For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த சிரமமுமின்றி தினமும் கலகல-ன்னு 'கக்கா' போகணுமா? அதுக்கு இத தவறாம செஞ்சாலே போதும்...

நீங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தினமும் மலம் கழிக்க நினைத்தால், குடலியக்கத்தை மேம்படுத்தும் ஒருசில விஷயங்களை தினமும் பின்பற்றுங்கள்.

|

குடலியக்கம் நன்றாக இருந்தால் தான், ஒருவரது உடல் ஆரோக்கியமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் என்ன தான் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், கழிவறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தால், அது ஒரு நல்ல குடலியக்கத்திற்கான அறிகுறி அல்ல. சொல்லப்போனால் நீண்ட நேரம் கழிவறையில் இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். நல்ல குடலியக்கத்தைக் கொண்டவர்கள், கழிவறைக்கு சென்று எவ்வித சிரமமும் இல்லாமல் மலத்தை கழிப்பார்கள். மேலும் போனோமா, வந்தோமா-ன்னு இருப்பார்கள்.

Natural Ways To Poop Better

அதைவிட்டு, ஒருவர் தினமும் கழிவறையில் பல மணிநேரத்தை செலவழிப்பவராயின், அவரது குடலியக்கத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். குடலியக்க பிரச்சனையானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் ஒருவருக்கு ஏற்படும். எனவே நீங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தினமும் மலம் கழிக்க நினைத்தால், குடலியக்கத்தை மேம்படுத்தும் ஒருசில விஷயங்களை தினமும் பின்பற்றுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உங்களுக்கு எப்போதுமே வராது மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீர் அருந்தவும்

நீர் அருந்தவும்

ஒருவரது உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், அது ஒருவரது மலச்சிக்கல் பிரச்சனையை மோசமாக்கிவிடும். ஒருவடர் நீரேற்றத்துடன் இருக்க தினமும் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். அதிலும் வெதுவெதுப்பான நீரை தினமும் குடிப்பது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். பொதுவாக உடலில் நீர் அதிகமான அளவில் இருந்தால், மலம் இறுக்கமடைவது தடுக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேற எளிதாக இருக்கும்.

நார்ச்சத்துள்ள உணவு

நார்ச்சத்துள்ள உணவு

தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்பதன் மூலம், மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கலாம். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 முதல் 25 கிராம் நார்ச்சத்து எடுக்க வேண்டும். இதனால் குடலியக்கம் சிறப்பாக இருக்கும். அதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பப்பாளி, ஆப்பிள், ப்ராக்கோலி, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, திணை போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்கவும்

கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்கவும்

சீஸ், பால் பொருட்கள் போன்ற கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்கவும். ஏனெனில் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு கடினமாக இருப்பதோடு, நீண்ட நேரம் உடலில் தங்கி இருப்பதால், குடலால் அவற்றை வெளியேற்றுவது கடினமாக இருக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மலச்சிக்கலின் அபாயத்தை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வதால், குடல் தசைகள் தூண்டப்படும். ஆகவே வேகமான நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம் மிகவும் கடுமையான உடற்பயிற்சிகள் மலச்சிக்கலை தீவிரப்படுத்தும். எனவே கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

புரோபயோடிக் உணவுகள்

புரோபயோடிக் உணவுகள்

புரோபயோடிக் உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் குடலில் உள்ள பயனளிக்கும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். சொல்லப்போனால் இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.

சூடான காபி

சூடான காபி

பொதுவாக சூடான பானங்கள் குடல் தசைகளைத் தூண்டிவிட்டு, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிகமாக ஒருவர் அருந்தும் போது, அது மலச்சிக்கலை தீவிரமாக்கிவிடும். எனவே காப்ஃபைன் நிறைந்த காபி, டீ போன்ற பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை காலையில் எழுந்ததும் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஏனெனில் ஆலிவ் ஆயில் ஒரு உயவுப் பொருள் போன்ற செயல்பட்டு, மலத்தை மென்மையாக்கி, சிரமமின்றி மலக்குடலில் பயணிக்கச் செய்து எளிதில் வெளியேற்ற உதவும்.

உலர் கொடிமுந்திரி

உலர் கொடிமுந்திரி

உலர்ந்த கொடிமுந்திரியைப் பழத்தைச் சாப்பிடுவது மலப் பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும். ஏனென்றால் உலர்ந்த கொடிமுந்திரியில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது மற்றும் மலமிளக்கியாக செயல்படும் சார்பிடால் என்னும் பொருளும் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனை வருவதைத் தடுக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் ஆரோக்கியமான குடலியக்கத்தைத் தூண்ட உதவுவதோடு, இறுமடைந்த மலத்தை மென்மையாக்கவும் உதவும். ஆகவே இந்த எலுமிச்சை ஜூஸ் குடித்து கழிவறையில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஸ்குவாட் நிலை

ஸ்குவாட் நிலை

தற்போது பலரது வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் தான் உள்ளது. சொல்லப்போனால் இதுவும் தற்போது பலர் மலச்சிக்கலை சந்திக்க ஓர் காரணமாக கூறலாம். பொதுவாக இந்தியன் டாய்லெட்டானது எளிதில் மலம் கழிக்க ஏற்றவாறான ஒரு நிலையை மேற்கொள்ள வைக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட் நாம் சாதாரணமாக நாற்காலியில் அமர்வது போன்ற நிலையைக் கொடுக்கிறது. இதனால் மலக்குடல் வளைந்து மலம் கழிப்பதற்கு சிரமத்தை உண்டாக்குகிறது. இதைத் தவிர்க்க, தினமும் ஸ்குவாட் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் மற்றும் ஸ்குவாட் நிலையில் மலம் கழியுங்கள். இது குடல் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, குடலை நேராக்கி, சிரமமின்றி மலத்தை வெளியேற்றச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Poop Better

Here are some natural ways to poop better. Read on...
Story first published: Monday, December 14, 2020, 12:41 [IST]
Desktop Bottom Promotion