Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
கோடையில் அடிக்கடி உடல் சூடு பிடிக்குதா? அப்ப இத தினமும் குடிங்க...
தற்போது நிறைய பேர் இம்மாதிரியான பானங்களை தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். பொதுவாக இந்த வகையான பானங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறனைக் கொண்டவையாக இருக்கும்.
அக்னி வெயில் ஆரம்பமாகியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. பலர் உடல் சூட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உடலின் வெப்பநிலை அதிகமானால், அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே கோடையில் உடல் வெப்பநிலையை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

அப்படி உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கு நீர், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. உங்களுக்கு வெறும் நீரைக் குடித்து அலுத்துப் போயிருந்தால், சுவைமிக்க நீரைத் (Flavoured Water) தயாரித்துக் குடிக்கலாம்.
தற்போது நிறைய பேர் இம்மாதிரியான பானங்களை தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். பொதுவாக இந்த வகையான பானங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறனைக் கொண்டவையாக இருக்கும். அதோடு இந்த பானங்களை நமக்குப் பிடித்த பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். முக்கியமாக இந்த வகை பானங்களை கொதிக்க வைக்கவோ அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவோ தேவையில்லை.

பட்டை புதினா நீர்
கோடைக்காலத்தில் சாதாரண நீரை விட, பட்டை மற்றும் புதினா சேர்த்த நீர் குடிப்பதற்கு அருமையாக இருக்கும். உங்களுக்கு புளிப்புச் சுவை பிடிக்குமானால், அத்துடன் எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த நீரின் சுவை இருமடங்கு அதிகரிக்கும். இந்த பட்டை புதினா நீரை இப்போது தான் குடிக்க வேண்டுமென்ற எதுவும் இல்லை. இந்நீரை நாள் முழுவதும் சாதாரண நீரைப் போன்றே குடிக்கலாம்.
உங்களுக்கு பட்டை புதினா நீரைத் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
* புதினா - சிறிது
* பட்டை - 2 துண்டு
* எலுமிச்சை - 2 துண்டுகள்
* தண்ணீர் - தேவையான அளவு

புதினாவின் நன்மைகள்
புதினாவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடின்ட்டுகள் உள்ளன. இது உடலை சுத்தப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவைப் பராடரிக்கவும் உதவும். குறிப்பாக கோடையில் புதினாவை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்வதோடு, வயிற்று உப்புச பிரச்சனையைத் தடுக்கும்.

பட்டையின் நன்மைகள்
பட்டையில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பல்வேறு பருவக் கால நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளைக் குறைக்க உதவி புரிந்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலுமிச்சையின் நன்மைகள்
எலுமிச்சை ஒரு அத்தியாவசிய கோடைக்கால பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளதல், இது ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடல் வறட்சி அடைவதையும் தடுக்கிறது.

பானம் தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாட்டிலில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புதினா இலைகள், பட்டை மற்றும் எலுமிச்சை துண்டுகளைப் போட வேண்டும்.
* பின்பு பாட்டிலை மூடி வைத்து விட்டு, தாகம் எடுக்கும் போது குடிக்க வேண்டும். ஆனால் இந்த பானம் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்களை மறுநாள் தவறாமல் தூக்கி எறிந்துவிட்டு, புதிய பொருட்களால் தான் தயாரிக்க வேண்டும்.

சிறந்த எடை இழப்பு பானம்
புதினா, பட்டை, எலுமிச்சை ஆகிய மூன்று பொருட்களுமே எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும் பொருட்களாகும். ஆகவே கோடைக்காலத்தில் இந்த பானத்தைக் குடித்து வந்தால், உடல் சூடு குறைவதோடு, உடல் எடையை சிரமமின்றி எளிதில் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications