For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் அச்சுறுத்தும் புதிய XE வகை கொரோனா.. இதன் அறிகுறிகள் என்ன? இது ஆபத்தானதா?

கொரோனா வைரஸின் XE மாறுபாடு சீனா மற்றும் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு இந்த XE வகை கொரோனா இந்தியாவிலும் நுழைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

|

2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகில் பேரழிவை ஏற்படுத்தி உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், பலவாறு உருமாற்றமடைந்து 2 ஆண்டுகளாக ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் சிதைத்தது. இதுவரை கொரோனா வைரஸ் ஆல்பா, டெல்டா, காமா, ஓமிக்ரான் என்று பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் XE மாறுபாடு சீனா மற்றும் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு இந்த XE வகை கொரோனா இந்தியாவிலும் நுழைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Covid Omicron XE: Symptoms and everything you need to know about the combined variant in Tamil

இந்த XE வகை கொரோனாவிற்கு முன் கவலைகளைத் தூண்டிய ஓர் கோவிட் மாறுபாடு தான் டெல்டாவும், ஓமிக்ரானும் சேர்ந்து உருவான டெல்டாக்ரான். இதுவரை நாம் இந்த டெல்டாகிரான் பற்றி பார்த்துள்ளோம். ஆனால் அது என்ன XE வகை கொரோனா என்பதை சற்று விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைரஸ் உருமாற்றம்

வைரஸ் உருமாற்றம்

பொதுவாக ஒரு வைரஸ் இரண்டு வகைகளில் உருமாற்றம் அடையும். அதில் ஒன்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு செல்லும் போது உருமாற்றம் அடையும். இந்த வகை உருமாற்றத்தை subtle mutation என்பார்கள். இது ஒரு லேசான உருமாற்றம். இப்படி உருவான கொரோனா வகைகள் தான் டெல்டா, பீட்டா, காமா வகை கொரோனா. மற்றொன்று இரண்டு வகையான வைரஸ்கள் ஒன்று சேர்ந்து உருவாவதை major mutation என்பார்கள். அதாவது எப்படி டெல்டா மற்றும் ஓமிக்ரான் சேர்ந்து டெல்டாகிரான் உருவானதோ, அது தான் recombination வகை கொரோனா. அதாவது கலப்பின கொரோனா. இந்த கொரோனா புதிய வைரஸ் போன்று செயல்படும்.

XE வகை கொரோனா மாறுபாடு என்றால் என்ன?

XE வகை கொரோனா மாறுபாடு என்றால் என்ன?

XE வகை கொரோனா மாறுபாடு ஓமிக்ரானின் இரண்டு துணை வகைகளான BA.1 மற்றும் BA.2 இணைந்து உருவான கலப்பினம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த XE மாறுபாடு ஓமிக்ரானுக்கு உரியது. இருப்பினும், இதன் பரவும் முறை, தீவிரத்தன்மை மற்றும் நோய் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கும்.

XE வகை கொரோனா முதலில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?

XE வகை கொரோனா முதலில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?

கொரோனாவின் XE கலப்பின வகை முதன்முதலாக ஜனவரி 19 ஆம் தேதி இங்கிலாந்தில் கண்டறிப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.

XE மாறுபாடு தற்போது எங்கெல்லாம் உள்ளது?

XE மாறுபாடு தற்போது எங்கெல்லாம் உள்ளது?

கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவில் XE மாறுபாட்டின் முதல் வழக்கு கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்த XE மாறுபாடு மும்பையில் உள்ள 50 வயது பெண்ணிற்கு உள்ளது. அதுவும் இப்பெண்ணிடம் எந்த அறிகுறியும் இல்லை மற்றும் இணை நோய்கள் எதுவும் இல்லாதவர். இவர் பிப்ரவரி 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தார். வந்ததும் அவருக்கு சோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் வந்தது. ஆனால் அப்பெண்ணின் அலுவலகத்தில் சோதிக்கும் போது பாசிட்டிவ் என வந்தது. ஆனால் இந்தியாவின் ஜீனோம் கூட்டமைப்பு இதை மறுத்துள்ளது. இந்த XE மாறுபாடு இங்கிலாந்தை தவிர, தாய்லாந்து மற்றும் நியூசிலாந்திலும் கண்டறியப்பட்டுள்ளன.

XE மாறுபாடு எவ்வளவு வேகமாக பரவுகிறது?

XE மாறுபாடு எவ்வளவு வேகமாக பரவுகிறது?

கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாட்டை விட XE மாறுபாடு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக தோன்றுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஓமிக்ரானின் BA.2-வின் ஆரம்ப கால மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது, இதன் பரவும் விகிதம் சுமார் 10 சதவீதம் அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

XE மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?

XE மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?

பொதுவாக கொரோனாவின் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் பின்வருமாறு: காய்ச்சல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தோல் எரிச்சல், சரும நிறமாற்றம், இரைப்பை பிரச்சனைகள் போன்றவை.

XE மாறுபாடு எவ்வளவு தீவிரமானது?

XE மாறுபாடு எவ்வளவு தீவிரமானது?

XE மாறுபாடு மிகவும் தீவிரமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இதுவரை வெளிவந்த அனைத்து ஓமிக்ரான் வகைகளும் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த XE மாறுபாட்டின் தீவிரம் அல்லது தடுப்பூசி செயல்திறன் பற்றிய முடிவுகளை எடுக்க போதுமான ஆதாரம் எதுவும் இல்லை.

XE மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதா?

XE மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதா?

கோவிட்-19 தடுப்பூசிகள் புதிய மாறுபாட்டிற்கு எதிராக முழு பாதுகாப்பை வழங்காவிட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவில் கடுமையாக பாதிக்கப்படுவதைக் குறைக்கும் மற்றும் இறப்பின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் XE மாறுபாட்டிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என்பதை விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

XE மாறுபாட்டில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?

XE மாறுபாட்டில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?

* வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க் அணியுங்கள்.

* மற்றவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீடடர் இடைவெளியைப் பின்பற்றுங்கள்.

* மோசமான காற்றோட்டம் அல்லது நெரிசலான இடங்களுக்கு செல்வதத் தவிர்த்திடுங்கள்.

* வீட்டினுள் காற்றோட்டத்தை மேம்படுத்த ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

* கைகளை அடிக்கடி கழுவுங்கள் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுங்கள்.

* தவறாமல் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொள்ளுங்கள். தேவைப்படுபவர்கள் பூஸ்டர் ஷாட்டைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covid Omicron XE: Symptoms and everything you need to know about the combined variant in Tamil

XE is a mixture of the two Omicron variant sub-types BA.1 and BA.2. Know symptoms, transmission and everything you need to know about the combined variant in tamil.
Desktop Bottom Promotion