இதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா? வைரஸ்களின் வரலாறு...

கொரோனா வைரஸ்கள் ஜூனோடிக் ஆகும், அதாவது அவை விலங்குகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரவுகின்றன.

இன்று உலகமே சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு அவசர நிலை கொரோனா வைரஸ் ஆகும். உலக சுகாதார நிறுவனம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இந்தியாவிலும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

Deadly Viral Outbreaks That Originated From Animals

கொரோனா வைரஸ்கள் ஜூனோடிக் ஆகும், அதாவது அவை விலங்குகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரவுகின்றன. இந்த வைரஸின் விலங்கு ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை, கடந்த நூற்றாண்டில் பல வைரஸ்கள் விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து பரவியுள்ளது. இந்த பதிவில் மிருகங்களிடம் இருந்து தோன்றிய வைரஸ்கள் என்ன அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பர்க்

மார்பர்க்

கடந்த நூறாண்டுகளில் மிருகங்களிடம் இருந்து தோன்றிய முதல் உயிர்கொல்லி வைரஸ் என்றால் அது மார்பர்க்தான். 1967 ஆம் ஆண்டு உகாண்டாவில் வெளவாலிடம் இந்த வைரஸ் தோன்றியது. 590 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 478 பேர் இதனால் இறந்தனர். இந்த வைரஸின் இறப்பு விகிதம் 81 சதவீதமாக இருந்தது. மிருகங்களிடம் இருந்து தோன்றிய வைரஸ்களிலேயே இதன் இறப்பு விகிதம்தான் மிகவும் அதிகமாகும்.

எபோலா

எபோலா

உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு வைரஸ் எபோலா ஆகும். 1976 ஆம் ஆண்டு காங்கோவில் தோன்றிய இந்த வைரஸ் அந்த நாட்டில் 33,687 பேரை பாதித்தது, பாதிக்கப்பட்டவர்களில் 14,693 பேர் இறந்தனர். இந்த வைரஸும் வெளவாலிடம் இருந்துதான் தோன்றியது. இதன் இறப்பு விகிதம் 44 சதவீதமாக இருந்தது.

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

வெளவாலால் தோன்றிய மூன்றாவது வைரஸ் இதுவாகும். 1999 ஆம் ஆண்டு மலேசியாவில் இந்த வைரஸ் உருவானது. 496 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 265 பேர் இதனால் இறந்தனர். இதன் இறப்பு விகிதம் 53 சதவீதமாக இருந்தது.

சார்ஸ்

சார்ஸ்

இந்த நூற்றாண்டில் சீனாவிடம் இருந்து தோன்றிய முதல் வைரஸ் சார்ஸ்தான். வெளவால் மற்றும் எலியிடம் இருந்து இந்த வைரஸ் உருவானது. 2002 ஆம் ஆண்டு தோன்றிய இந்த வைரஸால் 8098 பேர் பாதிக்கப்பட்டனர், இறுதியில் 774 பேர் இறந்தனர். இதன் இறப்பு விகிதம் 10 சதவீதமாக இருந்தது.

H5N1 - பறவைக் காய்ச்சல்

H5N1 - பறவைக் காய்ச்சல்

நாம் அடிக்கடி அதிகம் கேள்விப்படும் வைரஸ் என்றால் பறவைக் காய்ச்சல்தான். சார்ஸ் தோன்றி மறைந்த அடுத்த வருடமே இந்த வைரஸ் உருவானது. பெயருக்கேற்றார் போல் 2003 ஆம் ஆண்டு பறவைகளிடம் இருந்து இந்த வைரஸ் உருவானது. இந்த வைரஸால் 861 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 455 பேர் இறந்தனர். இந்த நோயின் இறப்பு விகிதம் 53 சதவீதமாக இருந்தது.

மெர்ஸ்

மெர்ஸ்

2012 ஆம் ஆண்டு இந்த வைரஸ் சவூதி அரேபியாவில் தோன்றியது. இந்த வைரஸ் ஒட்டகங்களிடம் இருந்து உருவானது. இந்த நோயால் 2494 பேர் பாதிக்கப்பட்டனர், அதில் 858 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த நோயின் இறப்பு விகிதம் 35 சதவீதமாக இருந்தது.

H7N9 - பறவைக் காய்ச்சல்

H7N9 - பறவைக் காய்ச்சல்

2003 ஆம் ஆண்டு தோன்றிய பறவைக் காய்ச்சலின் மேம்படுத்தப்பட்ட வைரஸாக இது உருவானது. சீனாவில் 2013 ஆம் ஆண்டு உருவான இந்த வைரஸ் 1,568 பேரை பாதித்தது, அதில் 616 பேர் இறந்தனர். இந்த வைரஸின் இறப்பு விகிதம் 39 சதவீதமாக இருந்தது.

H1N1 - பன்றிக்காய்ச்சல்

H1N1 - பன்றிக்காய்ச்சல்

இந்த வைரஸ் 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உருவானது. இந்த வைரஸால் கிட்டதட்ட 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நோயின் தீவிரத்தால் கிட்டதட்ட 2 லட்சம் பேர் இறந்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த வைரஸைப் பற்றி இன்று உலகம் முழுவதும் அனைவரும் அறிவார்கள். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இந்த வைரஸ் உருவானது, இது வெளவாலிடம் இருந்து தோன்றியது என்று கூறுகிறார்கள் ஆனால் அதற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி 16,000 மக்களுக்கு மேலான மக்களின் உயிரைப் பறித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 25, 2020, 13:50 [IST]
Desktop Bottom Promotion