Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
மது அருந்திய பின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியுமா?
அதிகப்படியான மதுவை அருந்தினால், அதனால் உருவாகும் கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகங்கள் இயற்கையாகவே சற்று அதிகமாக வேலை செய்ய நேரிட்டு, அதனால் வலியை உண்டாக்குகின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், மது போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தாக்குதலைத் தவிர்க்கவும் சிறுநீரகங்கள் மிகவும் அவசியமாகும். இவை உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டி, சிறுநீரின் வழியே வெளியேற்றுகின்றன. சிறுநீரகங்கள் உடலின் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிக்கின்றன.

ஆனால் அதிகப்படியான மதுவை அருந்தினால், அதனால் உருவாகும் கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகங்கள் இயற்கையாகவே சற்று அதிகமாக வேலை செய்ய நேரிட்டு, அதனால் வலியை உண்டாக்குகின்றன. மேலும் மது அருந்திய பின் அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டாலும், உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறி, உடல் வறட்சி அடைந்துவிடுகிறது.
இதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் மட்டுமின்றி, மற்ற உறுப்புக்களின் செயல்பாடுகளிலும் இடையூறு ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக சிறுநீரகங்கள், கீழ் முதுகு போன்ற பகுதிகளில் வலியை சந்திக்க நேரிடுகிறது.

அறிகுறிகள்
மது அருந்திய பின் சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது போன்ற உணர்வு எழும். இதனால் அடிவயிற்றின் பின்புறம், உங்கள் முதுகெலும்பின் இருபுறமும் உங்கள் விலா எலும்புக் கூண்டின் கீழ் இருக்கும் பகுதிகளில் வலி ஏற்படும். இந்த வலியானது திடீரென்று மிகவும் கூர்மையாக, விட்டுவிட்டு அல்லது லேசான வலியுடன் இருக்கும்.
பொதுவாக சிறுநீரக வலி மேல் அல்லது கீழ் முதுகில் அல்லது பிட்டம் மற்றும் கீழ் விலா எலும்புகளுக்கு இடையில் உணரப்படலாம். இந்த வலி மது அருந்திய உடனேயே அல்லது மது அருந்தி முடித்த பிறகு கூட ஏற்படலாம். சிலசமயங்களில் இரவு நேரங்களில் வலி மிகவும் தீவிரமாக இருக்கும்.

இதர அறிகுறிகள்
* வாந்தி
* குமட்டல்
* சிறுநீர் கழிக்கும் போது வலி
* சிறுநீரில் இரத்தம்
* பசியின்மை
* தூங்குவதில் சிரமம்
* தலைவலி
* சோர்வு
* காய்ச்சல்
* குளிர்

மது அருந்திய பின் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
சிறுநீரகங்களில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே சிறுநீரகங்களில் வலியை உணர்ந்தால், அது எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இது தீவிரமான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இப்போது எந்த காரணங்களுக்காக சிறுநீரகங்களில் வலி ஏற்படலாம் என்பது குறித்து காண்போம்.

கல்லீரல் நோய்
கல்லீரல் நோய்கள் இருந்தால் கூட, மது அருந்திய பின் வலி அல்லது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கலாம். குடிப்பழக்கம் காரணமாக கல்லீரல் பலவீனமடைந்துவிட்டால், இம்மாதிரி ஏற்படலாம். கல்லீரல் நோயால் சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் இரத்தம் முழுமையாக வடிகட்டப்படாமல் போகும்.
கல்லீரல் நோய்களை சரிசெய்வதற்கு, மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும், எடையைக் குறைக்கவும் மற்றும் ஊட்டச்சத்துள்ள டயட்டை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துவார். சில சமயங்களில் இந்நிலைக்கு மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஒருவேளை கல்லீரல் செயலிழந்துவிட்டால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.

சிறுநீரக கற்கள்
மதுப்பழக்கத்தினால் ஏற்படும் உடல் வறட்சியின் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகலாம். அதிலும் ஏற்கனவே சிறுநீரக கற்கள் இருந்து, மது அருந்தினால், அது சிறுநீரகங்களில் வேகமாக நகர்த்தப்படும். இதன் விளைவாக கடுமையான சிறுநீரக வலியை சந்திக்கக்கூடும்.
ஒருவேளை சிறுநீரக கற்கள் சிறியதாக இருப்பின், அதிகளவு நீரைப் பருகி, முறையாக மருந்துகளை எடுத்து அல்லது சில இயற்கை வைத்தியங்களின் மூலம் சரிசெய்துவிடலாம்.

சிறுநீரக தொற்று
சிறுநீரக தொற்று என்பது ஒரு வகையான சிறுநீர் பாதை தொற்றாகும். இது சிறுநீர் வடிகுழாய் அல்லது சிறுநீர்ப்பையில் தொடங்கி, மெதுவாக சிறுநீரகங்களை சென்றடையும். ஏற்கனவே சிறுநீரக தொற்று இருப்பவர்கள் மது அருந்தினால், சிறுநீரகங்களில் தீவிர வலியை உணர்வதோடு, நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.
அதிகளவு நீரைப் பருகி, மருத்துவரை உடனே அணுக வேண்டும். இதனால் அவர் பரிந்துரைக்கும் ஆன்டி-பயாடிக் மருந்துகளின் உதவியுடன், சிறுநீரக தொற்றுக்களின் தீவிரத்தைக் குறைக்லாம். ஒருவேளை சிறுநீரக தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

உடல் வறட்சி
ஆல்கஹாலில் நீர்பெருக்கி பண்புகள் உள்ளதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதுவும் அதிகமாக மது அருந்தினால், உடல் வறட்சி அடையக்கூடும். ஆல்கஹால் சிறுநீரகங்களின் திறனைப் பாதித்து, அதை பலவீனமடையச் செய்து, சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். நாள்பட்ட உடல் வறட்சி, மிகவும் மோசமான அபாயத்திற்கு தள்ளக்கூடும்.
எனவே உடல் வறட்சியைத் தடுக்க அதிகளவு நீரைப் பருகுவதோடு, எலட்ரோலைட்டுக்களையும் எடுக்க வேண்டும். சர்க்கரை கலந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் உடல் வறட்சி தீவிரமானால், உடனே மருத்துவரை அணுக வேண்டியிருக்கும்.

யூரிடெரோபெல்விக் சந்தி அடைப்பு (UPJ)
சிறுநீரகத்தின் ஒரு பகுதி தடுக்கப்படும் போது யூரிடெரோபெல்விக் சந்தி (யுபிஜே) அடைப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் இது சிறுநீரக இடுப்பில் தடுக்கப்படுகிறது. ஒருவருக்கு இப்பிரச்சனை இருப்பின், மது அருந்திய பின் சிறுநீரக வலியை சந்திக்கக்கூடும். இந்த நிலையினால் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாடுகள் தடைசெய்யப்படும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் வலியானது கீழ் முதுகு அல்லது அடிவயிற்றின் பக்கவாட்டு பகுதியில் தான் ஏற்படும்.

சிறுநீரக நீர்க்கோர்வை (Hydronephrosis)
சிறுநீரக நீர்க்கோர்வை என்பது ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும் சிறுநீர் தேக்கத்தால் வீங்கி இருக்கும் நிலையாகும். இது சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் பைக்கு செல்லும் வடிகுழாயில் உள்ள அடைப்பினால் ஏற்படுவதாகும். இப்பிரச்சனை இருப்பின், இடுப்பு பகுதி சற்று வீங்கி காணப்படும். இதனால் இடுப்பு பகுதியில் வலியை அனுபவிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது சிரமத்தை அல்லது வலியை உணரக்கூடும். பெரும்பாலும் சிறுநீரக கற்கள் தான் இப்பிரச்சனைக்கான அபாயத்தை அதிகரிக்கும்.

இரைப்பை அழற்சி
அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், இரைப்பை சுவற்றில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்பட்டு, இரைப்பை அழற்சியை உண்டாக்கும். இது சிறுநீரகங்களுடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படாவிட்டாலும், அடிவயிற்றின் மேல் பகுதியில் வலியை உணரலாம் மற்றும் சிறுநீரக வலியுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இரைப்பை அழற்சியை சரியான மருந்துகளின் உதவியுடனும், மதுப்பழக்கத்தை கைவிடுவதனாலும் சரிசெய்யலாம்.



Click it and Unblock the Notifications