For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல பூண்டு சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நம் உடல் குளிர்ச்சியான வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளிப்படும் போது, ஆற்றல் மற்றும் வெப்பத்தை சேமிக்க செரிமானம் உட்பட உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

|

பூண்டு உலக அளவில் பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருள். இதன் மருத்துவ குணங்களினால் நமக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பூண்டு உலகம் முழுவதும், குறிப்பாக குளிர்காலத்தில் மிகவும் பரவலாக நுகரப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். குளிர்காலத்தில் சுவாசம், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சனைகள் நிறைய ஏற்படலாம். பூண்டு, சில வழிகளில், அதன் செயலில் உள்ள கலவைகள் காரணமாக இந்த கோளாறுகளை தடுக்க உதவும். ஒரு ஆய்வின்படி, பூண்டில் உள்ள முக்கிய உயிரியக்கக் கலவையான அல்லிசின், ஆண்டிபயாடிக், ஆன்டிஆக்ஸிடன்ட், கார்டியோப்ரோடெக்டிவ் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற பல சிகிச்சை நன்மைகளைக் கொண்டுள்ளது.

How Does Garlic Help You Stay Healthy During The Winter Season?

பூண்டை நறுக்கி அல்லது நசுக்கும்போது அல்லிசின் முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட், கோலின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் பூண்டில் உள்ளன. இந்த கட்டுரையில், குளிர்காலத்தில் பூண்டு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடும்

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராடும்

பூண்டில் சக்திவாய்ந்த ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த பண்புகள் குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கும் இருமல் மற்றும் சளி நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட பெரிதும் உதவுகிறது. பூண்டு ஒரு முக்கிய மசாலாப் பொருளாக உட்கொள்ளப்படுகிறது மற்றும் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், சிலர் சளி, இருமல் சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்துகின்றனர்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பூண்டு இம்யூனோமோடூலேட்டிங் விளைவுகளை ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், அதில் உள்ள அல்லிசின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஹோமியோஸ்டாசிஸை பராமரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்பநிலை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது மற்றும் நோய்க்கிருமிகள் எளிதில் உடலை ஆக்கிரமிக்க அனுமதிக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அல்லிசின் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்கவும் உதவுகிறது.

உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது

உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது

குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை இதயம், செரிமானம் மற்றும் சுவாச பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கலாம் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். ஆயுர்வேதத்தின் படி, பூண்டு தாமசி மற்றும் ராஜசிக் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை மசாலாவின் கடுமையான பண்புகளால் தீர்மானிக்கப்படுகின்றன. பூண்டின் காரத்தன்மை உடலில் சூடு மற்றும் பித்தத்தை அதிகரித்து, உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது. இரத்த சுத்திகரிப்பு மற்றும் இரத்த உற்பத்தியை மேம்படுத்தவும் பூண்டு உதவுகிறது. மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கவும் வெப்பத்தை வழங்கவும் இது உதவுகிறது.

ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுகிறது

ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுகிறது

ஒரு ஆய்வு, வயதான கருப்பு பூண்டின் ஒவ்வாமை எதிர்ப்பு விளைவுகளைக் குறிப்பிட்டுள்ளது. இது ஒரு பூண்டு வகையாகும். இது பல வயதான செயல்முறைகளுடன் பச்சை பூண்டு கிராம்புகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. வயதான கருப்புப் பூண்டில் உள்ள எத்தில் அசிடேட், பீட்டா-ஹெக்ஸோசமினிடேஸ் மற்றும் TNF-α ஆகியவற்றின் வெளியீட்டை அடக்குவதற்கு உதவும் ஒவ்வாமை எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா போன்ற நோயெதிர்ப்பு-மத்தியஸ்த ஒவ்வாமை எதிர்வினைகளைத் தடுக்கிறது. அதன் தீவிரம் பொதுவாக குளிர்காலத்தில் அதிகரிக்கும். ஹெக்ஸோசமினிடேஸ் மற்றும் TNF இரண்டும் உடலில் அழற்சி காரணிகளை அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. இது ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது

ஒரு ஆய்வின்படி, சீரம் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இதய நோய்களுக்கான ஆபத்துக் காரணிகளில் ஒன்றாக குளிர்காலம் உள்ளது. இது பருவத்தில் அதிகப்படியான உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். சுற்றியுள்ள குளிர் வெப்பநிலையை சமாளிக்க, மக்கள் பொதுவாக உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், வெளிப்புற உடல் செயல்பாடுகளை குறைக்கவும் தங்கள் உணவு உட்கொள்ளலை அதிகரிக்க முனைகிறார்கள். இந்த செயல்கள் அவர்களின் உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் காரணமாக கொலஸ்ட்ராலை பெருமளவு குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பூண்டு உதவுகிறது.

நல்ல செரிமானத்தை பராமரிக்கிறது

நல்ல செரிமானத்தை பராமரிக்கிறது

நம் உடல் குளிர்ச்சியான வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளிப்படும் போது, ஆற்றல் மற்றும் வெப்பத்தை சேமிக்க செரிமானம் உட்பட உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பூண்டு பிரபலமான நாட்டுப்புற வைத்தியங்களில் ஒன்றாகும். இது செரிமானத்தை சீராக்கவும், அது தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும். இது எளிதாக செரிமானத்திற்காக உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்.

பல் வலியை தடுக்கிறது

பல் வலியை தடுக்கிறது

குளிர்காலத்தில் வாய் மற்றும் ஈறு பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். குளிர்ந்த காலநிலையில் உடலின் வெப்பநிலை குறைவதால் இரத்த ஓட்டம் குறைகிறது. மேலும் வாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது பல்வலிக்கு வழிவகுக்கும். பூண்டின் காரத்தன்மை பல் பகுதிகளுக்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. அல்லிசின் இருப்பதால் பீரியண்டோன்டிடிஸ் மற்றும் பல் சிதைவு அபாயத்தைக் குறைக்கவும் பூண்டு உதவுகிறது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

குளிர்காலத்தில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பூண்டு ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும். இந்த அற்புதமான உணவுப் பொருளை உங்கள் உணவுகளில் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Garlic Help You Stay Healthy During The Winter Season?

Here we are explain to How Does Garlic Help You Stay Healthy During The Winter Season?
Desktop Bottom Promotion