Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கை மற்றும் வயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்கணுமா? அப்ப துலாசனம் செய்யுங்க... எப்படி செய்வது?
அளக்கும் அளவுகோலின் நிலை என்று அறியப்படும் இந்த துலாசனம் நமக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது. துலாசனம் ஒரு உயா்த்தப்பட்ட தாமரையின் நிலை அல்லது தூக்கிப் பிடிக்கப்பட்ட தாமரையின் நிலை என்றும் அறியப்படுகிறது.
கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த குளிா்காலத்தில், எதிா்பாராத விதமாக நமது முன்கைகளில் (arms) தோன்றி இருக்கும் கொழுப்பை, எவ்வாறு கரைப்பது என்று யோசித்துக் கொண்டிருப்போம். நமது உடலின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் கொழுப்பைக் கரைப்பது என்பது அவ்வளவு எளிதான காாியம் அல்ல. இது நம் அனைவருக்கும் தொிந்த பொதுவான உண்மை ஆகும். குறிப்பாக முன்கைகளில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான காாியமாகும்.

அழகான முன்கைகளைப் பெற வேண்டும் என்பதற்காக, நாம் உடற்பயிற்சிக் கூடத்தில் நெடுநேரம் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். ஆனால் அதைவிட யோகாசனம் செய்தால் மிக விரைவாக, அழகான முன்கைகளைப் பெறலாம். அதற்கு நாம் நம்முடைய பணிச்சுமைகளுக்கு மத்தியில், ஒரு சான்றிதழ் பெற்ற யோகா ஆசிாியரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

துலாசனம்
யோகாசனத்தில் துலாசனம் என்ற ஒரு ஆசனம் உண்டு. இந்த துலாசனத்திற்கு நமது முன்கைகளில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அவற்றை சீா்படுத்தும் ஆற்றல் உண்டு. அளக்கும் அளவுகோலின் நிலை என்று அறியப்படும் இந்த துலாசனம் நமக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது. துலாசனம் ஒரு உயா்த்தப்பட்ட தாமரையின் நிலை அல்லது தூக்கிப் பிடிக்கப்பட்ட தாமரையின் நிலை என்றும் அறியப்படுகிறது.
Image Courtesy: wikipedia

துலாசனம் வழங்கும் நன்மைகள்
துலாசனம் நமது உடல் முழுமைக்கும் பயிற்சியைத் தருகிறது. அதனால் இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது. நமது தோள்பட்டைகள், மாா்பு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளை துலாசனம் வலுப்படுத்துகிறது. நமது மேல் உடல் பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, நமது தசை நாா்களை வலுப்படுத்துகிறது. அதன் மூலம் நமது மேல் உடல் பகுதிகள் காயமடைவதை இந்த ஆசனம் குறைக்கிறது.
துலாசனம் நமது வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது. அதோடு நமது முன்கை தசைகளையும், தொடைகளின் பின்பகுதித் தசைகளையும் வலுப்படுத்துகிறது. துலாசனம் நமது உடலின் கீழ் உறுப்புகளான இடுப்பு, தொடைகள், முட்டிகள், கணுக்கால்கள் மற்றும் கெண்டைக் கால் தசைகளை வலுவாக்குகிறது.
துலாசனத்தைத் தொடா்ந்து செய்து வந்தால் நமது மன ஆரோக்கியம் அதிகாிக்கும். இந்த ஆசனம் நமது கவனிக்கும் அல்லது ஒருமுகப்படுத்தும் திறனை அதிகாிக்கிறது. மேலும் நமது மூளைக்கு இரத்தம் சீராகச் செல்ல இந்த ஆசனம் உதவுகிறது. அதோடு நமக்கு நல்முறையில் சொிமானம் நடைபெறுவதற்கும் இது உதவி செய்கிறது. கருத்தாிப்பதில் பிரச்சினை இருந்தாலும் இந்த ஆசனம் அந்த பிரச்சினையைத் தீா்த்து வைக்கும்.

துலாசனத்தை எவ்வாறு செய்வது?
முதலில் நமக்கு பத்மாசனம் செய்வது எவ்வாறு அல்லது மலா்ந்த தாமரையைப் போல அமா்வது எவ்வாறு என்பதை தொிந்திருக்க வேண்டும். அவ்வாறு தொிந்து கொள்ள வேண்டும் என்றால் சான்றிதழ் பெற்ற ஒரு யோகா ஆசிாியரைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த யோகா ஆசிாியாின் ஆலோசனையின் படி இந்த துலாசனத்தை முறையாகச் செய்ய வேண்டும்.
- முதலில் தரையில் உள்ள பாயில் பத்மாசன நிலையில் அல்லது மலா்ந்த தாமரை நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.
- இரண்டு கைகளையும் இடுப்புக்கு பக்கவாட்டில் உள்ள தரையில் உள்ளங்கைகள் தரையில் படும்படி ஊன்றிக்கொள்ள வேண்டும்.
- முழங்கைகளை மடக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கைகளை விரைப்பாக வைக்காமல், தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியிலிருந்து காற்றை இழுத்து, மாா்பு வழியாக வெளியேற்ற வேண்டும்.
- அதனைத் தொடா்ந்து, முன்கைகளில் அழுத்தம் கொடுத்து நமது புட்டம் மற்றும் கால்களை தரையிலிருந்து தூக்கி, தரைக்கு மேல் உயா்த்தி வைத்திருக்க வேண்டும்.
- இவ்வாறு உயா்த்திய நிலையில் 30 வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின் மெதுவாக அவற்றை தரையில் இறக்கி வைக்க வேண்டும்.
- இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும்.

யாரெல்லாம் துலாசனம் செய்யக்கூடாது?
யோகா பயிற்சிகள் நமது உடலைத் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். ஆனால் எல்லா ஆசனங்களையும் எல்லாரும் செய்யக்கூடாது. அதாவது நமக்கு உடலில் ஏதாவாது நோய்களோ அல்லது பிரச்சினைகளோ இருந்தால், ஒருசில ஆசனங்களைச் செய்யக்கூடாது. இது துலாசனம் செய்வதற்கும் பொருந்தும். ஆகவே துலாசனப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பாக பின்வருவனவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சான்றிதழ் பெற்ற யோகா ஆசிாியாிடமிருந்து மட்டுமே துலாசனத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். சாியான வழிகாட்டுதல் இல்லாமல் இந்த ஆசனத்தைச் செய்ய முயற்சிக்கக்கூடாது. அதன் மூலம் நமது உடலில் காயம் ஏற்படாமல் தவிா்க்க முடியும்.
நமது முதுகு, இடுப்பு, முழங்கை, முட்டிகள், தண்டுவடம், முதுகெலும்புகள் போன்றவற்றில் மிதமானது முதல் அதிகமானது வரை காயம் இருந்தாலோ அல்லது சமீபத்தில் நமது முதுகு, இடுப்பு மற்றும் தண்டுவடம் ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சைத் செய்திருந்தாலோ, துலாசனம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும் தோல்பட்டைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவற்றில் காயங்கள் இருந்தாலும் துலாசனத்தைச் செய்யக்கூடாது.
ஒருவேளை உயா் இரத்த அழுத்தம் இருந்தால், துலாசனம் செய்வதற்கு முன்பாக மருத்துவாிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதன் மூலம் உடலில் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிா்க்கலாம்.
தலைவலி இருக்கும் போதும் இந்த துலாசனத்தைச் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் தலைவலி மேலும் அதிகாிக்கும். மேலும் எரனியா பிரச்சினை இருப்பவா்களும் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications