உடம்பு நல்லா ஃபிட்டா இருக்கணுமா? அப்போ இந்த ஜப்பானிய நீர் சிகிச்சையை ஃபாலோ பண்ணுங்க...

ஜப்பானியர்கள் எழுந்தவுடன் தேடுவது தண்ணீர் டம்ளரைத் தான். அதற்கு அப்புறம் தான் அவர்கள் பல் துலக்கவே செய்வார்களாம். அவர்கள் வெறும் வயிற்றில் சுமார் 4-5 டம்ளர் சாதாரண நீரை குடிக்கிறார்கள்.

நாம் உயிர் வாழ்வதற்கு நீர், காற்று ஆகியவை மிக முக்கியமான ஒன்று. மனிதன் சுவாசிக்க ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு நீரும் மிக முக்கியமான ஒன்றாகும். எப்படி மனிதனால் ஆக்ஸிஜன் இல்லாமல் சில நொடிகள் தாக்குப்பிடிக்க முடியாதோ, அதேப்போல நீர் இல்லாமலும் அவனால் வாழ இயலாது. இந்த உண்மை எல்லாரும் அறிந்த ஒன்றே.

Japanese Water Therapy: Know The Pros and Cons Of This Popular Japanese Practice

ஏனெனில் மனித உடல் 70 % நீரால் ஆனது. நீர் தான் நமது உடலில் பல இன்றியமையாத பணிகளை செய்கிறது. இதை நன்கு உணர்ந்தவர்கள் ஜப்பானியர்கள். அதனால் தான் அவர்களுக்கு எவ்வளவு வயசானாலும் அவர்களின் தோலுக்கு வயசாவதில்லை. எப்பொழுதும் ஒளிரும் மென்மையான சருமத்தை பெற்று இருக்கிறார்கள். இப்படி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு பின்னால் ஒரே ஒரு பொருள் மட்டும் தான் இருக்கிறது அது தான் தண்ணீர்.

அவர்கள் எழுந்ததும் காபி டீயெல்லாம் குடிக்க மாட்டார்கள். 2-3 டம்ளர் தண்ணீர் தான் குடிப்பார்களாம். அதுவும் சாதாரண தண்ணீர். குளிர்ந்த தண்ணீரை அவர்கள் குடிப்பது கிடையாது. குளிர்ந்த நீர் உடம்பில் கொழுப்பு படியவும், ஜீரண சக்தியை மந்தப்படுத்தவும் செய்து விடுமாம். எப்படி நீரைக் கொண்டு சிகிச்சை செய்கிறார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பானிய நீர் சிகிச்சை

ஜப்பானிய நீர் சிகிச்சை

ஜப்பானியர்கள் எழுந்தவுடன் தேடுவது தண்ணீர் டம்ளரைத் தான். அதற்கு அப்புறம் தான் அவர்கள் பல் துலக்கவே செய்வார்களாம். அவர்கள் வெறும் வயிற்றில் சுமார் 4-5 டம்ளர் சாதாரண நீரை குடிக்கிறார்கள். இதற்கு அப்புறம் 45 நிமிடங்கள் கழித்தே தங்கள் காலை உணவை எடுத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் 15 நிமிடங்கள் மட்டுமே சாப்பிடுவார்களாம். தண்ணீர் குடிப்பதற்கும், வேறு எதையும் சாப்பிடுவதற்கும் இடையே 2 மணிநேர இடைவெளி விடுகிறார்கள்.

இந்த நீர் சிகிச்சை பற்றி ஜப்பானிய மருத்துவர்கள் நிறைய தகவல்களை தந்துள்ளனர். இந்த நீர் சிகிச்சையை வெவ்வேறு நாட்கள் தொடர்ந்து செய்யும் போது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உடல் நல பிரச்சினைகள் சரியாகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

10 நாட்களுக்கு இப்படி தொடர்ந்து நீர் குடிக்கும் போது உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும்.

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் 30 நாட்களுக்கு தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்து வாருங்கள்.

டைப் 2 டயாபெட்டீஸ் உடையவர்கள் 30 நாட்கள் தொடர்ந்து இந்த நீர் சிகிச்சையை செய்து பலன் பெறலாம்.

இப்படி அதிகப்படியான நீர் குடிக்கும் ஜப்பானிய நீர் சிகிச்சை மலச்சிக்கல், இரத்த அழுத்தத்தை மட்டும் குணப்படுத்துவதில்லை புற்றுநோய், டைப் 2 டயாபெட்டீஸ்க்கும் மருந்தாக பயன்படுகின்றன. இது மட்டுமல்லாமல் தண்ணீர் நிறையா குடிப்பது உங்கள் உடலுக்கு இன்னும் ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது.

ஜப்பானிய நீர் தெரபியின் பயன்கள்:

ஜப்பானிய நீர் தெரபியின் பயன்கள்:

உடல் எடை இழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாடு

இந்த ஜப்பானிய நீர் சிகிச்சையை நீங்கள் மேற்கொண்டால் உங்களால் எடையை எளிதாக குறைக்க முடியும். உங்கள் கலோரிகளை குறைக்க இது உதவி செய்கிறது. பல டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது உங்கள் உடம்பும் போதுமான நீர்ச்சத்து டன் இருக்கும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், நிலையான ஆற்றலை வழங்குதல், உடல் வெப்ப நிலை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை தருகிறது.

மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்சியைப் போக்கும்

மலச்சிக்கல் மற்றும் குடல் அழற்சியைப் போக்கும்

நீங்கள் அதிகப்படியாக தண்ணீர் குடிக்கும் போது மலச்சிக்கல், தலைவலி மற்றும் சிறுநீரக கற்களை போக்கும். நிறைய பேர் தண்ணீருக்கு பதிலாக நிறைய பானங்கள், ஜூஸ்களை அருந்துகிறோம். ஆனால் வெறும் தண்ணீர் மட்டும் தான் உங்களுக்கு முழுமையான நன்மைகளை தர முடியும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். மேலும் அந்த மாதிரியான பானங்களில் அதிகப்படியான சர்க்கரையும் உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. உங்க உடம்பு சூடாக இருந்தால் தயவு செய்து ஜூஸ் எதுவும் குடிக்காமல் தண்ணீரை அருந்துங்கள்.

கலோரிகள் எடுப்பதை குறைக்கிறது

கலோரிகள் எடுப்பதை குறைக்கிறது

நீங்கள் சோடா பானங்கள், பழ ஜூஸ், செயற்கை பானங்கள் இவற்றிற்கு பதிலாக தண்ணீரை எடுக்கும் போது உங்க கலோரி அளவு தானாக குறைந்துவிடும். இதன் மூலம் தினமும் சில நூறு கலோரிகளை குறைக்க முடியும். மேலும் 15 நிமிடங்கள் சாப்பாடு எடுத்த பிறகு அடுத்த 2 மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. இதனால் அதிகப்படியான கலோரிகளை நாம் எடுத்துக் கொள்ள மாட்டாம். மேலும் வயிறு நிறைய தண்ணீர் அருந்தும் போது உணவும் கொஞ்சமாக செல்லும். இதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ஜப்பானிய நீர் சிகிச்சையில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் ஒருசில பக்க விளைவுகளும் உள்ளன.

* ஜப்பானிய நீர் தெரபி ஹைபோநெட்ரீமியா ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது கலோரிகளை கட்டுப்படுத்த முடியும். இதுவே சிகிச்சையை கைவிடும் போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* குறைந்த நேரத்தில் அதிகளவு தண்ணீர் எடுக்கும் போது உடம்பில் குறைந்த உப்பு காரணமாக நீரிழப்பு அல்லது நீர் போதை ஏற்படலாம். ஹைபோநெட்ரீமியா அபாயத்தில் இருப்பவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள், விளையாட்டு வீரர்களுக்கு போதை மருந்து சோதனைகள் போன்றவை ஏற்படலாம்.

* இந்த ஜப்பானிய நீர் தெரபியின் மற்றொரு எதிர்மறை அம்சம், 15 நிமிடங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற உணவு கட்டுப்பாடுகள் இருக்கிறது.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

ஒரு மணிநேரத்திற்கு 4 டம்ளர் தண்ணீருக்கு (1 லிட்டர்) அதிகமாக குடிக்காதீர்கள். இந்த அளவு தான் நமது சிறுநீரகம் தாக்குப் பிடிப்பதற்கான அளவு. அப்பொழுது தான் அது ஆரோக்கியமாக செயல்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion