For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ் குறித்து கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் நோய்த்தொற்றுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது கினியாவில் 7 பேர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

|

உலகமே கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது, முன்பு உலகையே உலுக்கிய எபோலா உலகின் சில பகுதிகளில் மீண்டும் தோன்றியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் நோய்த்தொற்றுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது கினியாவில் 7 பேர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கினியாவில் எபோலா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Guinea Reports First Ebola Outbreak Since 2016: Facts About The Ebola Virus

பொதுவாக எபோலா வைரஸ் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது மற்றும் இது கடுமையான நோயை உண்டாக்கி, மரணத்திற்கும் வழிவகுக்கும். விழிப்புணர்வும், தடுப்பு முறைகளும் தான் பெரும்பாலான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான திறவுகோலாகும். இது எபோலா வைரஸுக்கும் பொருந்தும். கீழே எபோலா வைரஸ் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: உடலில் புழுக்கள் அதிகம் இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரஸ் தொற்று

வைரஸ் தொற்று

எபோலா ஒரு வைரஸ் தொற்று. இது எபோலா வைரஸ் என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக ஜைர் எபோலா வைரஸ் (EBOV) என்று அழைக்கப்படுகிறது.

விலங்குளையும், மனிதர்களையும் பாதிக்கும்

விலங்குளையும், மனிதர்களையும் பாதிக்கும்

பொதுவாக சில வைரஸ்கள் விலங்குகளை மட்டுமே பாதிக்கும், சில மனிதர்களை மட்டுமே பாதிக்கும். இருப்பினும், வேறுபட்ட வகுப்பைச் சேர்ந்த வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் செல்லக்கூடும். எபோலா வைரஸ் மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கும். மேலும் ஆபத்தான நோய்களையும் கூட ஏற்படுத்தும்.

உயிரைப் பறிக்கும் கொடியது

உயிரைப் பறிக்கும் கொடியது

எபோலா வைரஸ் கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும். அறிக்கைகளின் படி, இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் உயிர் வாழ முடியவில்லை.

எபோலாவின் அறிகுறிகள்

எபோலாவின் அறிகுறிகள்

பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. எபோலா வைரஸ் மட்டும் விதிவிலக்கல்ல. இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் முதல் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. எபோலா நோய்த்தொற்று ஏற்பட்டால் தொண்டைப் புண், வயிற்றுப்போக்கு, தசை வலி மற்றும் தலை வலி போன்றவை அறிகுறிகளாக தென்படும்.

எப்படி பரவும்?

எப்படி பரவும்?

எபோலா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் பரவாது. ஆனால் தொற்று ஏற்பட்டவர்களின் உடல் திரவங்கள் மூலமாக மட்டுமே பரவும். எச்சில், இரத்தம், மலம், யோனி திரவங்கள் போன்றவை வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும். இவற்றுடன் ஆரோக்கியமானவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guinea Reports First Ebola Outbreak Since 2016: Facts About The Ebola Virus

The Ebola virus has been around for decades and can cause serious illness which can also result in death. Here are 5 important facts you must know about the Ebola virus.
Desktop Bottom Promotion