Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
காபி பிரியரா நீங்கள்? காபி குடிக்கும் போது செய்யும் இத்தவறுகள் ஆயுளை குறைக்கும் தெரியுமா?
நீங்கள் உங்களுக்கு பிடித்த காபியைத் தயாரிப்பதில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் காபி குடிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பலருக்கும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபியைக் குடித்தால் தான் படுக்கையில் இருந்தே எழ முடியும். அந்த அளவில் காபி அவர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக இருக்கும். காபி குடிப்பது குறித்து பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அறிவியலின் படி, காபி குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதே நேரம், அது நமது உடலில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது என்பதையும் மறுக்க முடியாது.

காபியானது மனநிலை, செறிவு நிலை மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் காபியானது ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளையும் வழங்குகின்றன. இதனால் பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு குடிக்கும் காபியை சரியாக காய்ச்சினனால் மட்டுமே, இந்த ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் பெற முடியும்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த காபியைத் தயாரிப்பதில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் காபி குடிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்போது காபி குடிப்பதில் செய்யும் சில தவறுகளைக் காண்போம்.

காபி மூளைக்கு எவ்வளவு பயனுள்ளது?
காபியில் காப்ஃபைன் உள்ளது. இது அடினோசின் ஏற்பிகளுடன் தொடர்பு கொள்வதால், மத்திய நரம்பு மண்டவத்தைப் பாதிக்கிறது. இந்த நரம்பு ஏற்பிகளுடன் காப்ஃபைன் பிணைக்கப்படும் போது, அது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, விழிப்புணர்வுடன் இருக்க வைக்கிறது. அதனால் தான் காபி குடித்ததும், நாம் சற்று சுறுசுறுப்பானது போன்ற உணர்வைப் பெறுகிறோம். ஆய்வுகளானது, காப்ஃபைன் மூளையின் செயல்பாட்டை குறுகிய காலத்தில் அதிகரிப்பதாக கூறுகின்றன. மேலும் இது மனநிலை, கவனம், கற்றல் திறன் மற்றும் பிற மன செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. ஆனால் காபி பிரியர்கள் செய்யும் ஒருசில தவறான விஷயங்களால் இந்த நன்மைகள் குறைக்கப்படுகின்றன. இப்போது அந்த தவறுகள் என்னவென்பதைக் காண்போம்.

அளவுக்கு அதிகமான காபி
காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காபி குடிக்கக்கூடாது. ஒரு நாளில் 2 கப் காபியில் உள்ள 500 ml காப்ஃபைனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதற்கு அதிகமாகும் போது தான் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

அதிக காபியால் சந்திக்கும் பிரச்சனைகள்
ஒருவர் காபியை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது அடிவயிற்று வலி, வலிப்பு, இரத்த அமில அளவு அதிகரிப்பது, வேகமான அல்லது முறையற்ற இதயத் துடிப்பு மற்றும் இதயத்திற்கு குறைவான இரத்த ஓட்டம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இந்த காரணிகள் ஆயுளைக் குறைக்கும். அதோடு, இது அதிகப்படியான மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் எப்போதும் சோர்வுடன் இருப்பதை உணர வைக்கும்.

அதிகமான சர்க்கரை சேர்ப்பது
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் வெற்று கலோரிகள் மற்றும் ஜீரோ ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் காபிக்கு அடிமையாகி, அதிகளவு சர்க்கரையை சேர்த்து குடித்தால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். பொதுவாக சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆற்றல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரையை அளவாக சேர்த்துக் குடிக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். அதோடு பட்டைத் தூளையும் இனிப்பு சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

மதியம் 2 மணிக்கு மேல் காபி குடிப்பது
உலகிலேயே காபி மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். எப்போதெல்லாம் நாம் சோர்வாக அல்லது மந்தமாக உணர்கிறோமோ, அப்போது உடலுக்கு ஆற்றலை வழங்க ஒரு கப் காபி குடிப்போம். ஆனுல் காபியை மதிய உணவு உண்டதும் குடித்தால், அது தூக்கத்தைக் கெடுத்து, இரவு நேரத்தில் வெகுநேரம் விழித்திருக்க வைக்கும். இரவு நேரம் போதுமான தூக்கத்தைப் பெறாவிட்டால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் மற்றும் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே நீங்கள் மதிய உணவிற்கு பின் காபி குடிக்க நினைத்தால், காப்ஃபைன் இல்லாத பானங்களைக் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications