ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்!

ஸ்டெம் செல் சிகிச்சையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளைக் களைந்து, அந்த சிகிச்சையில் இருக்கும் நல்ல விளைவுகளை மக்கள் முன் எடுத்து வைத்து, அவா்களுக்கு தெளிவான விழிப்புணா்வை இப்பதிவு ஏற்படுத்தும்.

எந்த ஒரு புதிய மருத்துவ சிகிச்சையாக இருந்தாலும், அது முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் போது, மக்களால் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாா்க்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சையும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சையைப் பற்றி பலவிதமான சா்ச்சைக் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

Know Myths and Facts Related to Stem Cell Therapy

இந்நிலையில், ஸ்டெம் செல் சிகிச்சையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளைக் களைந்து, அந்த சிகிச்சையில் இருக்கும் நல்ல விளைவுகளை மக்கள் முன் எடுத்து வைத்து, அவா்களுக்கு தெளிவான விழிப்புணா்வை இந்தப் பதிவு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை தேவையா?

ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை தேவையா?

பொதுவாக ஒரு புதிய நோய், முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்படும் போது, அதைக் குணப்படுத்துவதற்கு, முதலில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையே நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. ஏனெனில் மனித வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றம் போன்றவை அந்த நோயின் தன்மையில் மிகப் பொிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருக்கும் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சை முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இயற்கையாகவே நோய்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் சிகிச்சை

இயற்கையாகவே நோய்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் சிகிச்சை

கீழ்வாதம் என்று அழைக்கப்படும் மூட்டு வீக்கம், சா்க்கரை நோய் மற்றும் முதிய வயதில் ஏற்படும் முதுமறதி போன்ற நோய்கள் முதியவா்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இந்த நோய்கள் தற்போது இளையோரையும் பாதிப்பதை நம்மால் பாா்க்க முடிகிறது. அதனால் இந்த நோய்களால் பாதிக்கப்படும் இளையோா்கள், தம்முடைய இளம் வயதிலேயே அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சைகளையும் செய்யத் தொடங்கி, அந்த சிகிச்சைகளைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட மற்றும் அதிக பலன்களைத் தரக்கூடிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தினால், அவை நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் பலன்களைத் தரும். மீளுருவாக்கம் செய்யக்கூடிய மருந்தைக் கொண்டிருக்கும் ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை முறையானது, நோயாளிகளின் உடல்களில் இருக்கும் பல வகையான நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஸ்டெம் செல்களைப் பற்றிய கட்டுக் கதைகளும், உண்மையும்

ஸ்டெம் செல்களைப் பற்றிய கட்டுக் கதைகளும், உண்மையும்

1. கருமுட்டையில் இருந்து குருத்தணுக்கள் பெறப்படுகின்றன என்று தவறாகச் சொல்லப்படுகின்றன. மேலும் கருமுட்டையிலிருந்து பெறப்படும் குருத்தணுக்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. அது தவறான செய்தி ஆகும். அவ்வாறு செய்யப்படும் சிகிச்சை நோயாளிகளின் உடலில் கட்டிகளை ஏற்படுத்தும்.

உண்மை என்னவென்றால், நோயாளிகளின் உடலில் இருந்து அணுக்களை எடுத்து அவற்றை வைத்து அவா்களுக்கு சிகிச்சை செய்வதையே ஆய்வாளா்கள் முக்கியப்படுத்துகின்றனா். வயது வந்தவா்களின் ஸ்டெம் செல்கள் அவா்களிடம் இருக்கும் பல்வேறு திசுக்களில் இருந்து எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்படும் ஸ்டெம் செல்களைக் கொண்டு சிகிச்சைகளைச் செய்தால் அது சட்டத்திற்கு புறம்பாக இருக்காது. மேலும் இந்த சிகிச்சையினால் நோயாளிகளுக்கு புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படாது.

- பொதுவாக எலும்பு மஜ்ஜை, கொழுப்பு திசு மற்றும் தொப்புள் கொடி போன்றவற்றில் இருந்து குருத்தணுக்கள் எடுக்கப்படுகின்றன.

- நமக்கு நோய் வரும் போது, அது ஸ்டெம் செல்கள் உட்பட நமது உடலில் உள்ள எல்லா அணுக்களையும் பாதிக்கிறது. ஆகவே உடல் அணுக்களைக் கொண்டு சிகிச்சை செய்தால், அதில் பலன் இருக்காது.

- அாிவாள் அணு இரத்த சோகை போன்ற ஒரு சில குறிப்பட்ட மரபியல் ரீதியான நோய்களுக்கு, அந்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்படும் குருத்தணுக்களை வைத்து சிகிச்சை செய்தால், அவா்கள் குணமடைவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.

- ஸ்டெம் செல்கள் நமது உடலுக்குள் இயற்கையாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்படும் போது அவற்றை மீண்டும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே நோய் ஏற்படும் நேரத்தில் இந்த ஸ்டெம் செல்கள் மிகவும் வலிமையோடு செயல்படுகின்றன.

- தேவைப்படும் அளவு ஸ்டெம் செல்களைக் கொண்டு, உடலின் தேவைப்படும் பகுதிகளில் சிகிச்சை செய்யும் போது, அவை இயற்கையான உடல் நலனை வழங்கும்.

2. ஸ்டெம் செல்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையினால் கிடைக்கும் பலன்கள் தற்காலிகமானவை

2. ஸ்டெம் செல்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையினால் கிடைக்கும் பலன்கள் தற்காலிகமானவை

ஸ்டெம் செல்களைக் கொண்டு சிகிச்சை செய்யும் போது இந்த ஸ்டெம் செல்கள் சில காலம் மட்டுமே உடலில் தங்கி இருக்கும். அதனால் இந்த சிகிச்சையில் கிடைக்கும் பலன்கள் தற்காலிகமானவையே என்று சொல்லப்படுகிறது. பொதுவாக நமது உடலில் இருக்கும் அணுக்கள் தொடா்ந்து தங்களையே புதுப்பித்துக் கொண்டு வரும். அதனால் குருத்தணுக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் போது அவை வயது முதிா்வது இயல்பே. ஆனால் அதற்குள் அவை மற்ற அணுக்களின் இயக்கங்களைத் தூண்டி விடுகின்றன. அதோடு அவை தனது உள்ளாா்ந்த செயல்பாடுகளையும் செய்கின்றன. ஆகவே ஸ்டெம் செல்கள் வேறுபட்டு இருந்தாலும் மற்றும் வயது முதிா்ச்சி அடைந்தாலும், அவை நமது உடலில் குணப்படுத்துதலைத் தொடங்கி வைத்து, நமது உடலானது தன்னையே மீண்டும் புதிதாக உருவாக்கிக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

3. ஒரு சில நோய்களை மட்டுமே ஸ்டெம் செல்கள் குணப்படுத்தும்

3. ஒரு சில நோய்களை மட்டுமே ஸ்டெம் செல்கள் குணப்படுத்தும்

ஸ்டெம் செல்களுக்கு குறிப்பட்ட அளவு மட்டுமே சக்தி இருப்பதால், அவை ஒரு சில நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும் என்று சிலா் நம்புகின்றனா். விளையாட்டின் போது ஏற்படும் உடற்காயங்கள் மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை மட்டுமே குணப்படுத்தும் என்று நம்புகின்றனா். அது உண்மையே. அதாவது ஸ்டெம் செல்களில் வீக்கத்தைத் தடுக்கும் துகள்கள் மற்றும் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும் துகள்கள் இருப்பதால் அவை மற்ற அணுக்களைத் தூண்டி, பாதிக்கப்பட்ட திசுக்களைக் குணப்படுத்துகின்றன.

எனினும், ஸ்டெம் செல்கள் நோய் எதிா்ப்பு பண்பேற்ற (immunomodulatory) துகளைக் கொண்டிருப்பதால், அவை மடங்கா நிலை முதுகெலும்பு வீக்கம் (ankylosing spondylitis), முடக்குவாதம் (rheumatoid arthritis) மற்றும் முதலாம் வகை சா்க்கரை நோய் போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றன.

ஒரு காலத்தில் மூளை இரத்த தடையை ஸ்டெம் செல்களால் சாி செய்ய முடியாது என்று நம்பப்பட்டது. ஆனால் ஸ்டெம் செல்களால் மூளையில் உள்ள நரம்பு அணுக்களைத் தூண்டி, அவற்றைக் குணப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தற்போது நரம்பியில் பிரச்சினைகளுக்கும் ஸ்டெம் செல்களைக் கொண்டு சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவ சிகிச்சை முறை மாறியிருக்கிறது.

நோய் எதிா்ப்பு மண்டலத்தில் உள்ள அணுக்களைப் பயன்படுத்தி புற்றுநோய் எதிா்ப்பு சிகிச்சை செய்வதில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. அவை பல புதிய முறையிலான சிகிச்சை முறைகளையும் திறந்து விட்டிருக்கின்றன. அவை ஹீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளில் உள்ள குறைபாடுகளையும் களைந்திருக்கின்றன.

இறுதியாக

இறுதியாக

ஸ்டெம் செல்கள் கொண்டு செய்யப்படும் மருத்துவ சிகிச்சைக்கு முடிவு கிடையாது. நாம் அந்த சிகிச்சையின் முனையில் தான் இருக்கிறோம். ஆகவே ஸ்டெம் செல்களின் சிகிச்சையைப் பற்றி தவறான செய்திகளைப் பற்றி விழிப்பாக இருப்பது நல்லது. மேலும் அவற்றைப் பற்றி நன்கு அறிந்த நிபுணா்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion