Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மழைக்காலத்தில் கொரோனாவுடன் இந்த நோய்த்தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...
ஏற்கனவே கோவிட்-19 சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும் இந்த வேளையில் டெங்கு வந்தால், அது ஒருவர் நோயில் இருந்து குணமாவதை இன்னும் கடினமாக்கிவிடும்.
கடுமையான பருவமழை இந்தியாவின் பல பகுதிகளில் ஆரம்பித்துள்ளது. இது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிப்பதாக இருந்தாலும், மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு நோய்களின் தாக்கம் இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது.

ஏற்கனவே கோவிட்-19 சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும் இந்த வேளையில் டெங்கு வந்தால், அது ஒருவர் நோயில் இருந்து குணமாவதை இன்னும் கடினமாக்கிவிடும்.

இணை நோய்த்தொற்று
இணை நோய்த்தொற்று என்பது ஒருவருக்கு ஒன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவது ஆகும். அதாவது, ஒருவரின் ஆரோக்கியமான செல்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வைரஸ்களால் தாக்கப்படுவது.
ஒரே நேரத்தில் ஒருவருக்கு இரண்டு நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அது அந்நபருக்கு சிகிச்சை அளிக்க மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் இரண்டு கொடிய நோய்கள் தாக்கினால், இன்னும் சிரமமாகிவிடும். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, இணை நோய்த்தொற்றின் பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில் ஒரே நேரத்தில் கோவிட்-19 மற்றும் டெங்கு தொற்று பல மருத்துவ நிபுணர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்.

கோவிட்-19 க்கு இடையே டெங்கு வருவதால் சந்திக்கும் ஆபத்து என்ன?
ஏற்கனவே கொரோனா வைரஸ் சமாளிப்பதற்கு ஒரு கடினமான ஒன்றாக உள்ளது. இந்த வைரஸ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, ஏராளமானோரின் உயிரைப் பறித்துள்ளது. தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சுகாதார அதிகாரிகள் டெங்கு மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்த வழிகளைத் தேடி வருகின்றனர்.
ஏனெனில் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நோய்களுக்கும் ஒருவருக்கு வந்தால், அது சிகிச்சை அளிப்பதை கடினமாக்குவது மட்டுமல்லாமல், எந்த ஒரு முடிவையும் அளிக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது தவிர, இந்த இரண்டு நோய்களின் அறிகுறிகளும் சில நேரங்களில் ஒரே மாதிரியாக இருப்பதால், குழப்பத்திற்கு வழிவகுக்கும் மற்றும் நோயறிதலையுஙம் தாமதமாக்கி, சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும்.

குழப்பமடையச் செய்யும் அறிகுறிகள்
டெங்கு மற்றும் கோவிட்-19 என்று வரும் போது, அவற்றின் அறிகுறிகளைக் கூறுவதற்கு கடினமாக இருக்கக்கூடும். இந்த இரண்டின் அறிகுறிகளும் குழப்பத்திற்கு வழிவகுத்து, நோயின் மூலத்தைக் கண்டறிவதில் சிரமத்தை ஏற்படுத்தும். அதாவது, காய்ச்சல், சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி போன்றவை டெங்கு அறிகுறிகளாகும். ஆனால் இந்த அறிகுறிகளை கோவிட் நோயாளிகளும் அனுபவிப்பார்கள். மிகவும் அரிதாக டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படலாம். முக்கியமாக கோவிட் அறிகுறியான சரும தடிப்பு அல்லது அரிப்பு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படலாம்.

கோவிட்-19 மற்றும் டெங்குவிற்கு இடையே வித்தியாசத்தை அறிவது எப்படி?
டெங்குவால் ஏற்படும் காய்ச்சல், சோர்வு மற்றும் உடல் வலி ஆகியவற்றை வைத்து மட்டும் வித்தியாசத்தை அறிவது கடினம் என்றாலும், கோவிட்-19-இன் பிற அறிகுறிகளை வைத்து கொரோனாவை எளிதில் அடையாளம் காணலாம்.
வறட்டு இருமல், தொண்டை புண், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற சுவாச சிக்கல்கள் அனைத்தும் கோவிட்-இன் பிற அறிகுறிகளாகும். இம்மாதிரியான அறிகுறிகள் டெங்கு நோயாளிகளிடம் காணப்படுவது என்பது குறைவு. இருப்பினும், இணை நோய்த்தொற்றுக்களின் அபாயம் அதிகம் உள்ளதால், ஒருவருக்கு டெங்கு மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டையும் கண்டறிய முடியும்.

இணை நோய்த்தொற்றுகளின் அபாயத்தைத் தடுப்பது எப்படி?
மக்களில் இணை நோய்த்தொற்றுக்களை கண்டறிவதில் நோயறிதல் முக்கிய பங்கு வகிக்கிறது. அறிகுறிகளைக் கொண்டு டெங்கு மற்றும் கொரோனாவை வேறுபடுத்தி கண்டறிவது கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு நோய்த்தொற்றுக்கும் ஏற்ப நடத்தப்படும் பரிசோதனைகளின் மூலம் கண்டறியலாம்.
மழைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒவ்வொருவரும் நீர் மூலம் பரவும் நோய்களின் அபாயத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். அதில் நன்னீர் தேங்குவதை தவிர்ப்பது, கொசு விரட்டியைப் பயன்படுத்துவது, முழுக் கை உடைகளை அணிவது போன்ற டெங்குவை தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது டெங்கு அபாயத்தைத் தடுக்க உதவும். அதே வேளையில், கோவிட் வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.



Click it and Unblock the Notifications