For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் காண்டத்திற்கும் பெண்களின் காண்டத்திற்கும் உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் உடலுறவால் ஏற்படும் தேவையற்ற கர்ப்பங்களை தடுக்கவும், உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் என்றால் அது ஆணுறையாகும்.

|

உலகம் முழுவதும் உடலுறவால் ஏற்படும் தேவையற்ற கர்ப்பங்களை தடுக்கவும், உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் என்றால் அது ஆணுறையாகும். கருத்தடைக்கு தற்போது பல வழிகள் இருந்தாலும் ஆணுறை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும்.

Difference Between Male and Female Condoms

பெண்களை பொறுத்தவரை சில பிறப்பு கட்டுப்பாடு முறைகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருத்தடை மாத்திரைகள், IUD போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் முறையாகும். அதேசமயம் ஆணுறை போல பெண்களுக்கான காண்டத்தின் பயன்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. ஆண் ஆணுறைகள் மட்டுமல்ல, பெண் ஆணுறைகளும் உடலுறவின் போது குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்க முடியும். இந்த பதிவில் ஆண்களின் காண்டத்திற்கும், பெண்களின் காண்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆண் காண்டம்

ஆண் காண்டம்

விந்தணு பெண்ணின் பிறப்புறுப்புகளை அடைவதைத் தடுக்க ஆண் ஆணுறைகளை ஆண்குறி மீது அணிய வேண்டும். இது ஒரு ரப்பர் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, பொதுவாக லேட்டக்ஸ், பாலிசோபிரீன் அல்லது பாலியூரிதீன். கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் 24 மணி நேர கடைகள் உட்பட பல மருத்துவ நிறுவனங்களில் அவற்றை வாங்கலாம்.

பெண் காண்டம்

பெண் காண்டம்

பெண் ஆணுறைகள் பெண்ணின் யோனிக்குள் வைக்கப்பட்டு, உடல் தடையை உருவாக்க, விந்தணு முட்டையை அடைவதைத் தடுக்கிறது. காண்டத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்பு வளையம் உள்ளது, இது உடலுறவுக்குப் பிறகு காண்டத்தை அகற்ற உதவுகிறது. இது பெரும்பாலும் பாலியூரிதீன் அல்லது மிக மெல்லிய லேட்டக்ஸால் ஆனது. ஆண்களின் காண்டத்தை விட பெண்களின் காண்டத்தை தயாரிக்கும் செலவு அதிகமாகும். அதனால் இது அதிக விலைக்கு விற்கப்படலாம். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

எவ்வளவு பாதுகாப்பு?

எவ்வளவு பாதுகாப்பு?

கர்ப்பத்தைத் தடுப்பதில் ஆண் காண்டங்கள் 98 சதவீதமும், பெண் காண்டங்கள் 95 சதவீதமும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. பெண் காண்டங்களை விட ஆண் காண்டங்ளைப் பயன்படுத்துவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதை இந்த வேறுபாடுகூறுகிறது.

MOST READ: இந்த இடங்களுக்கு அருகில் உங்க வீடு இருந்தால் உங்க வாழ்க்கை அவ்வளவுதான்.... உடனே வீட்டை காலிபண்ணுங்க.

எப்படி அணியப்படுகிறது?

எப்படி அணியப்படுகிறது?

ஆண்குறி விறைப்பு நிலையில் இருக்கும்போது பெரும்பாலான ஆண் ஆணுறைகள் அணியப்படுகின்றன, அதே நேரத்தில் பெண் காண்டங்கள் உடலுறவுக்கு முன் அணியப்படுகிறது. ஒரு பெண் காண்டத்தை உடலுறவுக்கு 8 மணி நேரத்திற்கு முன்பே வைக்கப்படலாம் என்பதால் இது வசதியானதாக இருக்கலாம். பெண் காண்டங்களைக் காட்டிலும் ஆண் காண்டத்தை கையாளுவது மிகவு எளிதானது.

அதிகம் உபயோகிக்கப்படுவது எது?

அதிகம் உபயோகிக்கப்படுவது எது?

பெண் காண்டங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டதால் பெரும்பாலான பெண் காண்டங்கள் லேடெக்ஸ் பொருட்களைத் தவிர்க்கின்றன என்று பயனாளர்கள் கூறுகின்றனர். லேடெக்ஸ் பல ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது, இருப்பினும் இன்னும் பல ஆண் காண்டங்களில் லேடெக்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது?

எதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது?

பொதுவாக பெண் காண்டங்கள் பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதாவது நீர் மற்றும் எண்ணெய் இரண்டுமே இதில் லூப்ரிகண்ட்களாக பயன்படுத்தப்படலாம். ஆனால் ஆண்கள் காண்டத்தில் நீர் சார்ந்த பொருட்கள் மட்டுமே லூப்ரிகண்ட்களாக பயன்படுத்தப்படுகிறது.

MOST READ: உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிடும் ஆண்களுக்கு வயாகராவே தேவை இல்லையாம் தெரியுமா?

அளவுகள்

அளவுகள்

உடலுறவின் போது வசதிக்காகவும் கூடுதல் இன்பத்திற்காகவும் வெவ்வேறு ஆண் ஆணுறை அளவுகள் உள்ளன. பெண் ஆணுறைகள் பெரும்பாலும் மிகச் சிறியவை அல்லது மிகப் பெரியவை என்று பயனர்கள் கூறியுள்ளனர், அவை உடலுறவின் போது நகர்கின்றன மற்றும் முறையாக உயவூட்டப்படாவிட்டால் சத்தம் ஏற்படுத்தக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Difference Between Male and Female Condoms

Check out the difference between male and female condoms.
Desktop Bottom Promotion