For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

பல நோய்களுக்கு இயற்கை சிகிச்சைகள் இருந்தும் அதை நாம் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக வலிப்பு நோய். இதை காக்கா வலிப்பு அல்லது எபிலப்ஸி என்று கூறுவார்கள்.

|

நாம் என்ன தான் மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் இயற்கை சிகிச்சை தான் சிறந்தது. ஏனெனில் இயற்கை சிகிச்சையில் பக்கவிளைவுகள் குறைவு. ஆனால் பல நோய்களுக்கு இயற்கை சிகிச்சைகள் இருந்தும் அதை நாம் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக வலிப்பு நோய். இதை காக்கா வலிப்பு அல்லது எபிலப்ஸி என்று கூறுவார்கள். மூளையில் ஏற்படும் சிக்னல் பிரச்சனையால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

Is Natural Treatment Of Epilepsy Possible?

இந்த நோயால் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நீங்கள் நீண்ட காலம் மருந்துகள் எடுக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த மருந்துகளே காலப்போக்கில் உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் இயற்கை சிகிச்சைக்கு மாறுவது நல்லது. இயற்கை சிகிச்சையில் ஊட்டச்சத்து உணவுகள், மூலிகைகள் இவற்றை கொண்டு சிகிச்சைகள் அளிக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். சரி இந்த வலிப்பு நோய்க்கான இயற்கை சிகிச்சைகளைப் பற்றி இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்குபஞ்சர் முறை

அக்குபஞ்சர் முறை

இந்த முறை பண்டைய சீனர்களின் பாரம்பரிய முறையாகும். இந்த முறையின் மூலம் நிறைய நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள் சீனர்கள். இதில் சிறிய ஊசிகளைக் கொண்டு உடம்பின் முக்கியமான பகுதிகளில் குத்தி லேசான வலி தூண்டலை ஏற்படுத்துகிறார்கள். இந்த தூண்டல் மூளையில் செயல்பட்டு காலப்போக்கில் வலிப்பு குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். தூண்டலால் மூளைக்கு சிக்னல் தடையின்றி போகும். பாராசிம்பதிடிக் வழியை பயன்படுத்தி வலிப்பு வருவதை தடுக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலிகை சிகிச்சைகள்

மூலிகை சிகிச்சைகள்

மூலிகை வைத்தியம் தற்போது புகழ் பெற்று வரும் சிகிச்சைகளில் ஒன்று. அப்படி வலிப்பு நோய்க்கு பயன்படும் மூலிகைகளாவன:

* லில்லி

* புல்லுருவி

* வலேரி வேர்

* சொர்க்க மரம்

* மாசிபத்திரி

* புதர் தீ மலர்கள்

* பியோனி மலர்கள்

* வல்லாரை

* ஸ்கல் கேப்

* க்ரவுண்ட் செல் பூக்கள் இவைகள் வலிப்பு நோய்க்கு பயன்படுத்துகின்றனர்.

தவிர்க்க வேண்டிய மூலிகைகள்

தவிர்க்க வேண்டிய மூலிகைகள்

* ஜின்கோ தாவரம்

* வேட்டை பாக்கு

* குவாரானா

* புரீஷம்வள்ளி

* பெர்ரி

* சீமைச்சாமந்தி

இவைகளை வலிப்பு நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

வலிப்பு நோய் ஏற்படுவதை குறைக்க சில வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் பயன்படுகின்றனர். எனவே உணவில் அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

குழந்தை கருவில் இருக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்த பின்னோ பெண்களுக்கு ஏற்படும் வலிப்பை போக்க வைட்டமின் பி6 பயன்படுகிறது. இந்த நிலையே பைரிடாக்ஸின் குறைபாடு. அதாவது இது வைட்டமின் பி6 குறைப்பாட்டால் ஏற்படுகிறது. எனவே இதற்கு மருத்துவர்கள் வைட்டமின் பி6 மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்ப காலத்தில் வலிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ பற்றாக்குறையும் வலிப்பு நோய் ஏற்பட காரணமாகிறது. எனவே நீங்கள் வைட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை மேம்படுத்துகிறது. எனவே வலிப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

சுய கட்டுப்பாட்டு பயிற்சி

சுய கட்டுப்பாட்டு பயிற்சி

மூளை செயல்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வலிப்புத் தாக்கங்களை குறைக்க முடியும். அதற்கு சில சுய கட்டுப்பாடு பயிற்சிகளை செய்ய வேண்டும். வலிப்பு வருவதற்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் சோர்வு, பதட்டம் மற்றும் மங்கலான பார்வைகளைப் பெறுவார்கள். எனவே அந்த மாதிரியான நேரங்களில் வலிப்பை தவிர்க்க,

* நடைபயிற்சி

* தியானம்

* உடலையும் மனதையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துதல் போன்ற வேலைகளை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Natural Treatment Of Epilepsy Possible?

It is possible to prevent the frequency of seizures in epilepsy with the help of natural treatments. This article explains everything in detail.
Desktop Bottom Promotion