For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க...

இப்போது நாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றொரு வழியைப் பார்க்கப் போகிறோம். அது தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்.

|

இன்று ஏராளமான மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதய நோய் வருதற்கு முக்கிய காரணம் உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாவது தான். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். ஆனால் உடலில் அதிகமாக தேங்கியிருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க பல வழிகள் உள்ளன. உதாரணமாக, உணவில் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

Natural Drinks To Lower Cholesterol In Tamil

இது தவிர, உடற்பயிற்சி செய்யலாம், உடல் பருமனைக் குறைக்கலாம் மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிடலாம். ஆனால் இப்போது நாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றொரு வழியைப் பார்க்கப் போகிறோம். அது தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் குடிக்க வேண்டிய ஜூஸ்கள். இந்த ஜூஸ்களைக் குடித்தால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களைக் குறைக்கலாம். மேலும் இந்த ஜூஸ்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியவை. இப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஜூஸ்கள் எவை என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்டராலைக் குறைக்க உதவும். மேலும் மாதுளை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தமனிகளில் பிளேக் உருவாக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு இந்த ஜூஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஆகவே இனிமேல் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போது, ப்ளாக் சால்ட் சேர்த்த மாதுளை ஜூஸை ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் கொலஸ்ட்ரால் உடலில் தேங்குவதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் இல்லை. இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, இது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றம் சிறுநீரில் pH அளவை அதிகரிக்கிறது மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் ஆரஞ்சு ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியில் லைகோபைன் அதிகமாக உள்ளது. இது லிபிட்டுகளின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இது தவிர, இதில் நியாவின் உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஓட்ஸ் பானம்

ஓட்ஸ் பானம்

ஓட்ஸில் பீட்டா குளுக்கன்கள் உள்ளன. இது குடலில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது மற்றும் பித்ததுடன் தொடர் கொண்டு கொழுப்புக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கிறது. தினமும் 3 கிராம் பீட்டா குளுக்கன்களை உட்கொள்வது 7% கெட்ட கொழுப்புக்களைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஓட்ஸ் பானத்தை காலை உணவுக்கு பின் எடுத்துக் கொள்ளலா. இந்த பானம் தயாரிப்பதற்கு, சிறிது ஓட்ஸை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, மாட்டுப்பால் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து, சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கவும்.

பூசணி ஜூஸ்

பூசணி ஜூஸ்

பூசணி ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனோலிக் கலவைகள் மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இவை இரண்டும கொலஸ்ட்ரால் தேக்கத்தை மற்றும் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும். இந்த ஜூஸை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு பூசணியை வேக வைத்து, அதன் தசைப் பகுதியை அரைத்து, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களில் எவற்றை வேண்டுமானாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் தினமும் தவறாமல் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அதோடு, இந்த ஜூஸை எண்ணெய் உணவுகளை உண்ட பின்னர் குடிப்பது இன்னும் நல்லது. இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் உடலில் தேங்குவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Drinks To Lower Cholesterol In Tamil

Here are some natural drinks to lower cholesterol. Read on...
Story first published: Saturday, February 19, 2022, 12:09 [IST]
Desktop Bottom Promotion