For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொண்டையில் சிக்கியுள்ள சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

ஆன்டி-பயாடிக்குகளை அடிக்கடி எடுக்கக்கூடாது. அது நல்லதல்ல. ஆனால் சில மூலிகை பொருட்கள் தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும்.

|

மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்படும். இந்த காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதனால் தான், ஏராளமானோர் காய்ச்சல், சளி, ஜலதோஷம், தொண்டை புண், மூக்கு ஒழுகல், அதிகப்படியான சளி உற்பத்தி போன்ற பிரச்சனைகளால் அதிகளவில் அவதிப்படுகிறார்கள். இந்த அறிகுறிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகளைப் போன்றே இருக்கின்றன. எனவே தான் மழைக்காலத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

How To Get Rid Of Phlegm In Throat In Tamil

பருவகால மாற்றத்தினால் கொரோனா நோயாளிகள் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான அறிகுறி தொண்டைப் புண். உங்களுக்கும் இம்மாதிரி தொண்டைப் புண் இருந்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் சளி அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, நெஞ்சுப் பகுதியில் மட்டுமின்றி, தொண்டையிலும் சிக்கி எரிச்சலை உண்டாக்கும். பொதுவாக சளிக்கு ஆன்டி-பயாடிக்குகள் கொடுக்கப்படும். ஆனால் ஆன்டி-பயாடிக்குகளை அடிக்கடி எடுக்கக்கூடாது. அது நல்லதல்ல. ஆனால் சில மூலிகை பொருட்கள் தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்+உப்பு நீர்

மஞ்சள்+உப்பு நீர்

தொண்டையில் சளி சிக்கியிருந்தால், அது தொண்டை வலியை உண்டாக்கும். இந்த தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற 250-300 மில்லி லிட்டர் நீரை எடுத்து 5 நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயை ஒரு நாளைக்கு 3-4 முறை கொப்பளிக்க வேண்டும்.

அதிமதுரம் மற்றும் தேன்

அதிமதுரம் மற்றும் தேன்

ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்

15-20 மிலி நெல்லிக்காய் ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒருநாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலைக் குறைக்கும்.

வெந்தய நீர்

வெந்தய நீர்

1 டீஸ்பூன் வெந்தயத்தை 250 மில்லி லிட்டர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டைப் புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பட்டை நீர்

பட்டை நீர்

250 மில்லி லிட்டர் நீரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நெஞ்சு பகுதியில் மட்டுமின்றி தொண்டையிலும் உள்ள சளி முறிந்து வெளியேறும்.

துளசி மற்றும் இஞ்சி

துளசி மற்றும் இஞ்சி

4-5 துளசி இலைகளை சிறிது நீரில் போட்டு கொதிக்க வைட்டு இறக்கி, வடிகட்டி, அத்துடன் சுவைக்கேற்ப தேன் மற்றும் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இத தொண்டையில் உள்ள சளியை முறிப்பதோடு, தொண்டைப் புண் மற்றும் வலியை ஆற்றும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

ஒரு இன்ச் நற்பதமான இஞ்சியை தட்டி ஒரு கப் நீரில் போட்டு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது தொண்டையில் உள்ள சளியை வெளியேற்றுவதோடு, தொண்டைப் புண் மற்றும் வயிற்று உப்புசத்தை சரிசெய்யும்.

சுடுநீர் மற்றும் தேன்

சுடுநீர் மற்றும் தேன்

ஒரு கப் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது தவிர, நாள் முழுவதும் சுடுநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால், தொண்டையில் உள்ள சளி கரைவதோடு, தொண்டை கரகரப்பும் சரியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Phlegm In Throat In Tamil

In this article, we listed some ways that will take out the phlegm stuck in the throat. Read on to know more...
Story first published: Tuesday, August 9, 2022, 12:56 [IST]
Desktop Bottom Promotion