Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆண்கள் பூண்டை இந்த மாதிரி தினமும் சாப்பிட்டால், இருமடங்கு நன்மை கிடைக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க..
ஆண்கள் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு ஆண் விரைவில் சோர்வடைந்தால் அல்லது மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்தால், வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பூண்டு அதிக மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பதை நாம் அனைவருமே அறிவோம். தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக உடல் பலவீனமாக இருப்பவர்கள் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. மேலும் பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் நம்மைக் காக்கும். இது தவிர வழக்கமாக பூண்டு சாப்பிட்டு வந்தால் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

குறிப்பாக ஆண்கள் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு ஆண் விரைவில் சோர்வடைந்தால் அல்லது மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்தால், வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் தினமும் உட்கொண்டு வந்தால், அது பல பெரிய நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். மேலும் உடல் பருமனைக் குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இப்போது வறுத்த பூண்டு பற்களை ஆண்கள் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

உடல் களைப்பைப் போக்கும்
வறுத்த இரண்டு பூண்டு பற்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவது மிகவும் நல்லது. இதனால் உடல் களைப்பு நீங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, நாளுக்கு நாள் உடலும் நன்கு ஃபிட்டாகும்.

போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்
பூண்டுகளில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி6, பாஸ்பரஸ், மாங்கனீசு, ஜிங்க், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இது தவிர இதில் சிறிதளவு புரோட்டின், தையமின் மற்றும் பாந்தோதெனிக் அமிலமும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்துக்களாகும். ஆகவே தான் தினமும் உணவில் பூண்டு சேர்க்க சொல்கிறார்கள்.

சளி, இருமலைத் தடுக்கும்
வறுத்த பூண்டு சளி மற்றும் இருமலில் இருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது. வறுத்த பூண்டில் ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் காய்ச்சலை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பாலியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது
பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் வறுத்த பூண்டு பற்களை தினமும் உட்கொண்டு வருவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. வறுத்த பூண்டில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் திறன் உள்ளது. ஆகவே இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவும் தினமும் உட்கொண்டு வந்தால், ஆற்றலை அதிகரிக்கும்.

நச்சுக்களை நீக்கும்
பூண்டு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. அதுவும் இரவு தூங்கும் முன் வறுத்த பூண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இதனால் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்
பூண்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்தாகும். ஆண்கள் அதிகம் இதய பிரச்சனையால் தற்போது பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தினமும் ஆண்கள் வறுத்த பூண்டு சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு போன்ற பல இதய நோய்களின் அபாயம் குறையும்.



Click it and Unblock the Notifications











