For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிப் பழக்கத்துக்கு 'குட்-பை' சொல்லணுமா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமானது. மன உறுதியுடன் கைவிடுவதற்கான முயற்சியில் இறங்கினால் மட்டுமே கைவிட முடியுமே தவிர, நினைத்தவுடன் கைவிடுவது என்பது இய

|

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா? இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்கிறீர்களா? குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமானது. மன உறுதியுடன் கைவிடுவதற்கான முயற்சியில் இறங்கினால் மட்டுமே கைவிட முடியுமே தவிர, நினைத்தவுடன் கைவிடுவது என்பது இயலாத காரியம்.

Home Remedies For Alcoholism

என்ன தான் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்று கூறினாலும், யார் காதில் அது விழுகிறது. மீண்டும் மீண்டும் குடிக்கத் தானே செய்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது கல்லீரல், இதயம், மூளை போன்ற உறுப்புக்களை மிகவும் மோசமாக பாதிக்கும். அதோடு, கடுமையாக பல வயிற்று பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட வைக்கும். இருப்பினும், மிதமான அளவில் மது அருந்தினால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படியே மதுவிற்கு அடிமையாகிவிட்டால் தான் பிரச்சனையே.

MOST READ: பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் ஒரு நாள் கூட மது அருந்தாமல் இருக்க முடியாது. மேலும் இது ஒருவிதமான நாள்பட்ட கோளாறாக மாறி, மனதைக் கட்டுப்படுத்த முடியாதவாறு செய்து, பல மோசமான செயல்களில் ஈடுபடச் செய்யும். இதெல்லாம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஆரம்பத்திலேயே மதுப் பழக்கத்தைக் கைவிட முயற்சிக்க வேண்டும். இக்கட்டுரையில் மதுப்பழக்கத்தைக் கைவிட உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திராட்சை

திராட்சை

மது பானங்கள் மற்றும் ஒயின்களில் உள்ள முக்கிய மூலப்பொருளே திராட்சை தான். ஆகவே மதுப் பழக்கத்தைக் கைவிட நினைத்தால், திராட்சையின் உதவியுடன் எளிதில் மறக்கலாம். எனவே உங்களுக்கு மது அருந்த வேண்டுமென்று தோன்றும் போது, திராட்சை ஜூஸ் குடியுங்கள். உங்கள் மனது எவ்வளவு கேட்கிறதோ, அவ்வளவு திராட்சை ஜூஸைக் குடிக்கலாம். இதனால் விரைவில் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியும். வேண்டுமானால், ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் ஒருமுறை திராட்சையை சாப்பிடலாம்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

குடிப்பழக்கத்தைக் கைவிட உதவும் மற்றொரு அற்புதமான இயற்கை வழி தான் இது. சில துண்டுகள் பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பேரிச்சம் பழத்தை கையால் நசுக்கி, அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிக்க, விரைவில் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீன்களான டூனா, சார்டைன், ட்ரௌட் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இது மதுவின் மீதுள்ள நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். எனவே இந்த வகை மீன்களை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

வீட்டு சமையலறையில் இருக்கும் பொதுவான ஒரு மசாலாப் பொருள் தான் சிவப்பு மிளகாய். இதை ஜூஸ் வடிவில் உட்கொண்டால், அது தூக்கமின்மை, பதற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவைக் குறையும். அதோடு பசியைத் தூண்டிவிடும் மற்றும் மதுவின் மீதுள்ள நாட்டமும் குறையும். அதற்கு சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் சிறிது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இயற்கை வைத்தியங்களைத் தவிர, சில குறிப்புக்களின் உதவியுடனும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம். அவை என்னவென்று காண்போம்.

வேறு சில குறிப்புக்கள்

வேறு சில குறிப்புக்கள்

* அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஆரோக்கியமான சீரான உணவை உண்ண வேண்டும்.

* போதுமான நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Alcoholism

Here are some home remedies for alcoholism. Read on...
Story first published: Wednesday, May 27, 2020, 17:36 [IST]
Desktop Bottom Promotion