For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ்! அதன் அறிகுறி என்ன? அதை எப்படி தடுப்பது?

ஹண்டா வைரஸ் என்பது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை எப்படி தடுப்பது? இதற்கான சிகிச்சைகள் என்ன? போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழும்.

|

உலகமே கொரோனா வைரஸால் அழிந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்றவைகளும் பரவி வருவதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் புதிதாக சீனாவில் ஒருவர் ஹண்டா வைரஸ் தாக்கத்தால் இறந்திருப்பதாக வெளிவந்த செய்தி பலருக்கும் மிகுந்த அச்சத்தையும், பீதியையும் உண்டாக்குகிறது.

Hantavirus: Signs, Symptoms, Causes, Diagnosis, Prevention

சீனாவில் பேருந்தில் பயணம் செய்யும் போது திடீரென்று ஒருவர் மரணமடைந்தார். அவரைப் பரிசோதித்ததில், அவருக்கு ஹண்டா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த 32 பயணிகளுக்கும் ஹண்டா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து ஓரளவு மீண்டு வந்த சீனாவில் மீண்டும் ஹண்டா வைரஸ் பரவி வருவது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா?

சரி, ஹண்டா வைரஸ் என்பது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை எப்படி தடுப்பது? இதற்கான சிகிச்சைகள் என்ன? போன்ற உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்குமான விடையை இக்கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹண்டா வைரஸ் என்றால் என்ன?

ஹண்டா வைரஸ் என்றால் என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, வைரஸ்களின் ஒரு குடும்பம் தான் ஹண்டா வைரஸ். இவை கொறித்துண்ணிகளான எலிகளால் பரவுகின்றன. இந்த வைரஸ்கள் மக்களில் பல நோய்க்குறிகளை உண்டாக்கும். இது ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறி (HPS), சிறுநீரக நோய்க்குறியுடன் ரத்தக்கசிவு காய்ச்சலை (HFRS) ஏற்படுத்தும்.

MOST READ: கொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது?

எவ்வாறு பரவும்?

எவ்வாறு பரவும்?

ஹண்டா வைரஸ் காற்றின் வழியே பரவக்கூடிய நோய் அல்ல. மாறாக இது வைரஸ் தொற்று ஏற்பட்ட எலியின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர்/எச்சிலை தொடர்பு கொள்ளும் போது மட்டுமே மக்களுக்கு பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. மிகவும் அரிதான சந்தர்பங்களில் பாதிக்கப்பட்ட எலி கடித்தால் வரும்.

அமெரிக்காவில் ஹண்டா வைரஸ்கள் "New World" ஹண்டா வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்க்குறியை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், இது "Old World" என்ற பெயரில் அறியப்படுகிறது. இது சிறுநீரக நோய்க்குறியுடன் இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும்.

MOST READ: கொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஹண்டா வைரஸின் அறிகுறிகள்

ஹண்டா வைரஸின் அறிகுறிகள்

ஹண்டா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்நோயின் அடைகாக்கும் நேரம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் வரையறுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த வைரஸ் தாக்கிய 1 முதல் 8 வாரங்களுக்குள் இதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. மேலும் HPS ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது. அதே சமயம் HFRS மக்களிடையே பரவுவது என்பது மிகவும் அரிதானது.

MOST READ: A வகை இரத்தப்பிரிவினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்... O பிரிவினரை நெருங்காதாம்.. உண்மை என்ன?

ஆரம்ப அறிகுறிகள்:

ஆரம்ப அறிகுறிகள்:

* சோர்வு

* காய்ச்சல்

* தலைவலி

* தலைச்சுற்றல்

* குளிர் காய்ச்சல்

* அடிவயிற்று பிரச்சனைகளான குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் அடிவயிற்று வலி

* தசை வலி, குறிப்பாக தொடை, இடுப்பு, முதுகு, சில சமயங்களில் தோள்பட்டையில் வலி ஏற்படும்

தாமதமாக வெளிப்படும் அறிகுறிகள்:

தாமதமாக வெளிப்படும் அறிகுறிகள்:

நோய்த்தொற்று ஏற்பட்ட நான்கு நாட்களில் இருந்து 10 நாட்களுக்கு மேல், ஒருசில அறிகுறிகள் வெளிப்படும். அவையாவன:

* இருமல்

* மூச்சு விடுவதில் சிரமம்

* நெஞ்சு பகுதியில் ஒருவித இறுக்கமான உணர்வு

MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

இறப்பு விகிதம்

இறப்பு விகிதம்

ஹண்டா வைரஸின் இறப்பு விகிதம் 38 சதவீதம். HFRS மற்றும் HPS இரண்டின் ஆரம்ப அறிகுறிகளும் ஒன்று தான். ஆனால் HFRS தீவிரமான நிலையில், தாழ் இரத்த அழுத்தம், கடுமையான அதிர்ச்சி, வாஸ்குலர் கசிவு மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக மரணம் நிகழும்.

MOST READ: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க சீனர்கள் குடிக்கும் மூலிகை சூப்!

கண்டறிவது எப்படி?

கண்டறிவது எப்படி?

HFRS மற்றும் HPS போன்றவை வெவ்வேறு வழிகளில் கண்டறியப்படுகின்றன. அதில்,

HFRS கண்டறிதல்: நோய்க்கு இணக்கமான மருத்துவ வரலாற்றைக் கொண்ட நோயாளிகளுக்கு ஹான்டவைரஸ் கண்டறியப்படுவதை உறுதிப்படுத்த பல ஆய்வக சோதனைகள் (இரத்த பரிசோதனை, அடிப்படை வளர்சிதை மாற்ற பேனல்கள் போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன.

HPS கண்டறிதல்: ஒருவர் நோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்தால், அதைக் கண்டறிவது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் காய்ச்சல், தசை வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இன்ஃப்ளூயன்ஸாவிற்கும் இருப்பதால், அது குழப்பதை உண்டாக்கும். ஆனால், ஒருவருக்கு காய்ச்சல், தசை வலியுடன், எலி கடித்த அனுபவத்தையும் கொண்டு மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்தால், அது ஹண்டா வைரஸ் நோயைக் குறிக்கும்.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

சிகிச்சைகள் என்ன?

சிகிச்சைகள் என்ன?

தற்போது, ஹண்டா வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர்கள் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவத்தைப் பெற்றால், மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சுட்டிக்காட்டுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் சந்திக்கும் கடுமையான சுவாசக் கோளாறுகளை நிர்வகிக்க ICU-வில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். இந்நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதே நல்லது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

ஹண்டா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி?

ஹண்டா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி?

ஹண்டா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முதன்மையான வழி என்றால் அது எலியைக் கட்டுப்படுத்துவது தான். அதற்கு ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவையாவன:

* எலி சிறுநீர், மலம் கழிக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்கவும்.

* வீட்டில் எலி வரும் ஓட்டைகளை அடைக்கவும்.

* வீட்டின் வெளியே உணவுகளை வைப்பதைத் தவிர்க்கவும்.

* எலியின் கழிவுகள் இருக்கும் பகுதிகளில் கிருமிநாசிகளைத் தெளித்துவிடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hantavirus: Signs, Symptoms, Causes, Diagnosis, Prevention

According to the CDC, hantaviruses are a family of viruses that are mainly spread by rodents. Early symptoms of hantavirus include fever, headache, dizziness, chills and severe symptoms include shortness of breath, coughing etc.
Desktop Bottom Promotion