For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...!

கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவற்றை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அனைத்து உயிர்களின் செயல்பாட்டிற்கும் பாஸ்பரஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

|

பாஸ்பரஸ் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பது உங்களுக்குத் தெரியுமா?. கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவற்றை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அனைத்து உயிர்களின் செயல்பாட்டிற்கும் பாஸ்பரஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடலில் போதுமான பாஸ்பரஸ் இல்லாவிட்டால் மனிதர்களால் சரியாக செயல்பட முடியாது.

Health Benefits Of Phosphorus

பாஸ்பரஸ் P என்னும் குறியீட்டுடனும், அணு எண் 15-ம் கொண்ட முக்கியமான வேதியியல் மூலக்கூறு ஆகும். இரண்டு வகையான பாஸ்பரஸ் உள்ளது, ஒன்று சிவப்பு பாஸ்பரஸ் மற்றொன்று வெள்ளை பாஸ்பரஸ், இது ஒரு தனித்துவமான மூலக்கூறு ஆகும். பாஸ்பேட்டுகள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஏ.டி.பி மற்றும் பாஸ்போலிப்பிட்களின் ஒரு அங்கமாகும், இவை அனைத்து உயிரணு சவ்வுகளையும் உருவாக்குகின்றன. பாஸ்பரஸ் சிறுநீர் மற்றும் உடல் சாம்பலில் உள்ளது. கால்சியத்திற்கு பிறகு உடலுக்கு அத்தியாவசியமான இரண்டாவது ஊட்டச்சத்து இதுவாகும். இந்த பதிவில் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தின் அற்புத பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனித உடலில் பாஸ்பரஸ்

மனித உடலில் பாஸ்பரஸ்

உடலில் உள்ள மொத்த பாஸ்பரஸில் 85% எலும்புக்கூட்டில் உள்ளது, உடலில் உள்ள மொத்த பாஸ்பரஸில் 85% எலும்புக்கூட்டில் உள்ளது, மீதி 1% இரத்தம் மற்றும் உடல் திரவங்களில் உள்ளது. பாஸ்பரஸ் இன்றி உங்களின் DNA -வை வடிவமைக்க முடியாது.

செரிமானம்

செரிமானம்

பாஸ்பரஸ் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. இது ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் செரிமானத்தை திறம்பட தூண்டுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதுடன் நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட வைக்கவும் உதவுகிறது. இது அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது, மேலும் குடல் இயக்கங்களை சீராக்குகிறது. இது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழித்தல்

கனிம பாஸ்பரஸ் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. சிறுநீரகத்திலிருந்து கழிவுகளை சிறுநீர் கழித்தல் மற்றும் வெளியேற்றுவதன் மூலம் முறையாக வெளியேற்றுவதை இந்த தாது உறுதி செய்கிறது. பாஸ்பரஸ் உடலில் இருந்து அகற்றப்படும் அனைத்து திரவங்கள் மற்றும் பொருட்களின் ஆரோக்கியமான சமநிலையை அடைய வைக்கிறது. இது சிறுநீரின் அளவு மற்றும் அதிர்வெண்ணை அதிகரிப்பதன் மூலம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை சமப்படுத்த உதவுகிறது. இது உடலை நச்சுத்தன்மையற்றதாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலில் உள்ள திரவ அளவை சீராக வைத்துக்கொள்ளும்.

MOST READ: உங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க

மூளை செயல்பாடு

மூளை செயல்பாடு

மூளையின் சீரான செயல்பாட்டிற்கு பாஸ்பரஸ் மிகவும் அவசியமானதாகும். இந்த கனிமத்தை உட்கொள்வதன் மூலம் செறிவு, நினைவகம் மற்றும் மன செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்த முடியும். பாஸ்பரஸின் போதுமான அளவு அறிவாற்றல் வளர்ச்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது. பாஸ்பரஸ் குறைபாடு டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஹார்மோன் சமநிலை

ஹார்மோன் சமநிலை

பாஸ்பரஸ் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை சீராக்க உதவுகிறது. சீரான அளவு ஹார்மோன்கள் இருப்பதை உறுதி செய்வது உங்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. பாஸ்பரஸ் எண்டோகிரைன் சுரப்பிகளுடன் தொடர்புகொண்டு ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் வெளியீட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்

வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்

எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிகபட்ச அளவு பாஸ்பரஸ் தேவைப்படுவதால் நீங்கள் போதுமான அளவு பாஸ்பரஸ் எடுத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளவும். எலும்புகளுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாஸ்பரசும் முக்கியம். இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நின்ற கட்டங்களில் பெண்களுக்கும் இது முக்கியமாக தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க போதுமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது.

வைட்டமின்களை உறிஞ்ச உதவுகிறது

வைட்டமின்களை உறிஞ்ச உதவுகிறது

பாஸ்பரஸ் உடலில் உள்ள வைட்டமின்களை, குறிப்பாக வைட்டமின் B-யை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் அவசியம். இது செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் அவற்றின் செயல்பாடையும் உறுதி செய்கிறது.

MOST READ: ஆண்களை இந்த இடங்களில் தீண்டுவது அவர்களின் பாலியல் ஆசையை பலமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?

பாஸ்பரஸ் உணவுகள்

பாஸ்பரஸ் உணவுகள்

பாஸ்பரஸ் இருக்கும் உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. சிக்கன், கடல் உணவுகள், பால் பொருட்கள், பூசணிக்காய் விதைகள், நட்ஸ், முழுதானியங்கள், பீன்ஸ், பருப்புகள் மற்றும் சோயா போன்றவற்றில் பாஸ்பரஸ் போதுமான அளவில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Phosphorus

Phosphorus is an important chemical element with the symbol P. Here are the health benefits of Phosphorus.
Story first published: Wednesday, October 9, 2019, 14:59 [IST]
Desktop Bottom Promotion