Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!
தொடர் இருமலுடன், மூக்கு பகுதியில் சளியின் துர்நாற்றம் வீசினால், அந்த துர்நாற்றம் நிறைந்த சளியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் வெளியேற்றலாம்.
மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு பாராமல் பனி நாள் முழுவதும் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிகப் பனிப்பொழிவால் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக இருமலால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும். நீங்கள் இப்படி தொடர் இருமலுடன், மூக்கு பகுதியில் சளியின் துர்நாற்றம் வீசினால், அந்த துர்நாற்றம் நிறைந்த சளியை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் வெளியேற்றலாம். உங்களுக்கு நெஞ்சு மற்றும் தொண்டையில் உள்ள சளியை எளிய வழியில் வெளியேற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

வழி #1
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சுவாசக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களின் கலவையும் சளி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:
* ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த கலவையை தினமும் மூன்று முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும்.

வழி #2
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் pH அளவை சீராக்கும் மற்றும் சுவாசக் குழாயில் தேங்கியுள்ள சளியை இளகச் செய்வதோடு, சளி உருவாவதைத் தடுக்கும்.
இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள பிரச்சனை அனைத்தும் குணமாகும்.

வழி #3
இஞ்சி, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் உள்ள சளியை நீக்கக்கூடியது. ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சளி நீக்க பண்புகள் உள்ளன. அத்தகைய இஞ்சியை ஒருவர் தினமும் 3-4 துண்டுகள் உட்கொண்டு வாந்தாலோ அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் 2 கண் குடித்து வந்தாலோ, இறுக்கமடைந்த சளி இளகி வெளியேறும்.

வழி #4
தேவையான பொருட்கள்:
* தேன் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* இஞ்சி - 6-7 துண்டுகள்
* மிளகு தூள்- 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.
* பின் மூடியைக் கொண்டு பாத்திரத்தை மூடி, மிதமான தியில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த அற்புதமான டீ உடலில் உள்ள சளியை காணாமல் போகச் செய்யும்.



Click it and Unblock the Notifications
