Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பாலின அடையாள கோளாறு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
பாலின அடையாள கோளாறு கொண்ட நபர் அவருடைய உடலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பதைக் கொண்டிருப்பார் மற்றும் அவருடைய மாற்றத்தை இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்.
பாலின டிஸ்போரியா என்பது முன்னதாக "பாலின அடையாள கோளாறு" என்று அழைக்கப்பட்டது. ஒரு ஆண் அல்லது பெண் தன்னுடைய உண்மையான உயிரியல் சார்ந்த அடையாளம் குறித்த அசௌகரிய உணர்வு கொள்வது இந்த பாதிப்பின் தன்மையாகும். உதாரணத்திற்கு, ஒரு நபர் உடலியலில் ஆணின் தன்மைகளைக் கொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய உண்மையான அடையாளமாக பெண்மையை கருதுவது.

பாலின அடையாள கோளாறு கொண்ட நபர் அவருடைய உடலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பதைக் கொண்டிருப்பார் மற்றும் அவருடைய மாற்றத்தை இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார். தன்னுடைய சொந்த உடல் தொடர்பான ஒரு அசௌகரிய உணர்வு, மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
இந்த பாதிப்பைக் கொண்ட ஒரு நபருக்கு எல்லா விதங்களிலும் ஒருவித அதிருப்தி இருக்கும். அதனால் அவருடைய சமூகம் சார்ந்த வாழ்க்கையில் இடையூறு உண்டாகலாம். ஆனால் இது ஒரு மனம் சார்ந்த நோய் இல்லை. மாறாக, ஒருவித மனஅழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு சார்ந்த பிரச்சனை ஆகும். இதனை அவர் அனுபவிக்கலாம்.
பாலின டிஸ்போரியா என்பது அந்த நபரின் அடையாளத்தை விட அவரின் அசௌகரியத்தை ஒரு முக்கிய பிரச்சனையாக பார்க்கிறது. பாலின டிஸ்போரியா கொண்ட நபருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

பாலின டிஸ்போரியா பிரச்சனைக்கான அறிகுறிகள்:
பாலின டிஸ்போரிய பாதிப்பு இருப்பதை உறுதி செய்ய கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் 6 மாதங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
* உடலியல் சார்ந்த தன்மை ஆணாக இருந்தாலும் பெண்ணுக்கான உணர்வு இருப்பது. அதே போல், பெண்ணுக்குரிய உடல் அம்சங்கள் இருந்த போது உணர்வு ரீதியாக ஒரு ஆணாக இருப்பது.
* அவர்கள் உணர்வு எந்த பாலினத்தைச் சேர்ந்ததோ அதே பாலினத்தில் நண்பர்களைத் தேர்வு செய்வது.
* அவர்கள் உடல் அடையாளம் சார்ந்த பாலினத்திற்காக செய்யப்பட்ட பொம்மைகள், உடைகள் மற்றும் இதர பொருட்களை மறுப்பது.
* ஆண் என்ற உணர்வு கொண்ட பெண், பெண்ணுக்கு ஏற்ற முறையில் சிறுநீர் கழிக்க மறுப்பது
* அவர்களின் உணர்வில் இருக்கும் பாலினத்தைச் சேர்ந்த பிறப்புறுப்புகள் வேண்டும் என்று நினைப்பது
* பிறக்கும்போது அவர்களை அடையாளம் காட்டிய பாலினத்திற்கான குணங்களை களைய நினைப்பது
* சிறு பெண்ணாக இருக்கும் போது, வளர்ந்தவுடன் தான் நினைக்கும்படி ஒரு ஆணாக மாறமுடியும் என்று நம்புவது
* பூப்பெய்தலுக்கு பிறகு உடலின் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரிய அசௌகரியத்தை உணர்வது.
* குளிக்கும்போது அல்லது உடை மாற்றும் போது, தங்களுடைய பிறப்புறுப்பை பார்த்து மிகவும் வருந்துவது .

அவர்கள் சவால்கள் என்ன?
அசௌகரியம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பது மற்றும் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வு போன்றவை பல்வேறு மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் உடல் வடிவம் குறித்து தொடர்ச்சியான கருத்து வேறுபாடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருவாகும் அபாயத்தை உண்டாக்கலாம்.

ஒருவித மன அழுத்தம்
இந்த பாதிப்பைக் கொண்ட பதின் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு, மற்ற பாலினத்தின்மீது அதிக ஈடுபாடு இருப்பதால் , அவர்களுடைய தினசரி செயல்பாடுகள் மற்றும் உறவுகளில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகலாம். குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பாலினத்தின் உடைகளை உடுத்த வேண்டும் என்று சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்துவதால் ஒரு வித அழுத்தம் உண்டாகும். இதனால் உணர்வு ரீதியாகவும், குணநலன்களிலும் அவர்களுக்கு மாற்றம் உண்டாகலாம். மேலும் பதட்டம், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படலாம்.

தனிமைப்படுத்தப்படுவது
மற்றவர்களிடமிருந்து அவர்களுக்கு ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும். அவர்கள் எந்த ஒரு மோசமான நடத்தையையும் கொண்டிருக்கவில்லை, சற்று வித்தியாசமாக பிறந்திருக்கின்றனர் , அதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான சிகிச்சை என்ன?
பாலின டிஸ்போரியா உள்ளவர்களுக்கு அவர்கள் உணரும் விதத்தை மாற்ற சிகிச்சை தேவையில்லை, அதற்கு பதிலாக, அதனுடன் வரும் பிரச்சினைகளுக்கு அவர்கள் சிகிச்சை பெற வேண்டும். இந்த நிலை, மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம். அதனை ஒரு நிபுணர் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உளவியல் நிபுணர்களிடம் பாலின டிஸ்போரியா தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவி பெற முடியும்.



Click it and Unblock the Notifications