Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கொரோனா தடுப்பூசி போட பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...
தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறப்பான வழி, கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.
கொரோனா தொற்று மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறப்பான வழி, கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.

தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கும் போது, மறுபுறம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா இல்லையா என்ற எண்ணத்துடன் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதோடு இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சிக் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகிறது. அதோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு போடப்படவுள்ளது.
நீங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அச்சம் கொள்கிறீர்களா? கீழே கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சங்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டுக்கதை #1 : தடுப்பூசியால் மரணம் ஏற்படலாம்
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு பிரெஞ்சு வைராலஜிஸ்ட் மற்றும் நோபல் பரிசு வென்ற லூக் மொன்டாக்னியர் மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போட்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ உண்மையானதா என சரிபார்க்கப்பட்டதில், போலியானது என தெரிய வந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடுப்பூசிகள் எப்போதும் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே இம்மாதிரியான போலியான கூற்றுக்களை நம்ப வேண்டாம்.

கட்டுக்கதை #2 : தடுப்பூசிகள் கொரோனா தொற்றை ஏற்படுத்தும்
தடுப்பூசி போடுவது கோவிட் தொற்றை ஏற்படுத்தாது. உண்மையில் தடுப்பூசிகள் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகின்றன. ஆகவே தடுப்பூசி பெற்ற பின் ஒருவருக்கு கொரோனா தொற்று பிடித்தாலும், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் கிருமியை எதிர்த்து சண்டையிட்டு, நோயாளியை எளிதில் மீட்க உதவும்.

கட்டுக்கதை #3 : தடுப்பூசி மருந்து மாறியிருக்கும்
நாட்டில் சுமார் 73,000 தடுப்பூசி மையங்கள் உள்ளன. அந்த தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசிகளை வழங்க நிர்வாகம் பொறுப்பாகும். இதை சுகாதார துறையும் கவனித்து வருகிறது. எனவே தடுப்பூசி குப்பியில் வேறு எந்த மருந்தும் இருக்க வாய்ப்பில்லை.

கட்டுக்கதை #4 : தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
கொரோனா தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஒருசிலருக்கு காணப்படுகின்றன. ஆனால் இந்த பக்கவிளைவுகள் நீண்ட காலம் நீடித்திருக்காது. தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவுகளில் காய்ச்சல், உடல் வலி மற்றும் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் புண் ஆகியவை அடங்கும். இதுதவிர தடுப்பூசி வேறு எந்த கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தாது.

கட்டுக்கதை #5 : தடுப்பூசி போடுவது எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும்
இந்த மாதிரியான கருத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியாகவே மக்களிடையே பரவியுள்ளது. இம்மாதிரியான ஆதாரமில்லாத கருத்துக்களில் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம்.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 16 வயதிற்குள் 15 தடுப்பூசிகளை பெறுகிறார்கள். கோவிட்-19 தடுப்பூசி ஒன்றும் மக்களுக்கு போடும் முதல் தடுப்பூசி அல்ல. எனவே இதனால் எந்த பயமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.



Click it and Unblock the Notifications