Latest Updates
-
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது?
ஆண்களே! நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா? இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...
படுக்கையில் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது பாலியல் ஆற்றல் குறையாமல் இருக்க ஓட்ஸ், வைட்டமின் பி உணவுகள், ப்ரௌன் ரைஸ், சோயா பீன்ஸ் போன்றவை உதவி புரியும். அதோடு ஒருசில பழங்களும் பாலுணர்ச்சியைத் தூண்ட
உங்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டுமா? குறிப்பாக உறவில் ஈடுபடும் போது ஆற்றல் குறையாமல் இருக்கணுமா? அப்படியானால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள். உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் தங்களது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், தானாக உங்களின் பாலியல் ஸ்டாமினா அதிகரிக்கும்.

அப்படி படுக்கையில் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது பாலியல் ஆற்றல் குறையாமல் இருக்க ஓட்ஸ், வைட்டமின் பி உணவுகள், ப்ரௌன் ரைஸ், சோயா பீன்ஸ் போன்றவை உதவி புரியும். அதோடு ஒருசில பழங்களும் பாலுணர்ச்சியைத் தூண்டி பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
உங்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது, பாலியல் ஸ்டாமினா குறையாமல் இருக்க வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களைக் குடியுங்கள். இந்த ஜூஸ்கள் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடுவதோடு, பாலியல் ஸ்டாமினாவை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும்.

பீட்ரூட் ஜூஸ்
தினமும் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். பீட்ரூட்டில் மற்ற காய்கறிகளை விட 20 மடங்கு அதிகமாக டயட்டரி நைட்ரேட்டுகள் உள்ளன. அதோடு பீட்ரூட்டில் போரான் என்னும் கனிமச்சத்து அதிகமாக உள்ளது. இது செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. கூடுதலாக பீட்ரூட் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் இதன் விளைவாக பாலியல் ஸ்டாமினாவும் அதிகரிக்கும்.

பால்
இந்தியாவில் முதலிரவன்று ஏன் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் என்ற தெரியுமா? ஏனெனில் உறவில் ஈடுபடும் முன் பால் குடித்தால், அது படுக்கையில் நீண்ட நேரம் களைப்பின்றி சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் தான். பால் எலும்புகளுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, பாலியல் ஆற்றலை மேம்படுத்தவும் தான். மொத்தத்தில் பால் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் சிறப்பான பானம்.

மாதுளை ஜூஸ்
உலகில் ஏராளமான மக்கள் தினமும் மாதுளை ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். மாதுளை ஜூஸானது பாலியல் ஸ்டாமினாவை அதிகரிக்கக்கூடிய பானம். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பாலியல் செயல்பாடுகளின் போது ஆற்றல் குறையாமல் நீடித்து இருக்கவும் உதவுகிறது.

அவகேடோ ஜூஸ்
அவகேடோ ஜூஸ் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அவகேடோ பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸில் இருந்து பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் மற்றும் இது உடலின் ஆற்றலை மேம்படுத்தும். பெண்கள் அவகேடோ ஜூஸைக் குடித்தால், அவர்களின் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸ் பாலுணர்ச்சியை அதிகரித்து படுக்கையில் நீண்ட நேரம் ஆற்றலுடன் செயல்பட உதவும் என்று சொல்வதைக் கேட்பதற்கு நம்பமுடியாதவாறு இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், அந்த மாயங்களை நிகழ்த்தக்கூடியவை. ஆகவே தான் கற்றாழை ஜூஸைக் குடித்தால், உடலில் பாலியல் ஆற்றல் இயற்கையாக அதிகரிக்கிறது.

வாழைப்பழ மில்க் ஷேக்
வாழைப்பழ மில்க் ஷேக் செக்ஸ் ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்ய உதவும். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் தேன் கலந்து குடித்தால், படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக செயல்பட முடியும். திருமணமான புது தம்பதிகள் இந்த மில்க் ஷேக்கைக் குடிப்பது, அவர்களது தாம்பத்ய வாழ்க்கையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் L-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது விறைப்புத்தன்மைக்கு ஏற்ற வலிமையை அளிக்கக்கூடியது. தர்பூசணியில் உள்ள இந்த அமினோ அமிலம் உடலினுள் சென்ற பின் L-அர்ஜினைனாக மாற்றமடைவதோடு, நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டிவிட்டு, ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக உறவின் போது நீண்ட நேரம் துணையுடன் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.



Click it and Unblock the Notifications











