For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…!

விந்தணுக்களின் தரம் குறைவது உண்மையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வில், கடந்த 38 ஆண்டுகளில் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை 59 சதவீதம் குறைந்துள்ளது.

|

நமது ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் நமது உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை செய்யும் போது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் அவற்றின் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் சாப்பிடுவது இன்னும் முதலிடத்தைப் பிடிக்கும். எனவே, நீங்கள் ஒரு குழந்தையைப் பெற திட்டமிட்டால், உங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

foods-that-decrease-your-sperm-health

நீங்கள் கருத்தரிக்கச் சிரமப்பட்டிருந்தால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்கள் கர்ப்பமாக இருக்க முயற்சித்தால், என்ன செய்ய வேண்டும் என்று நிறைய பேர் கூறுவார்கள். ஆனால், ஆண்களுக்கு இதுபோன்று ஏதும் கூறுவதில்லை. ஆண்கள் சாப்பிடுவதும் மிக முக்கியம். ஏனென்றால், சில உணவுகள் விந்தணுக்களின் தரத்தை குறைக்கிறது என்று அறியப்படுகிறது, மேலும் அதன் எண்ணிக்கையையும் சேதப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்கள் கவனிப்பதில்லை

ஆண்கள் கவனிப்பதில்லை

கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனிதனின் விந்தணுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த உண்மை அனைத்து ஆண்களையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இருப்பினும், விந்தணு ஆரோக்கியம் என்பது பெரும்பாலான ஆண்களின் மனதில் கடைசியாக இருக்கிற ஒரு விஷயமாக இருக்கிறது. ஆண்கள் உண்ணும் உணவு விந்தணுக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை.

MOST READ:உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா?

விந்தணுக்களின் தரம் குறைவது

விந்தணுக்களின் தரம் குறைவது

விந்தணுக்களின் தரம் குறைவது உண்மையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வில், கடந்த 38 ஆண்டுகளில் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை 59 சதவீதம் குறைந்துள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதால், பிற்காலத்தில் குழந்தைகளைப் பெற்ற ஆசைப்பட்டாலும், சில தம்பதிகள் கருவுறாமல் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். வெகு ஆண்டுகளாக உங்கள் மனைவி கர்ப்பம் ஆகவில்லை என்றால், குறை அவர்களிடம்தான் இருக்கிறது என்றில்லை. உங்களின் விந்தணுவின் தரம் குறைந்திருப்பதும் காரணமாக இருக்கும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் விரைவாக வீழ்ச்சியடைகிறது என்பது யாருக்கும் தெரியாது. சிலர் மடியில் மடிக்கணினிகளை வைத்து பயன்படுத்துவதால் விந்து மறைந்து விடுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். மற்றவர்கள் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் செல்போன்களால் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு சிலர் அதிக மது அருந்துவது அல்லது உடல் பருமன் ஒரு காரணியாகும் என்று கூட கூறுவார்கள்.

உணவு விந்தணுக்களைக் கொல்லுமா?

உணவு விந்தணுக்களைக் கொல்லுமா?

பல காரணிகளால் விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கையில் குறைவு ஏற்படக்கூடும் என்று தெரியும். ஆனால், நீங்கள் உண்ணும் உணவு விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதன்படி, சில ஆய்வுகள் சில உணவுகளை உட்கொள்வது விந்தணுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றன. இதில், நல்ல செய்தி என்னவென்றால், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளும் இங்கு இருக்கின்றன.

MOST READ: ‘அந்த ' நேரத்தில் ஆண்கள் செய்யுற இந்த விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம்...!

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

சமீபத்திய ஆய்வுகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உட்கொள்வதால் அனைத்து வகையான நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சி போன்றவை அடங்கும். விந்தணுக்களின் விஷயத்தில், பல ஆய்வுகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கின்றன. இந்த உணவுகள் விந்தணுக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்கவில்லை. ஆனால் இதன் விளைவு நேர்மறையானதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

டிரான்ஸ் கொழுப்புகள்

டிரான்ஸ் கொழுப்புகள்

டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய உணவுகளை உட்கொண்டால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், 2011ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஆய்வில் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் தாவரங்களிலிருந்து வரும் ஈஸ்ட்ரோஜன் போன்ற கலவைகள் உள்ளன. ஈரான், போஸ்டன்னில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகப்படியான சோயா பொருட்களை உட்கொள்பவருக்கு விந்து செறிவு குறையக்கூடும் என்று முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ:காதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா?... அப்ப இத படிங்க...!

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனோல் ஏ (பிபிஏ)

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனோல் ஏ (பிபிஏ)

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனோல் ஏ (பிபிஏ)-வை நேர்மையாக நாம் உண்ண முடியாது. ஏனென்றால், இவை உணவுகள் அல்ல. ஆனால், இவற்றை நாம் மறைமுகமாக உட்கொண்டுதான் இருக்கிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இவை இறைச்சி மற்றும் மீன்களிலும் கூட இருக்கின்றன. பெரும்பாலான உணவு பேக்கேஜிங் மற்றும் கேன்களில் பிஸ்பெனோல் ஏ (பிபிஏ) உள்ளது.

விந்தணுக்களின் செறிவு

விந்தணுக்களின் செறிவு

நாம் உண்ணும் உணவில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனோல் ஏ (பிபிஏ) இருக்கின்றன. பிபிஏ மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குள் உள்ள ரசாயனங்கள் இரண்டும் ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கும் சினோ ஈஸ்ட்ரோஜன்கள் ரசாயனங்களாக செயல்படுகின்றன. சோயாவில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களைப் போலவே, சினோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணுக்களின் செறிவை அழிக்கக்கூடும். மேலும், இவை உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும்.

அதிக கொழுப்பு பால் பொருட்கள்

அதிக கொழுப்பு பால் பொருட்கள்

பால், கிரீம் மற்றும் சீஸ் ஆகியவற்றை விரும்பும் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. முழு கொழுப்புள்ள பால் ஈஸ்ட்ரோஜனைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க மாடுகளுக்கு வழங்கப்படும் ஸ்டெராய்டுகள் காரணமாக விந்தணுக்களின் தரம் குறைவாக இருக்கலாம். ஆதலால், முழு கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வதை நிறுத்திவிட்டு, பாதாம் பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலை உட்கொள்ளலாம்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆண்களே, ஆல்கஹால் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகளவு மதுவு அருந்துவதால், உடல் நலப் பிரச்சனைகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது. ஆல்கஹால் நுகர்வு, மிதமான அளவில் கூட உங்கள் செக்ஸ் இயக்கத்தை கணிசமாகப் பாதிக்கும். மறுபுறம், கனமான மற்றும் சீரான குடிப்பழக்கம் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அழிக்கும் மற்றும் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். இந்த உணவுகளைத் தவிர்த்து, விந்தணுக்களுக்கு சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that Decrease your sperm health

Here we talking about the list of foods that decrease your sperm health
Story first published: Thursday, January 9, 2020, 16:03 [IST]
Desktop Bottom Promotion