களுக்கு ஏற்படும் இந்த புற்றுநோயை தடுப்பதற்கான ஒரு வழிதான் விந்து வெளியேற்றுதல். ஆபத்தான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க நீங்கள் எத்தனை முறை விந்து வெளியேற வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள ஓர் முக்கிய உறுப்பு தான் புரோஸ்டேட் சுரப்பி. இந்த சுரப்பியின் முக்கிய செயல் விந்தணுக்களுக்கு பாதுகாப்பு தரும்படியான ஓர் திரவத்தை சுரப்பது தான். புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது, ஆண்குறியில் வலி ஏற்படுதல், விந்து தள்ளலில் பிரச்சனை போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இளைஞர்கள் எத்தனை முறை?
ஒரு ஆய்வில், 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒரு மாதத்திற்கு 21 முறைக்கு மேல் விந்து வெளியேறியுள்ளனர். ஏழு முறைக்கு குறைவாக விந்து வெளியேற்றியவர்களுடன் ஒப்பிடும்போது புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை இவர்கள் 19 சதவீதம் குறைத்துள்ளனர். ஆதலால், இளைஞர்கள் மாதத்திற்கு 21 முறை விந்து வெளியேற்றுவது அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது என அந்த ஆய்வில் கூறப்பட்டது.

40 வயதிற்குட்பட்ட ஆண்கள்
இளைஞர்களின் விந்து வெளியேற்றுதலும், 40 வயதிற்குட்பட்ட ஆண்களின் விந்து வெளியேற்றுதலும் மாறுபடும். அந்த வகையில், 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் 40 களில் இருந்தால், விந்து வெளியேறுவது உங்களுக்கு ஏற்படும் ஆபத்தை மேலும் குறைக்கக்கூடும். 22 சதவிகிதம் உங்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உருவாகும் அபாயத்தை இது குறைக்கும்.

ஒவ்வொரு நாளும் வெளியேறுவதா?
ஒவ்வொரு நாளும் விந்து வெளியேற்றுவதா? என்ற கேள்வி பெரும்பாலான ஆண்களின் மனதில் எழுவதுதான். ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 70 வயதிற்குட்பட்ட ஆண்கள் வாரத்திற்கு 4.6 முதல் ஏழு முறை விந்து வெளியேறியுள்ளனர். இதில், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் அவர்களுக்கு 36 சதவீதம் குறைத்துள்ளது. சராசரியாக அல்லது குறைவாக வாரத்திற்கு 2 அல்லது 3 முறை விந்து வெளியேறிய ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் இருக்கிறது.

விந்துதள்ளல் பங்கு
அடிக்கடி விந்து வெளியேறுவது உங்கள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்திருந்தாலும், இரண்டிற்கும் இடையேயான தொடர்பு என்ன என்பது தெளிவாக எந்த ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கவில்லை. மருத்துவர்களும் விந்து வெளியேற்றுவது நல்லது என்றுதான் கூறுகிறார்கள்.

அடிக்கடி விந்து வெளியேறுவது ஆரோக்கியமா?
அடிக்கடி விந்து வெளியேற்றுவது ஆரோக்கியமான அடையாளமா? என்று பல ஆண்கள் கேள்வி எழுப்புகின்றனர். பல நிபுணர்கள் அடிக்கடி விந்து வெளியேறுவது பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதை குறிக்கிறது என்பதை நம்புகிறார்கள். ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு குறைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் மட்டுமல்லாமல் மற்ற மருத்துவ பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இறுதி குறிப்பு
மேற்கூறிய அனைத்தையும் கூறிவிட்டு, நீங்கள் எவ்வளவு முறை விந்து வெளியேறுகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்கள் உடல்நலம் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும். ஆனால், ஒருவரின் உடல் நலன் முழுவதும் இதை சார்ந்தது என்று கூறமுடியாது. ஏனென்றால், நீங்கள் சுயஇன்பம் அல்லது உடலுறவில் ஈடுபடுகிறீர்களானால், அவற்றை பொறுத்து உங்கள் விந்து வெளியேற்றம் இருக்கும். உடலுறவின் மூலமாகவோ, தூக்கத்தில் அல்லது சுயஇன்பம் செய்யும் போது, விந்து வெளியேறுவது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவும்.



Click it and Unblock the Notifications
