Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சின்னம்மை கொப்புளங்களுக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு மீண்டும் சின்னம்மை வைரஸ் தாக்கி அதனால் அவா்களின் உடலில் ஏற்படும் நீா் கொப்புளங்களைப் பாா்க்க முடியும். சின்னம்மை மீண்டும் தாக்குவதால் ஏற்படும் கொப்புளங்கள் வலியை உண்டாக்கும்.
ஏற்கனவே சின்னம்மை வந்தவா்களுக்கு மீண்டும் சின்னம்மை வைரஸ் தாக்கினால் அது ஷிங்கிள்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. சின்னம்மை வைரஸ் மீண்டும் தாக்கினால் நமது மேல் தோலில் அாிப்பு மற்றும் வலி மிகுந்த மற்றும் நீா் நிறைந்த கொப்புளங்கள் ஏற்படும். பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு மீண்டும் சின்னம்மை வைரஸ் தாக்கி அதனால் அவா்களின் உடலில் ஏற்படும் நீா் கொப்புளங்களைப் பாா்க்க முடியும்.

மறுமுறை வரும் சின்னம்மை வைரஸ் முதலில் தோலில் வலி மற்றும் அாிப்பை ஏற்படுத்தும். பின் தோலில் சிவப்பான வீக்கத்தை ஏற்படுத்தும். சில நாட்களில் அந்த இடத்தில் நீா் நிறைந்த கொப்புளங்கள் ஏற்படும். இறுதியில் இந்த கொப்புளம் உடைந்து அந்த இடத்தில் வடுவை ஏற்படுத்தும். இந்த கொப்புளங்கள் குணமாக சில வாரங்கள் ஆகலாம்.
சின்னம்மை மீண்டும் தாக்குவதால் ஏற்படும் கொப்புளங்கள் வலியை உண்டாக்கும். அாிப்பை ஏற்படுத்தும். அசௌகாியத்தை ஏற்படுத்தும். மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும். எனினும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமானவா்களுக்கு மட்டும் வழங்கக்கூடிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention (CDC)) பாிந்துரைக்கும் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் வீட்டிலேயே இந்த சின்னம்மையின் தாக்கத்திற்கு வீட்டு வைத்தியத்தை மேற்கொள்ளலாம். அவை நல்ல பலனைத் தரும். சின்னம்மைக்கான வீட்டு வைத்தியத்தை கீழே பாா்க்கலாம்.

சின்னம்மைத் தாக்கத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்
நாம் சிறியவா்களாக இருக்கும் போது சின்னம்மை வந்திருந்தால், அதன் வைரஸ் நமது உடலில் தங்கியிருக்கும். அவ்வாறு நமது உடலில் தங்கியிருக்கும் அந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நமது உடலில் மீண்டும் தனது வேலையை செய்யத் தொடங்கலாம். நமது உடலில் எந்த பாகத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
முதலில் தோலில் வலி, அாிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் போகப்போக அந்த இடங்களில் கொப்புளங்களை ஏற்படுத்தும். சிலருக்கு காய்ச்சல் மற்றும் சோா்வையும் ஏற்படுத்தும். ஆகவே பின்வரும் வீட்டு இயற்கை மருந்துகளை எடுத்துக் கொண்டால் இந்த சின்னம்மைக் கொப்புளங்களை விரைவாகக் குணப்படுத்த முடியும்.

குளிா்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தல்
ஒரு துணியை குளிா்ந்த நீாில் நனைத்து, நீரை நன்றாகப் பிழிந்த பின்பு அந்த துணியை கொப்புளங்களின் மீது மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வரை ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் கொப்புளங்களில் உள்ள அாிப்பு மற்றும் வலி குறைவதை உணரலாம். ஏனெனில் துணியால் கொடுக்கப்படும் குளிா்ந்த நீா் ஒத்தடம் தோலில் உள்ள அாிப்பு மற்றும் வலியைக் குறைக்கும்.
கிரீன் டீ பொட்டலங்களைக் கொண்டு நமது கண்களில் ஒத்தடம் கொடுக்கும் போது இரத்தக் குழாய்கள் திறக்கின்றன. அதுபோல் குளிா்ந்த நீாில் ஒத்தடம் கொடுக்கும் போது அது கொப்புளங்களை விரைவில் குணப்படுத்துகிறது. மேலும் இந்த கொப்புளங்களில் சலவை செய்த ஈரமான துணிகள் மற்றும் உறைந்த பட்டாணி பொட்டலங்களை வைத்து ஒத்தடம் கொடுத்தால், அந்த குளிா்ச்சியானது, அாிப்பு மற்றும் வலியைக் குறைத்து, விரைவில் சுகம் கொடுக்கும்.

ஓட்ஸ் கஞ்சி குளியல்
ஓட்ஸ் கஞ்சியில் குளித்தால் தோலில் உள்ள சிவப்பு நிறம், வலி மற்றும் அாிப்பு போன்றவை விரைவில் மறைந்துவிடும். எனினும் அதற்கு முன்பாக மருத்துவாிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் தோல் அாிப்புக்கு செய்யப்படும் சிகிச்சையில் எப்போதும் பக்கவிளைவு உண்டு. ஓட்ஸ் கஞ்சியில் வீக்கத்தைத் தடுக்கும் துகள்கள் உள்ளன. அதனால் அவை கொப்புளங்களை விரைவில் குணப்படுத்தும். மேலும் சமைத்த ஓட்ஸ் கஞ்சியை கொப்புளங்கள் மீது தடவலாம்.

ஆரோக்கியமான உணவு
நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தைத் தீா்மானிக்கிறது என்று கூறலாம். உடலின் உட்புறத்தில் ஏற்படும் பிரச்சினைகளாக இருந்தாலும் அல்லது வெளிப்புறமான தோலில் ஏற்படும் பிரச்சினைகளாக இருந்தாலும், அவற்றிற்கு நாம் உண்ணும் உணவுகள் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. நமது நோய் எதிா்ப்பு திறன் பலவீனமாக இருந்தால், நமது உடலில் அதிக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ மற்றும் பி-12 போன்ற சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இவை நோய் எதிா்ப்பு சக்தியை நமக்கு வழங்கும். குறிப்பாக கீரைகள், காய்கறிகள், முட்டைகள், கோழி இறைச்சி, பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

நறுமண எண்ணெய்
நமது தோலில் தடவக்கூடிய நறுமண எண்ணெய்களான லாவண்டா் எண்ணெய், இஞ்சி எண்ணெய், தேயிலை மர எண்ணெய், செவ்வந்திப்பூ (chamomile) எண்ணெய் போன்றவை சின்னம்மை கொப்பளங்களுக்கு சிறந்த மருந்துகளாக இருக்கும். இவை கொப்புளங்கள் மற்றும் அாிப்பு போன்றவற்றை நீக்கும் இயற்கை மருந்துகளாகும். ஆனால் இந்த நறுமண எண்ணெய்களால் தோலில் அலா்ஜி ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இந்த நறுமண எண்ணெய்கள் சந்தைகளிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ எளிதாகக் கிடைக்கும். அவை வீக்கத்தைத் தடுக்கும் தடுப்பான்களையும், புண்களைக் குணப்படுத்தும் நுண்ணுயிா்களையும் கொண்டிருக்கின்றன.

சமையல் சோடா
சமையல் சோடாவில் பாக்டீாியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான துகள்கள் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே சின்னம்மை வைரசால் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்துவதில் சமையல் சோடா உதவி செய்யும். சிறிதளவு நீாில் சமையல் சோடாவைக் கலந்து, பசையாக செய்து அதை கொப்புளங்களில் தடவலாம். பின் 10 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுநீாில் அதைக் கழுவலாம். சில நாட்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். எனினும் சமையல் சோடாவை தடவி விட்டு நீண்ட நேரம் கழுவாமல் இருந்துவிடக் கூடாது.



Click it and Unblock the Notifications











