Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பெண்களே! உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!
பெண்களில் கருவுறாமைக்கு பல காரணிகள் உள்ளன. ஆரோக்கியமற்ற மற்றும் மன அழுத்த வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவை, இவை அனைத்தும் பெண
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் மகிழ்ச்சி, எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எதிர்நோக்கும் ஒன்று. கர்ப்பம் தரிப்பது ஒரு இயற்கையான செயல்முறையாக இருக்கும்போது, சில பெண்கள் கருவுறாமை பிரச்சினை காரணமாக பல தடைகளை அனுபவிக்கின்றனர். கருவுறாமை என்பது இன்று பெண்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. கருப்பைகள் வெளியிடும் முட்டைகள் ஃபலோபியன் குழாய்களை அடையாமல் போகும் நிலை ஏற்படுவதால், கருவுறுவது கடினமாகிறது.

சில நேரங்களில், முட்டை கருவுறுதலைத் தக்கவைக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்காது அல்லது சில சமயங்களில் ஃபலோபியன் குழாய்களில் முட்டை சுதந்திரமாக பயணிக்க போதுமான வழி இருந்திருக்காது. இவை அனைத்தும் பெண்கள் கருத்தரிப்பதை கடினமாக்குகிறது. இதற்கு உணவு முறையும், பழக்கவழக்கும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் கருவுறுதல் ஆரோக்கியத்திற்கு மோசமானவை. அவை முழு உடலிலும் அழிவை ஏற்படுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு எம்.எஸ்.ஜி மற்றும் உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இவை உடலுக்கு மிகவும் மோசமானவை. அவை நச்சு நிறைந்தவை. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது பெண்கள் கருத்தரிப்பதை தாமதமாக்குகிறது.

காஃபின்
ஒரு நாளைக்கு 3 கப் காபிக்கு மேல் குடிக்கும் பெண்கள் கருத்தரிக்க 50% குறைவான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், கூடுதல் காஃபின் பதப்படுத்துவதில், நம் கல்லீரல் கடினமாக உழைக்க வேண்டும். இது நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதன் செயல்திறனையும் குறைக்கிறது. கால்சியம் குறைபாடுள்ள ஒரு உடல் எளிதில் கருத்தரிக்க முடியாது.

சர்க்கரை
இனிப்புகளை முற்றிலும் எடுக்காமல் இருக்க உங்களுக்கு இன்னும் ஒரு காரணம் தேவைப்படுவது போல, ஒரு உணவில் அதிகப்படியான சர்க்கரை உங்கள் உடலில் உள்ள மற்ற அனைத்து ஹார்மோன்களையும் மந்தமாகச் செய்கிறது. இது இனப்பெருக்க ஹார்மோன்கள் செயல்படுவதை கடினமாக்குகிறது. ஆரோக்கியமான விந்தணுக்களால் கருத்தரிக்கப்படுவதற்காக, முட்டையை ஃபலோபியன் குழாய்களில் வெளியிடுவதற்கு இந்த ஹார்மோன்கள் காரணமாகின்றன.

சாக்லேட்
அனைத்து சாக்லேட் பிரியர்களுக்கும் ஒரு மோசமான செய்தி, உங்களுக்கு பிடித்த சாக்லேட் உண்மையில் நீங்கள் கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். காஃபின் பல ஆதாரங்களில் சாக்லேட் ஒன்றாகும். நாம் விரும்பி எளிதில் சாப்பிடக்கூடியது சாக்லேட். எனவே அனைத்தையும் ஒன்றாகத் தவிர்ப்பது நல்லது. சாக்லேட்டைத் தவிர்க்க மற்றொரு காரணம் அதன் சர்க்கரை உள்ளடக்கம். சில நேரங்களில் நல்ல தரம், இனிக்காத டார்க் சாக்லேட்டை சாப்பிடுவது பரவாயில்லை என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சோயா பீன் மற்றும் சோயா தயாரிப்புகள்
சைவ உணவு உண்பவர்களுக்கு சோயா பீன்ஸ் மிகவும் பிடித்த ஒன்று. இது அவர்களின் உணவு திட்டங்களில் பெரியதாக இருக்கும். உங்கள் உணவில் அதிகப்படியான சோயா புரதம் சில கடுமையான கருவுறாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும். சோயா பீன்ஸ் ஈஸ்ட்ரோஜன்கள், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்ற தாவர வடிவத்தைக் கொண்டுள்ளது. இது கர்ப்பத்திற்கு எதிரான ஹார்மோன் ஆகும். உடலில் அதிகமான ஈஸ்ட்ரோஜன் மற்ற ஹார்மோன்களையும் ஏற்றத்தாழ்வு செய்கிறது. இது கருத்தரிப்பதற்கு ஒரு முட்டையை வெளியிடுவதை தாமதப்படுத்துகிறது.

உயர் பாதரச மீன்
கானாங்கெளுத்தி, சுறா மற்றும் வாள் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு பாதரசம் உள்ளது. அவை பெரும்பாலும் நம் உடலால் எளிதில் அகற்றப்படுவதில்லை. இது வளரும் குழந்தையின் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாதரதம் உடலில் சேமிக்கப்படும் போக்கைக் கொண்டுள்ளது, இதன் விளைவாக அதிக பிறப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் இது குறைந்த பிறப்பு எடைக்கும் பங்களிக்கின்றன.

ஆல்கஹால் மற்றும் புகைத்தல்
பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு ஆல்கஹால் மிகவும் மோசமானது என்று அறியப்படுகிறது. இது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. மேலும், அதிக எடை அதிகரிக்க இது வழிவகுக்கிறது. கல்லீரல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தும். இவை அனைத்தும் கருவுறாமைக்கு மிகவும் பங்களிக்கின்றன. இதேபோல், புகைபிடித்தல் கருமுட்டைகளின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. இது மரபணு அசாதாரணங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. சுருக்கமாக, இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிடுவதும், நல்ல உணவு மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் உடனடியாக நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான உணவு
பெண்களில் கருவுறாமைக்கு பல காரணிகள் உள்ளன. ஆரோக்கியமற்ற மற்றும் மன அழுத்த வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவை, இவை அனைத்தும் பெண்கள் கருத்தரிப்பதை கடினமாக்குகிறது. ஆனால், இந்த பிரச்னைய சில உணவு மாற்றங்கள் மூலம் தீர்க்க முடியும். கருத்தரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை பெண்கள் பெரும்பாலும் உணரவில்லை. நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு நல்ல பயனளிக்கும்.



Click it and Unblock the Notifications











