For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சைவ உணவு முறையை பின்பற்றுபவரா? உங்களுக்கான எச்சரிக்கை…!

காய்கறிகள், பழங்கள், பால் போன்ற சைவ உணவுகளை மட்டும் உட்கொள்பவர்களுக்கு ஊட்டட்சத்து குறைபாடுகள் ஏற்படும்.

|

"உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது பழமொழி. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றால் அது உணவு மட்டுமே. ஒவ்வொரு நாட்டு மக்களும் ஏன் ஒரே நாட்டில் வாழும் வெவ்வேறு மாநில மக்களுக்கும் கூட உணவு முறைகளில் வித்தியாசம் இருக்கும். உணவு முறை என்பது பழங்காலந்தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒன்று. தமிழகத்திலும் பழமையான உணவு பழக்கம் என்பது இருந்து வருகிறது. ஆனால், இவர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று சைவ உணவு முறை, மற்றொன்று அசைவ உணவு முறை.

Health Risks of Vegetarian Diet

இந்த இரண்டு முறைகளிலும் பெரும்வாரியான மக்கள் இருக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடுவதால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்று சைவ உணவை உட்கொள்கிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் சைவ உணவு முறை உட்கொள்கிறவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். சைவ உணவு முறையால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைவ உணவு முறை

சைவ உணவு முறை

சைவ உணவு முறை என்பது மிகவும் நல்ல உணவு முறை. பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று கூறுவதுண்டு. ஆனால், இந்த உணவு முறையால் பல்வேறு சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

உயர் கொழுப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஆகிய நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று எண்ணி சைவ உண முறைக்கு நிறைய பேர் மாறுகிறார்கள் என்கிறார்கள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக சைவ உணவு முறைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் நான்கு மடங்காக தற்போது உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அமெரிக்காவில் ஐந்து சதவீத மக்கள் சைவ உணவு முறைக்கு மாறியுள்ளதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

காய்கறிகள், பழங்கள், பால் போன்ற சைவ உணவுகளை மட்டும் உட்கொள்பவர்களுக்கு ஊட்டட்சத்து குறைபாடுகள் ஏற்படும். சைவ உணவு முறையை பின்பற்றுகிறவர்கள் நொறுக்கு திண்பண்டங்கள் மற்றும் ஜங்க் ஃபுட் உண்பதால் கலோரி அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.

சைவ உணவு உண்பவர்களுக்கு இல்லாத ஊட்டசத்துகள்

சைவ உணவு உண்பவர்களுக்கு இல்லாத ஊட்டசத்துகள்

* இரும்பு

* கால்சியம்

* புரதம்

* வைட்டமின் டி

* வைட்டமின் பி12

மீன் மற்றும் இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கலாம். மேலும் முட்டை மற்றும் பால் உண்ணாதவர்களுக்கு கூட இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது.

MOST READ: பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்... காரணம் என்ன தெரியுமா?

சைவ உணவால் ஏற்படும் பாதிப்புகள்

சைவ உணவால் ஏற்படும் பாதிப்புகள்

பக்கவாதம்

48,000 மக்களிடம் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அசைவ உணவு உண்பவர்களை காட்டிலும், சைவ உணவு உட்கொள்கிறவர்களுக்குதான் 20% பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூளையில் பாதிப்பு

கோலின் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கும் பிற செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. சைவ உணவு முறையில் கோலின் குறைவாக இருக்கும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தலைமுடி உதிர்தல்

அசைவ உணவுகளை தவிர்த்தால் முடிவு உதிர்வது அதிகரிக்கும். ஏனெனில் அசைவ உணவுகளில், இரும்புசத்து, வைட்டமின் பி, துத்தநாகம் ஆகியவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு இது உதவும். சைவ உணவுகளில் உள்ள புரத குறைபாடு காரணமாக முடிவு உதிர்தல் ஏற்படும்.

மனநிலை மாற்றம்

சைவ மற்றும் அசைவ உணவுகளால் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்று சுமார் 800 தாய்மார்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், 80 பேருக்கு சைவ உணவு எடுத்துக்கொள்வதால்தான் மனச்சோர்வு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேகன் உணவு முறை

வேகன் உணவு முறை

சைவ உணவு பழக்கம் கொண்டவர்களில் நிறைய பேர் பால் பொருட்களை கூட தவிர்க்கும் 'வேகன்' உணவு முறையை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். சைவ உணவு முறைகளில் ஒன்றான வேகன் முறையானது நீண்ட கால நோய்கள் வருவதை குறைக்கும் என்ற போதிலும், திட்டமிடப்படாத வேகன் உணவு முறையானது மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை ஏற்படுத்தக்கூடியது.

குறிப்பாக இறைச்சி உணவில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஊட்டசத்துக்களை சைவ உணவுகளுடன் சேர்த்து கூடுதலாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வேகன் உணவு முறையால் ஏற்படும் பாதிப்புகள்

வேகன் உணவு முறையால் ஏற்படும் பாதிப்புகள்

வேகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள் கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக எலும்பு அடத்தி குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள். இம்முறையை பின்பற்றுகிறவர்கள் மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிக எலும்பு முறிவு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

ஒமேகா 3, அயோடின் அளவு மற்றும் வைட்டமின் பி12 ஆகிய குறைபாடுகளும் வேகன் உணவு முறையை உட்கொள்வோருக்கு ஏற்படுகிறது.

MOST READ: குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 என்பது அசைவ உணவுகளின் வழியே மட்டுமே கிடைக்க கூடியது ஊட்டச்சத்து. சைவ உணவு மற்றும் வேகன் உணவு முறையை உட்கொள்ளுவோர் வைட்டமின் பி12 குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். இறைச்சி உணவை உட்கொள்ளுவோருடன் இவர்களை ஒப்பிடும் போது மிக மிக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வைட்டமின் பி12 குறைபட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை. மோசமான உடல்சோர்வு, செரிமான கோளாறுகள், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி் குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிகிச்சை அளிக்கப்படாத வைட்டமின் பி12 குறைபாடு தீவிரமான நரம்பு மண்டல பாதிப்பை உண்டு செய்யும். மேலும், இதய நோய்களை ஏற்படுத்ததுவும் வாய்ப்புள்ளது.

உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்று . அதை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Risks of Vegetarian Diet

Read to know health risks of vegetarian diet
Story first published: Thursday, November 14, 2019, 15:41 [IST]
Desktop Bottom Promotion