For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள்தான் சிறுநீரகக் கற்களை உருவாக்கி உங்களை வதைக்கிறது தெரியுமா?

சிறுநீரக கல் ஏற்பட காரணம் நீரிழப்பு, அதிகப்படியான ஆல்கஹால், பரம்பரை, அதிக எடை, செரிமான பிரச்சினைகள் மற்றும் முறையற்ற உணவு ஆகியவை அடங்கும்.

|

பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் குறைபாடுகளில் ஒன்று சிறுநீரகக் கற்கள் ஆகும். சிறுநீரக கற்கள் நம் சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய அல்லது உருவாகக்கூடிய கற்களின் கட்டியாகும். அடிப்படையில் இது நம் உடலில் ஏற்படும் கனிம மற்றும் கரிம பொருட்களின் அதிகரிப்பாகும், அதனால்தான் இது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Foods That Trigger Kidney Stones

சிறுநீரக கல் ஏற்பட காரணம் நீரிழப்பு, அதிகப்படியான ஆல்கஹால், பரம்பரை, அதிக எடை, செரிமான பிரச்சினைகள் மற்றும் முறையற்ற உணவு ஆகியவை அடங்கும். இதற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும் பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம், குமட்டல், காய்ச்சல் மற்றும் தீவிரமான சோர்வு ஆகியவை ஆகும். இந்த பதிவில் நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை தூண்டும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் அதிக புரதம் உள்ளது மற்றும் யூரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.இறைச்சிகளின் ஈரல்களில் அதிகளவு யூரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாக யூரிக் அமிலத்தின் அதிக உள்ளடக்கம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

சோடாக்கள் மற்றும் பிற ஆற்றல் பானங்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை தவறாமல் உட்கொள்வது சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்களை ஊக்குவிக்கும் பாஸ்போரிக் அமிலம் இந்த பானங்களில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

வெள்ளை அரிசி, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்கின்றன, இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் அவை சிறுநீரக கற்கள் உருவாகத் தூண்டும்.

MOST READ: உலகம் முழுவதும் ஆண்கள் உடலுறவின் போது செய்யும் தவறுகள் இவைதானாம்... இனிமேலாவது பண்ணாம இருங்க...!

காஃபைன்

காஃபைன்

அதிக அளவு காஃபின் உட்கொள்வது சிறுநீரகத்தில் கால்சியம் சுரக்கப்படுவதை அதிகரிக்கிறது, இது சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சிறுநீரக கற்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான நீரிழப்புக்கு காஃபைன் காரணமாகும்.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள் வழக்கமாக உட்கொள்வது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம். ஆராய்ச்சியின் படி, செயற்கை இனிப்பு பானங்களை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து 50 சதவீதம் அதிகமென கூறுகிறது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது சிறுநீரகங்களையும் கல்லீரலையும் சேதப்படுத்தும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

உப்பு

உப்பு

உப்பில் அதிகளவு சோடியம் இருப்பதால், இது இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோயை எழுப்புகிறது. உப்பு உட்கொள்வதைக் குறைப்பது சிறுநீரகக் கற்களை ஏற்படாமல் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

MOST READ: இந்த பிரச்சினைகள் இருந்தால் பெண்களுக்கு உடலுறவின் போது அதிக வலி இருக்குமாம்...!

அதிக ஆக்சலேட் உணவுகள்

அதிக ஆக்சலேட் உணவுகள்

பெரும்பாலான தாவரங்களில் ஆக்சலேட் இருக்கிறது, அதனால் அதனை முற்றிலுமாக தவிர்ப்பது கடினமாகும். கீரைகள், ருபார்ப், பாதாம், முந்திரி, கோகோ பவுடர், வெண்டைக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் அதிகளவு ஆக்சலேட் உள்ளது. இந்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Trigger Kidney Stones

Read to know which foods can trigger kidney stones.
Desktop Bottom Promotion