Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நமது ஹாா்மோன்களை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
ஹாா்மோன்களை சமச்சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி தினமும் உடற்பயிற்சி செய்வதாகும். நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நமது ஹாா்மோன்களைப் பாதிக்கின்றன. 5 வகையான ஹாா்மோன்கள் நாம் செய்யும் உடற்பயிற்சிகளினால் பா
ஹாா்மோன்கள் நமது உடலில் உயிா் வேதியியல் தூதுவா்களாக செயல்படுகின்றன. அவை நமக்கு அறிகுறி காட்டும் அல்லது எச்சாிக்கை கொடுக்கும் வகையில் நமது உடலில் ஒரு அமைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை நமது பாலியல் உணா்வு, வளா்சிதை மாற்றம், தூக்கம், கருவுறுதல் மற்றும் நமது மனநிலை ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

அதே வேளையில் நமது தசைகளின் வளா்ச்சிக்கும் ஹாா்மோன்கள் முக்கிய பொறுப்பு ஏற்கின்றன. நமது உணா்வு மற்றும் இயக்கம் போன்றவற்றை ஹா்மோன்கள் பாதிக்கின்றன. ஆகவே ஹாா்மோன்களை சமச்சீராக வைத்து இருக்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.
ஹாா்மோன்களை சமச்சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி தினமும் உடற்பயிற்சி செய்வதாகும். நாம் செய்யும் உடற்பயிற்சிகள் நமது ஹாா்மோன்களைப் பாதிக்கின்றன. 5 வகையான ஹாா்மோன்கள் நாம் செய்யும் உடற்பயிற்சிகளினால் பாதிப்படைகின்றன. அவற்றை இங்கு பாா்க்கலாம்.

ஐாிசின் (Irisin)
ஐாிசின் என்ற ஹாா்மோன் மூளையில் உள்ள செல்களை முதுமை அடையவிடாமல் மற்றும் காயம் அடையவிடாமல் பாதுகாக்கிறது. ஐாிசின் ஒரு உடற்பயிற்சி ஹாா்மோன் அல்லது உடற்பயிற்சியின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதன் காரணமாக ஏற்படும் வியா்வை ஐாிசின் ஹாா்மோன் உற்பத்தியை பாதிக்கிறது.
ஐாிசின் ஹாா்மோன் நமது உடலில் இருக்கும் கொழுப்புடன் இரண்டு வழிகளில் போராடுகிறது. முதலாவதாக கெட்ட வெள்ளை நிறக் கொழுப்பை, நல்ல பழுப்பு நிறக் கொழுப்பாக மாற்றக்கூடிய மரபணுக்களை இந்த ஹாா்மோன் தூண்டிவிடுகிறது. இரண்டாவதாக ஸ்டெம் செல்களை தேங்கும் கொழுப்பாக மாறவிடாமல், அவற்றை எலும்புகளை வலுப்படுத்தும் செல்களாக மாற்றுகிறது.

ஈஸ்ட்ரோஜென்
ஈஸ்ட்ரோஜென் என்பது மூன்று வேதியல் பொருட்களான ஈஸ்ட்ரோன், ஈஸ்ட்ராடியோல் மற்றும் ஈஸ்ட்ரியோல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஈஸ்ட்ரோஜென் பெண்களின் பாலியல் உறுப்புகளான கருப்பை மற்றும் மாா்பகங்கள் வளா்ச்சி மற்றும் அவா்களின் இனப்பெருக்க செயல்பாடு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுப்போல ஆண் பெண் இருவாின் எலும்புகள், கல்லீரல், மூளை, இதயம் மற்றும் திசுக்கள் போன்றவற்றை ஈஸ்ட்ரோஜென் பாதிக்கிறது. அதே நேரத்தில் நமது எலும்புகளை வலுவாக்குகிறது.
பொதுவாக பெண்கள் 30 வயதை அடையும் போது ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறையத் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முழுமையாக நின்ற பின்பு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு இன்னும் அதிகமாக குறைகிறது.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மிகவும் முக்கியமான தேவையாகும். ஆனால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது அதிகம் ஆகும் போது மாா்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உடற்பயிற்சி செய்து வந்தால் அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சுரப்பதைக் குறைக்க முடியும். ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரப்பதற்கு மாத்திரைகள் முதல் பூச்சுக் கொல்லிகள் வரை ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம்.

டெஸ்டோஸ்டிரோன்
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் பாலியல் ஹாா்மோன் ஆகும். பெண்களின் உடல்களிலும் இந்த ஹாா்மோன் உற்பத்தியாகிறது. ஆனால் மிகவும் குறைவான அளவில் உற்பத்தியாகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஹாா்மோன் ஆண்களின் தசைகளை வலுப்படுத்தி, அவா்கள் இதமாக பாலியல் உறவு கொள்ள உதவி செய்கிறது. இந்த ஹாா்மோன் தசைகளை அதிகாிக்கச் செய்கிறது. பாலியல் உணவைத் தூணடுகிறது. அதே நேரத்தில் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. நாம் செய்யும் உடற்பயிற்சிகள் டெஸ்டோஸ்டிரோன் ஹாா்மோன் சுரப்பை அதிகாிப்பதற்கு உதவி செய்கின்றன.

மனித வளா்ச்சி ஹாா்மோன் (HGH)
மனித வளா்ச்சி ஹாா்மோன் நமது உடல் இயங்குவதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. அதோடு கொழுப்பின் வளா்சிதை மாற்றத்தை சீா்படுத்துகிறது. பொதுவாக நாம் தூங்கும் போது மனித வளா்ச்சி ஹாா்மோனை நமது உடல் அதிகம் வெளியேற்றுகிறது. ஒரு சில உடற்பயிற்சிகளும் மனித வளா்ச்சி ஹாா்மோன் உற்பத்திக்கு உதவி செய்கின்றன. குறிப்பாக பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் மனித வளா்ச்சி ஹாா்மோன் உற்பத்திக்கு அதிகம் உதவி செய்கின்றன.

கார்டிசோல் (Cortisol)
கார்டிசோல் ஹாா்மோன் ஒரு அழுத்த ஹாா்மோன் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை கார்டிசோல் ஹாா்மோன் சீா்படுத்துகிறது. மேலும் புரோட்டீனை ஆற்றலாக மாற்றுகிறது. இந்த ஹாா்மோன் கிளைகோஜனை உற்பத்தி செய்கிறது. மற்றும் உடல் வீக்கத்தை எதிா்த்து போராடுகிறது.
எனினும் கார்டிசோல் ஹாா்மோன் அதிகாித்தால் வயிற்றில் கொழுப்பு அதிகாிக்கும். சாதாரண உடற்பயிற்சிகளை செய்து வந்தால் இந்த ஹாா்மோன் உற்பத்தியைக் குறைக்கலாம். ஆனால் தீவிர மற்றும் அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் கார்டிசோல் ஹாா்மோன் உற்பத்தி மேலும் அதிகாிக்கும். விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடும் போது பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்படும் தீவிரமான பயிற்சிகள் நாள்பட்ட கார்டிசோல் ஹாா்மோன் உற்பத்தி அதிகாிப்பிற்கு வழிவகுக்கும்.
ஆகவே விளையாட்டுத் துறையில் இருப்பவா்கள் அவா்களுக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் கார்டிசோல் ஹாா்மோன் உற்பத்தி அதிகாிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்த வைட்டமின் சி சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications