For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

பலவீனமான சிறுநீரகங்களை வலுப்படுத்த சில இயற்கை வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட சில எளிய இயற்கை வழிகளைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

|

சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாது. ஏனெனில் சிறுநீரகங்கள் தான் நமது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றி, உடலில் நீர், உப்புக்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் அளவை சமநிலையில் பராமரிக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 55 கேலன் இரத்தத்தை வடிகட்டி, இரண்டு குவார்ட்ஸ் கழிவுப் பொருட்கள் மற்றும் நீரை சிறுநீரகங்கள் வெளியேற்றுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியை செய்யும் சிறுநீரங்கள் பலவீனமாக இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய எவ்வித குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லை.

Effective Home Remedies To Improve Weak Kidneys In Tamil

சிறுநீரகங்களின் செயல்பாடானது சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். ஒருவேளை நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தால், சிறுநீரகங்களானது அதன் செயல்பாட்டை படிப்படியாக இழக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பிரச்சனை இருந்தால் அல்லது சிறுநீரகங்கள் மிகவும் பலவீனமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது, பசியின்மை, கண் வீக்கம், வாய் துர்நாற்றம், தசை பிடிப்புகள் போன்ற அறிகுறிகளை அதிகம் அனுபவிக்க நேரிடும். பலவீனமான சிறுநீரகங்களை வலுப்படுத்த சில இயற்கை வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட சில எளிய இயற்கை வழிகளைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நீரை அருந்தவும்

அதிக நீரை அருந்தவும்

பெரும்பாலும் சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் போதுமான அளவு நீர் இல்லாமை தான். யார் ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், தினமும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் நீரை அருந்த வேண்டும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாகும். வைட்டமின் சி சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க உதவுகிறது. எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, வெள்ளரிக்காய், ப்ராக்கோலி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்கள் சிறுநீரில் அமிலத்தின் அளவைப் பராமரிக்க உதவுவதோடு, சிறுநீரகங்களினுள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன. மேலும் ஆப்பிளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சிறுநீரக பிரச்சனைகள் அல்லது தொற்றுக்களை திறம்பட சரிசெய்ய உதவுகின்றன. எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த தினம் ஒரு ஆப்பிளை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ராஜ்மா

ராஜ்மா

ராஜ்மாவில் புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவற்றில் உள்ள கரையக்கூடிய மற்றம் கரையாத நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ராஜ்மா சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற வகையில் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸைக் கொண்டது. இது தவிர ராஜ்மாவில் உள்ள வைட்டமின் பி, சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரக செயல்பாட்டை சீராக்கவும் உதவுகின்றன.

தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரில் சிட்ரேட்டுகளின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஒருவேளை சிறுநீரகங்களில் கற்கள் இருந்தால் அவை கரைந்து எளிதில் வெளியே வந்துவிடும். எனவே சிறுநீரக ஆரோக்கியத்திற்காக தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம்

பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை நீருடன் உட்கொள்ளும் போது, சிறுநீரகங்களில் உள்ள கற்கள் எளிதில் கரைந்து வெளியேறிவிடும். இதற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து தான் காரணம். இந்த நார்ச்சத்து தான் சிறுநீரக கற்களைக் குறைக்க உதவுகிறது. இது தவிர பேரிச்சம் பழத்தில் மக்னீசியம், காப்பர், மாங்கனீசு மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களை சரியான நிலையில் வைத்திருக்க உதவி புரிகிறது.

செலரி ஜூஸ்

செலரி ஜூஸ்

செலரி ஜூஸ் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. செலரி ஜூஸில் உள்ள கனிம உப்புக்கள் சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்கவும், மேம்படுத்தவும் உவுகின்றன. எனவே உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் அல்லது சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வரக்கூடாது என்று விரும்பினால், உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் செலரி ஜூஸைக் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies To Improve Weak Kidneys In Tamil

In this article, we have shared some of the effective home remedies to improve weak kidneys. Read on to know more...
Story first published: Wednesday, February 1, 2023, 14:59 [IST]
Desktop Bottom Promotion