Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.. இதன் பயன்பாட்டால் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள்..
தற்போது இளம் வயதினரிடையே போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருட்களை முயற்சிப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் ஆபத்தில் வைக்கின்றனர்.
ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை கடற்கரையில் இருந்த ஒரு பயணிகள் கப்பலில் ரேவ் பார்ட்டி நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து, சோதனை செய்தது. இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்ட 8 பேரில் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார்.

NCB-யின் கூற்றுப்படி, இந்த உயர்மட்ட சோதனையில் 13 கிராம் கோகோயின், 21 கிராம் சரஸ், 22 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மற்றும் 5 கிராம் எம்.டி சிக்கியது. அறிக்கையின் படி, ஆர்யன் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் கொள்முதல், உடைமை மற்றும் பயன்பாடு ஆகியவை அடங்கும்.

அதிகரித்து வரும் போதை பொருட்களின் பயன்பாடு
தற்போது இளம் வயதினரிடையே போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருட்களை முயற்சிப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் ஆபத்தில் வைக்கின்றனர். போதைப்பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் உடலையும், மனதையும் பாதிக்கக்கூடியவை. இதனால் சந்திக்கும் விளைவுகள் நபருக்கு நபர் எடுக்கும் அளவைப் பொறுத்து வேறுபடும். எனவே போதைப்பொருள் பயன்பாடானது குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்பத்தக்கூடும்.

போதைப்பொருள் பயன்பாட்டின் குறுகிய கால விளைவுகள்
ஒரு பொருளை துஷ்பிரயோகம் செய்வது அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்தை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் பின்வருமாறு:
* பசியில் மாற்றங்கள்
* தூக்கமின்மை
* வேகமான இதயத்துடிப்பு
* பேச்சில் மாற்றங்கள்
* ஒருங்கிணைப்பு சிக்கல்கள்

பிற பாதிப்புகள்..
போதைப்பொருள் பயன்பாடு வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் பாதிக்கக்கூடும். அவை:
* போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முடியாமை
* குறைந்த வேலைவாய்ப்பு அல்லது கல்வி செயல்திறன் காரணமாக தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதில் சிரமங்கள்
* தோற்றத்தில் மாற்றங்கள். உதாரணமாக, கடுமையான எடை இழப்பு
* மனக்கிளர்ச்சி மற்றும் ரிஸ்க் எடுக்கும் நடத்தைகள்
* உற்சாகம் இழப்பு

போதைப்பொருள் பயன்பாட்டின் நீண்ட கால விளைவுகள்
மனநல பிரச்சனைகள்
சில போதைப் பொருட்களை நீண்டகாலமாக பயன்படுத்தினால் அது மூளையில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக சித்தப்பிரமை, மன அழுத்தம், மன இறுக்கம், பிரமைகள் மற்றும் பிற கவலைகள் போன்ற மனநல கோளாறுகள் ஏற்படும்.

இதய பிரச்சனைகள்
பெரும்பாலான சட்டவிரோத போதைப்பொருட்கள் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு முதல் மாரடைப்பு வரை பல இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதய நோய் என்பது இதயத்தைப் பாதிக்கும் எந்தவொரு நிலையையும் குறிக்கும். அதுவும் நாள்பட்ட போதைப்பழக்கம் உபயோகிப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.

சுவாச பிரச்சனைகள்
நாள்பட்ட சுவாச நோய்கள் என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகள் மற்றும் பிற கட்டமைப்புக்களைப் பாதிக்கும் நோய்கள் ஆகும். போதைப்பொருள் பழக்கம் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு COPD, ஆஸ்துமா, தொழில் நுரையீரல் கோளாறுகள் மற்றும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடிக்கடி நிகழக்கூடும்.

சிறுநீரக பாதிப்பு
நாள்பட்ட போதைப்பொருள் பழக்கம் நீரிழப்பு, உடல் வெப்பநிலையில் அபாயகரமான அதிகரிப்பு மற்றும் தசைச் சிதைவு ஆகியவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுநீரகங்களில் காயங்கள் அல்லது செயலிழப்பை ஏற்படுத்தும். சிறுநீரக செயலிழப்பு என்று அழைக்கப்படும் இறுதி நிலை சிறுநீரக நோய் (ESRD), நாள்பட்ட சிறுநீரக நோயின் இறுதி கட்டமாகும். சிறுநீரகங்கள் செயலிழக்கும்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல், ஒருவரை வாழ வைக்க முடியாது.

கல்லீரல் பாதிப்பு
ஹெராயின், இன்ஹேலண்ட்ஸ் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற சில போதை மருந்துகளின் நீண்டகால பயன்பாடு கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இந்த மருந்துகள் ஆல்கஹால் அல்லது பிற பொருட்களுடன் கலக்கப்படும் போது, சேதம் இன்னும் கடுமையாக இருக்கும்.

அதிகப்படியான அளவு
ஒருவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான ஒரு போதை மருந்து அல்லது பல போதை மருந்துகளை உட்கொள்ளும் போது, அது ஒருவரது சுயநினைவை இழக்கச் செய்துவிடும்.



Click it and Unblock the Notifications