Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
இந்த பிரச்சனை இருந்தா இளநீர் குடிக்காதீங்க... இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்... உஷார்...
ஆரோக்கியமான இளநீரால் ஒருசில தீமைகளும் ஏற்படும் என்பது தெரியுமா? நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
இயற்கை நம் தாகத்தைத் தணிக்கக் கொடுத்த ஓர் அற்புதமான பானம் தான் இளநீர். இந்த இளநீர் தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் இது உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது மற்றும் அதிகப்படியான உடல் வெப்பத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது.

இவ்வளவு ஆரோக்கியமான இளநீரால் ஒருசில தீமைகளும் ஏற்படும் என்பது தெரியுமா? நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. இளநீரை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதேப் போல் இளநீரை தவறான நேரத்தில் மற்றும் அளவுக்கு அதிகமாக குடித்தால், அது உடலுக்கு நன்மைகளை வழங்குவதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை இளநீர் குடிப்பதால் ஏற்படும் சில தீமைகளைப் பற்றி உங்களுக்கு கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயிற்றுப்போக்கு
ஒருவர் இளநீரை அதிகமாக குடிப்பதால், உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கலாம். அதுவும் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரைக் குடித்தால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

சளி பிடிக்கும்
இளநீர் குளிர்ச்சிப் பண்புகளைக் கொண்டதால், சிலருக்கு விரைவில் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இப்போது யாரெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிக்கக்கூடாது. இளநீரில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மாத்திரைகளை எடுத்து வந்தால், மருத்துவரிடம் கேட்ட பின்னரே இளநீரைக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள்
ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தவர்கள், இளநீரைக் குடிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்ட பின்னரே குடிக்க வேண்டும். ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இளநீர் குடித்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

சிறுநீரக பிரச்சனை
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிக்க விரும்பினால், முதலில் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் மருத்துவர் இளநீரைக் குடிக்கலாம் என்று சொன்னால் மட்டுமே குடிக்க வேண்டுமே தவிர, வேண்டாம் என்று சொல்லியும் குடித்தால், சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.

வயிற்று உப்புசம்
வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது. மேலும் பலர் உடற்பயிற்சி செய்த பின்னர் இளநீரைக் குடிப்பார்கள். ஆனால் இளநீரில் சோடியம் குறைவாக இருப்பதால், ஓரளவு தான் அது தாகத்தைத் தணிக்கும். ஆனால் இளநீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் சாதாரண தண்ணீரைக் குடிப்பது சிறந்தது. ஏனெனில் சாதாரண நீரில் இளநீரை விட அதிக சோடியம் உள்ளது.

இளநீரைக் குடிக்க சிறந்த நேரம் எது?
இளநீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலம் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இளநீரைக் குடிப்பது பல நன்மைகளை வழங்கும். அதில் உடல் சோம்பல் நீங்கி, உடலுக்கு ஏராளமான ஆற்றல் கிடைக்கும். இது தவிர உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்னரும் கூட குடிக்கலாம். இதனால் பல நன்மைகளைப் பெற முடியும். மேலும் இளநீரை உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குடித்தால், உடல் நீரேற்றத்துடன் மற்றும் ஆற்றலுடன் இருக்கும். அதோடு இதில் கலோரிகள் குறைவு மற்றும் எளிதில் ஜீரணமாகும். ஆகவே இதை உடற்பயிற்சிக்கு பின்னரும் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீர் குடிக்கலாம்?
உடலின் தினசரி பொட்டாசிய தேவையின் அளவு 2,600 மிகி முதல் 3,400 மிகி வரை ஆகும். ஒரு இளநீரில் சுமார் 600 மிகி பொட்டாசியம் உள்ளது. ஆகவே இளநீரை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு 2-3 இளநீர் மட்டுமே குடிக்கலாம். எனவே அளவாக இளநீரைக் குடித்து வளமோடு வாழுங்கள்.



Click it and Unblock the Notifications











