Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கல்லீரலில் சேர்ந்துள்ள அழுக்கை வெளியேற்றணுமா? அப்ப இத நைட் டைம்-ல குடிங்க...
கல்லீரலை சுத்தம் செய்வதற்கு குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் தான் முடியும். இப்போது கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தமாக்க உதவும் பானங்களைக் காண்போம்.
உடலின் மிக முக்கிய உறுப்புக்களில் ஒன்று கல்லீரல். இத்தகைய கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஒருவர் மேற்கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் உடலின் பல அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். குறிப்பாக இது ஒருவரது செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இது உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் தற்போது நம்மிடம் உள்ள ஆரோக்கியமற்ற பழக்கங்கள் காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய், காமாலை மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிகிறது.

அதிகப்படியான ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை உண்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது மற்றும் மது அதிகமாக அருந்துவது ஆகியவற்றால் பல நேரங்களில் கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறது. இதனால் கல்லீரலில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து கல்லீரலின் செயல்பாட்டுகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே தான் கல்லீரல் சுத்தம் செய்வது என்பது மிகவும் முக்கியம்.
கல்லீரலை சுத்தம் செய்வதற்கு குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் தான் முடியும். இப்போது கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தமாக்க உதவும் பானங்களைக் காண்போம். இந்த பானங்களை அடிக்கடி குடித்து வந்தால் கல்லீரலில் சேரும் அழுக்குகளை அவ்வப்போது வெளியேற்றிவிடலாம்.

புதினா டீ
புதினா இலைகளில் மெந்தால் மற்றும் மெந்தோபைன் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை தான் சுத்தம் செய்ய உதவுகின்றன. அதோடு இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. எனவே கொதிக்கும் நீரில் சிறிது புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் குடியுங்கள். இதனால் கல்லீரலில் உள்ள அழுக்குகளை அன்றாடம் நீக்கிவிடலாம்.
ட்ரெச்சர் கோலின்ஸ் அரிய நோயால் பாதிப்பு - 6 மாத குழந்தை உயிர்பிழைக்க உதவுங்கள்

மஞ்சள் டீ
பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் மஞ்சள் சக்தி வாய்ந்த பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த வழிகளுள் ஒன்று. ஆகவே தினமும் மஞ்சள் டீயைக் குடியுங்கள். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ
இஞ்சி மற்றும் எலுமிச்சையால் ஆன இந்த டீயில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையைத் தூடும். மேலும் இந்த டீ உடல் வீக்கத்தை நீக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோயைத் தடுக்கிறது. அதற்கு ஒரு துண்டு இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய நீர்
வெந்தய நீரை அடிக்கடி குடித்து வந்தால், அது எடை இழப்பிற்கு உதவுவதோடு, செரிமான மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த நீரை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடித்து வர, அது கல்லீரலில் மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும். அதற்கு ஒரு டம்ளர் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை போட்டு, பதினைந்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இவை மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சீமைச்சாமந்தியை ஒரு டம்ளர் கொதிக்கும் சூடான நீரில் போட்டு மூடி வைத்து பத்து நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் பட்டை டீ
ஓட்ஸில் நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது, இது குடல் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. ஓட்ஸில் பல சத்துக்கள் உள்ளன. எனவே இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் ஒரு சிறந்த நச்சுநீக்கும் பானமாகும்.அதற்கு ஒரு பௌல் கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் ஓட்ஸ் சேர்த்து 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி, அத்துடன் ஒரு ஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications