Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இந்த பிரச்சனை இருக்குறவங்க.. வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதாம்.. உஷாரா இருங்க..
என்ன தான் வெண்டைக்காய் ஆரோக்கியமான மற்றும் பல நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடிய காய்கறியாக இருந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடலினுள் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
Ladies Finger Side Effects: வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம் என்று சிறுவயதில் உங்கள் தாத்தா பாட்டி சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதனாலேயே வெண்டைக்காயை அதிகம் சாப்பிடுவோம். அதுமட்டுமின்றி நிறைய பேருக்கு வெண்டைக்காய் ரொம்ப பிடிக்கும். இந்த பச்சை நிற காய்கறிகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகின்றன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் நல்லது. வெண்டைக்காயில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்ச்த்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், காப்பர் போன்ற ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

மருத்துவர்கள் கூட அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்க்க அறிவுறுத்துவதுண்டு. என்ன தான் வெண்டைக்காய் ஆரோக்கியமான மற்றும் பல நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடிய காய்கறியாக இருந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடலினுள் பல பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக ஏற்கனவே ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக ஆரோக்கிய நிலையானது மோசமடைய வாய்ப்புள்ளது. இப்போது யரெல்லாம் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

சிறுநீரக பிரச்சனைகள்
சிறுநீரகம் தொடர்பான நோயைக் கொண்டவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் இருந்தால், வெண்டைக்காயை அதிகம் சாப்பிட அது தீவிரமாக்கிவிடும். எனவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இந்த காயை தங்கள் உணவில் சேர்க்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அசிடிட்டி, வயிற்று உப்புசம்
வெண்டைக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும். வெண்டைக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், அதை அளவாகவே சாப்பிட வேண்டும். குறிப்பாக வாய்வு தொல்லை அல்லது வயிற்று உப்ச பிரச்சனை இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது.

இருமல் மற்றும் சைனஸ்
ஒருவரது செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தாலோ அல்லது இருமல் மற்றும் சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, வெண்டைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வெண்டைக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தின் விளைவாக, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம்
வெண்டைக்காயை சமைக்கும் போது, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மையைப் போக்க, எண்ணெய் சேர்த்து வதக்குவோம். அப்படி வதக்கும் போது, அதிளவு எண்ணெய் பயன்படுத்தினால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே வெண்டைக்காயை சமைப்பதாக இருந்தால், அளவாக எண்ணெய் பயன்படுத்தி வதக்குங்கள்.

வெண்டைக்காயை சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாதவைகள்
வெண்டைக்காய் சாப்பிட்டதும் சில காய்கறிகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது விஷமாகி உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதில் முதலாவதாக வெண்டைக்காய் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாத ஒரு காய் தான் முள்ளங்கி. ஒருவேளை சாப்பிட்டால், அது சருமத்தில் நீக்க முடியாத கருமையான கறைகளை உண்டாக்கிவிடும். அதேப் போல் வெண்டைக்காய் சாப்பிட்ட உடனேயே பாகற்காயை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்றில் விஷத்தை உருவாக்கி, சில சமயங்களில் உயிரைக் கூட பறிக்கக்கூடும். எனவே இந்த இரண்டு காய்கறிகளையும் மறந்தும் கூட வெண்டைக்காய் சாப்பிட்டதும் சாப்பிட்டுவிடாதீர்கள்.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்
* வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதுவும் வெண்டைக்காய் ஊற வைத்த நீரை சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
* வெண்டைக்காய் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதால், இதயத்திற்கு நன்மை அளிக்கும் காய்கறியாக கருதப்படுகிறது.
* வெண்டைக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் இருப்பதால், இது குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
* வெண்டைக்காய் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
* வெண்டைக்காயானது எடையைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications