Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பிரான்ஸில் புதிதாக பீதியைக் கிளப்பும் மற்றொரு புதிய கொரோனா - அதன் பெயர் என்ன? இது ஆபத்தானதா?
பிரான்ஸில் 12 பேருக்கு சோதனை செய்ததில், அவர்களின் மாதிரிகளில் 'IHU' என்று பெயரிடப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து, அது டெல்டாவுடன் முடிந்துவிடாதா என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மிகவும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் என்னும் கொரோனாவின் புதிய உருமாற்றம் பிரான்ஸில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ஓமிக்ரான் தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் புகுந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் கொரோனாவின் மற்றொரு தீவிரமான விகாரம் பரவுவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் 12 பேருக்கு சோதனை செய்ததில், அவர்களின் மாதிரிகளில் 'IHU' என்று பெயரிடப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. IHU மாறுபாடு அல்லது B.1.640.2, முதன்முதலில் டிசம்பர் 2021-ல் தெற்கு பிரான்சில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய பல வழக்குகள் பிரான்ஸ் நாட்டில் சில பகுதிகளில் அதிகரித்து வருவதால், இது உலகளாவி நிபுணர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

IHU கொரோனா என்ற பெயர் எப்படி வந்தது?
பிரான்ஸில் உள்ள பிரபலமான Mediterranee Infection University Hospital Institute (IHU) உள்ள நிபுணர்கள் தான் இந்த புதிய மாறுபாட்டை முதலில் கண்டறிந்தனர். எனவே இந்த கோவிட் மாறுபாட்டிற்கு IHU வகை கொரோனா என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த கோவிட் மாறுபாடு 46 பிறழ்வுகளைக் கொண்டது. இது ஓமிக்ரானை விட அதிகமான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. பொதுவாக பிறழ்வுகள் தான் ஒரு மாறுபாட்டை மிகவும் பரவக்கூடியதாகவும் தடுப்பூசிக்கு நோய் எதிர்ப்பு சக்தியாகவும் ஆக்குகின்றன. ஆகவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள IHU மாறுபாடு ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறி கவலைப்படுகின்றனர். இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை மற்றும் இந்த மாறுபாடு குறித்து விரிவாக அறிந்து கொள்ள கூடுதல் ஆய்வுகளும் தேவைப்படுகின்றன.

IHU கோவிட் மாறுபாடு முதலில் எங்கு கண்டறிப்பட்டது?
இந்த புதிய கோவிட் மாறுபாடானது நவம்பர் 2021-ல் முதன் முதலில் பிரான்ஸில் கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த மாறுபாட்டின் நடத்தையை நிரூபிப்பதற்கு எவ்வித ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் அழிவை ஏற்படுத்திய ஓமிக்ரான் வகை கொரோனாவை புரிந்து கொள்வதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த IHU மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர் ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் இருந்து திரும்பிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் முதலில் சில சுவாச கோளாறை சந்தித்த பின்னர், பரிசோதனை செய்யப்பட்டார். அந்த பரிசோதனையில் B.1.640.2 மாறுபாடு (IHU கோவிட் மாறுபாடு) இருப்பதைக் காட்டியது. இதை தொடர்ந்து பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் மேலும் 11 பேருக்கு இந்த IHU மாறுபாடு பதிவாகியிருந்தது.

IHU கோவிட் மாறுபாடு
IHU கோலிட் மாறுபாடு அல்லது B.1.640.2, முதன்முதலில் பிரான்ஸில் கண்டறியப்பட்டது. இதில் இதுவரை 46 பிறழ்வுகள் கண்டறியப்பட்டன. பாதிக்கப்பட்டவரின் சோதனை அறிக்கையில், COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் IHU திரிபு N501Y பிறழ்வைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. N501Y பிறழ்வு ஆரம்பத்தில் ஆல்பா மாறபாட்டில் காணப்பட்டது மற்றும் இந்த மாறுபாடு வேகமாக பரவக்கூடியவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சில ஆய்வாளர்கள், IHU மாறுபாடு E484K பிறழ்வைக் கொண்டுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர். அதாவது, தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் சில பண்புகளைக் கொண்டது.
எளிமையாக கூற வேண்டமானால், இந்த புதிய IHU கோலிட் மாறுபாடு 46 பிறழ்வுகளையும், 37 கிளை மாற்றங்களையும் கொண்டுள்ளது.

IHU மாறுபாடு வேகமாகப் பரவக்கூடியதா?
இதுவரை, பிரான்ஸில் மட்டுமே IHU கோவிட் மாறுபாட்டில் வழக்குகள் உள்ளன. மேலும் இதுவரை 12 பேருக்கு IHU கோவிட் மாறுபாடு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. மேலும் B.1.640.2, முன்னர் அறியப்பட்ட கொரோனா வைரஸின் பிற மாறுபாடுகளை விட வலுவானதா அல்லது வேகமாகப் பரவுகிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மாறுபாடு குறித்து உலக சுகாதார அமைப்பின் பதில் என்ன?
பிரான்ஸில் IHU மாறுபாடு பற்றிய அறிக்கைகள் வெளிவந்த பின்னர், உலக சுகாதார அமைப்பு பீதி அடைய தேவையில்லை என்று தெளிவுபடுத்தியது. ஏனெனில் தற்போது இந்த மாறுபாடு பிரான்ஸில் மட்டுமே உள்ளது. மேலும் இந்த மாறுபாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.



Click it and Unblock the Notifications