Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இந்தியாவில் புதிதாக பரவும் உயிரைப் பறிக்கும் மர்ம காய்ச்சல் 'ஸ்க்ரப் டைபஸ்' - அதன் அறிகுறிகள் என்ன?
இந்தியாவின் மேற்கு உத்திரபிரதேசம் கொடிய கொரோனா வைரஸ் தவிர, தற்போது மர்மமான வைரஸ் காய்ச்சலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் மேற்கு உத்திரபிரதேசம் கொடிய கொரோனா வைரஸ் தவிர, தற்போது மர்மமான வைரஸ் காய்ச்சலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இது பெரியவர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சல் அம்மாநிலத்தில் பல உயிர்களைப் பறித்துள்ளது மற்றும் அறிக்கைகளின் படி, இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் 'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படுகிறது.

'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படும் இந்த மர்ம காய்ச்சலின் 29 வழக்குகள் மதுராவில் முதல்கட்ட விசாரணையின் போது வெளிப்பட்டன. 2 முதல் 45 வயதிற்குட்பட்ட 29 நோயாளிகளுக்கு சோதனையில் பாசிட்டிவ் வந்ததை அடுத்து, சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பாதிப்பு உத்திர பிரதேசத்தில் மட்டும் இல்லை. அஸ்ஸாமிலும் இந்த பாதிப்பு உள்ளது. இப்போது இந்த 'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படும் மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் பிற விவரங்களைக் காண்போம்.

ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைகளின் படி, இது ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி' பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய். ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம், இது மக்களிடைய பரவுகிறது. இந்த பாக்டீரியா காய்ச்சலுக்கு மற்றொரு பெயர் 'புஷ் டைபஸ்'.

ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள் என்ன?
ஸ்க்ரப் டைபஸின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
* காய்ச்சல்
* தலைவலி
* உடல் வலி
* மூட்டு வலிகள்
* நுரையீரல் அழற்சி
* சிறுநீரக செயலிழப்பு
* சில நேரங்களில் அரிப்பு
தீவிரமான நிலையில், இது நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை மாற்றங்களான குழப்பம் முதல் கோமா வரை, இதய செயலிழப்பு மற்றும் இரத்த சுற்றோட்ட சரிவு போன்றவை ஏற்பட்டு, மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

ஸ்க்ரப் டைபஸுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளதா?
தற்போது, ஸ்க்ரப் டைபஸுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை.

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு எங்கெல்லாம் உள்ளது?
ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் காணலாம்.

ஸ்க்ரப் டைபஸுக்கு என்ன சிகிச்சை உள்ளது?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆய்வின் படி, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பைத் தடுப்பது எப்படி?
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தலை முதல் கால் வரை எல்லா நேரங்களிலும் மூடி இருக்க முயற்சி செய்ய வேண்டும். முக்கியமாக கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் கடிபடுவதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications