For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல் புற்றுநோய் வராம தடுக்க இதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பா உங்க உணவில் சேர்த்துக்கோங்க போதும்...!

|

பல நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு புற்றுநோய் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்கள் அதிகமாக இருப்பதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க இன்னும் சிரமப்படுகிறார்கள், ஆனால் வல்லுநர்கள் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பிற தேர்வுகளை முக்கிய காரணங்களாக அடையாளம் கண்டுள்ளனர்.

உதாரணமாக, புகைபிடித்தல் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும், இது சில நேரங்களில் கடுமையாக ஆபத்தானது. இருப்பினும், புற்றுநோய்களைத் தடுக்க சில வழிகள் உள்ளது. உதாரணமாக உங்கள் பால் உட்கொள்ளலை அதிகரிப்பது குடல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். இது பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் செரிமான அமைப்பை பாதிக்கிறது, குறிப்பாக பெரிய குடல் மற்றும் மலக்குடல் போன்ற உறுப்புகளை பாதிக்கும். குடல் புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புற்றுநோயைத் தடுக்க பால்

குடல் புற்றுநோயைத் தடுக்க பால்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பால் பொருட்களை சாப்பிடுவது குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று கூறுகிறது. இருப்பினும், பூண்டு, வெங்காயம், மீன், தேநீர் அல்லது காபி போன்றவை நோயை ஏற்படுத்துவதைத் தடுக்க முடியுமா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆய்வில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளை ஆராய்ந்தனர் மற்றும் குடல் புற்றுநோய் அபாயத்தில் உணவு மற்றும் மருத்துவ காரணிகளின் தாக்கத்தை மதிப்பிடும் முறையான மெட்டா பகுப்பாய்வுகளை மதிப்பாய்வு செய்தனர். பால் மட்டுமின்றி வேறுசில உணவுகளும் குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளது. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தயிர்

தயிர்

தயிர் புரோபயாடிக்குகளில் நிறைந்துள்ளது, இது உங்கள் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது திறமையான செரிமானத்தை உறுதி செய்கிறது, இது இறுதியில் வீக்கம் அல்லது புற்றுநோயைக் கூட குறைக்கிறது.

இந்த டயட்டை கடினமா பாலோ பண்ணுனதால நடிகையின் உயிரே போயிருச்சாம்... உஷாரா இருங்க...!

கீரை

கீரை

சமீபத்திய ஆய்வுகளின்படி, கீரை மெக்னீசியத்தின் ஒரு நல்ல மூலமாகும், இது குடல் புற்றுநோயின் அபாயத்தை குறிப்பாக குறைக்கிறது. கப் கீரையில் 78 மி.கி மெக்னீசியம் உள்ளது. கீரை நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பழங்கள்

பழங்கள்

வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி போன்ற சில பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. ஃபைபர் பெரும்பாலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உயர் ஃபைபர் உணவும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக அதிகரிப்பதை ஃபைபர் தடுக்கிறது.

பாதாம்

பாதாம்

எடை இழப்புக்கான ஆரோக்கியமான உணவுகளில் பாதாம் முக்கியமான ஒன்றாகும். கூடுதலாக, அவை குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த, பாதாம் சீரான உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. வைட்டமின் நிறைந்த இந்த உணவு தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

உலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்... அதிர்ச்சியளிக்கும் வரலாறு..!

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

ராஜ்மா அல்லது சுண்டல் போன்ற பருப்பு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை, அவை ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன. இருப்பினும், அத்தகைய பயறு வகைகளுடன் கூடிய கனமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாண்ட்விச்கள், சாலடுகள் போன்றவற்றில் அவற்றைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Can Prevent Bowel Cancer

Check out the list of foods that can prevent bowel cancer and keep your gut healthy.