Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
கொரோனா மற்றும் மலேரியா அறிகுறிகளுக்கு இருக்குற வித்தியாசம் இதுதான். தெரிஞ்சுக்கோங்க...
கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய கோவிட்-19 நோயின் அறிகுறிகளானது, மலேரியா போன்ற பிற நோய்களின் அறிகுறிகளுடன் சிறிது ஒத்துப்போவதால் அச்சம் மேலும் அதிகரித்துவிட்டது.
இந்த ஆண்டின் தொடக்கமே உலக மக்களை கொரோனா எனும் வைரஸ் தொற்றின் பீதியில் ஆழ்த்திவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் மக்களை ஒருபுறம் மனஅழுத்தத்தில் ஆழ்த்திவிட்டது. நோய் தொற்றில் இருந்து தம்மை காத்துக் கொள்ள ஒருவர் வீட்டிற்குள்ளேயே இருந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய கோவிட்-19 நோயின் அறிகுறிகளானது, மலேரியா போன்ற பிற நோய்களின் அறிகுறிகளுடன் சிறிது ஒத்துப்போவதால் அச்சம் மேலும் அதிகரித்துவிட்டது.

இதை இன்னும் சிக்கலாக்கியது என்னவென்றால், இந்த ஆட்டோ இம்யூன் நோயான கோவிட்-19, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைப் பிரதிபலிக்கிறது. மலேரியா மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. அவை அவ்வளவு எளிதில் வேறுபடுவதில்லை. ஆனால், நமது சிறந்த ஆரோக்கியத்திற்காக இந்த இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கோவிட்-19 மற்றும் மலேரியா வேறுபாடு
மலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய நோயாகும். பாதிக்கப்பட்ட பெண் அனோபில்ஸ் கொசு ஆரோக்கியமான நபரைக் கடித்து, அதன் உடலில் உள்ள ஒட்டுண்ணியை பகிரும்போது ஏற்படக்கூடியது. அதுவே, கோவிட்-19 என்பது ஒரு ஆட்டோ இம்யூன் தொற்று நோயாகும். இது கொரோனா என்கின்ற வைரஸானது சுவாச துளிகள் மற்றும் நேரடி உடல் தொடர்பு மூலம் பரப்புவதால் ஏற்படக்கூடியது. இதனை படிக்கும் போதே இரண்டிற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
நோய்க்கான காரணங்கள் மற்றும் பரவும் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட நோய்கள் என்பது புரிந்திருக்கும். கொரோனா வைரஸ் என்பது ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். ஆனால், பாதிக்கப்பட்ட கொசுவால் கடிக்கும் பட்சத்தில் தான் மலேரியா ஏற்படுகிறது, மேலும், இது பிறருக்கு பரவாது.

கோவிட்-19-க்கும் மலேரியாவுக்கும் என்ன தொடர்பு?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படக்கூடிய நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மலேரியா மருந்து ஒரு சாத்தியமான மருந்து என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு, மக்கள் கொரோனா வைரஸ் மற்றும் மலேரியாவிற்கும் தொடர்பு இருப்பதாக கருதத் தொடங்கினர். திடீரென்று, இது ஒரு உயிர் காக்கும் மருந்து என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பயனற்ற தன்மை பின்னர் தான் நிரூபிக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு மலேரியாவின் ஆரம்பக்கட்ட நோய் அறிகுறிகளைக் குறைக்க மட்டுமே உதவியது என்றும், ஆனால் கோவிட்-19ல் இருந்து மீட்கப்படுவதற்கு இதற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும் பிறகு நிரூபணமானது. துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளாக, இந்த மருந்தை உட்கொண்ட சிலருக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டது.

மலேரியா மற்றும் கொரோனா வைரஸின் வெவ்வேறு அறிகுறிகள்
கோவிட்-19 இன் அறிகுறிகள் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், விஞ்ஞானிகள் இந்த வைரஸின் புதிய அறிகுறியை ஒரு விரிவான பரிசோதனைக்குப் பிறகு கண்டுபிடித்து வருகின்றனர். அதாவது, அதிகப்படியான காய்ச்சல், சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை கொண்ட ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இது தொடங்கியது. ஆனால், இப்போது கோவிட்-19 இன் சாத்தியமான அறிகுறிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, 3 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படலாம் (அறிகுறிகளைக் காட்டாத, அறிகுறியற்ற நோயாளிகளைத் தவிர) பின்னர், கடுமையான அறிகுறிகள் காணப்படலாம்.

மலேரியா அறிகுறிகள்
மலேரியாவின் அறிகுறிகள் அன்றும் இன்றும், எப்போதும் அப்படியே இருக்கின்றன. காய்ச்சல், சளி, தலைவலி போன்றவை மலேரியாவின் முதல் அறிகுறிகளாகும். இது கொசு கடித்த 10-15 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு தென்படக்கூடும்.

வேறுபடுத்தும் அறிகுறிகள்
கோவிட்-19 இன் பெரும்பாலான அறிகுறிகள் மலேரியாவைப் போலவே இருந்தாலும், இந்த இரண்டு நோய்களையும் வேறுபடுத்துகின்ற பல அறிகுறிகள் உள்ளன. அவையாவன:
* சுவாச பிரச்சனைகள்
* நெஞ்சு வலி
* வயிற்றுப்போக்கு
* வறட்டு இருமல்
* மூட்டு மற்றும் தசை வலிகள்
* வாசனை மற்றும் சுவை இழப்பு
* பிங்க் நிற கண் அல்லது வெண்படல அழற்சி
* சரும தடிப்புகள்
* கால்விரல்கள் மற்றும் கை விரல்களில் நிறமாற்றம்
மலேரியா அறிகுறிகளுடன் இந்த அறிகுறிகளும் உங்களுக்கு காணப்பட்டால், உடனடியாக கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதைக் கண்டறியும் வரை, பிறருக்கு நோய் பரவுவதைத் தடுக்க மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

முடிவுரை
கொரோனா வைரஸைப் பற்றி மக்களிடையே மிகுந்த பீதி நிலவுகிறது. அவர்களுக்கு மலேரியா அல்லது வைரஸ் காய்ச்சலாக கூட இருக்கலாம். ஆனால், சாதாரண காய்ச்சல், சளி வந்தாலே அவர்களுக்கு கொரோனா வைரஸாக இருக்குமோ என்று கவலைப்படுகிறார்கள். இதனால் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகளைப் பற்றிய புதிய புதிய தகவல்களை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் நிச்சயம் ஏற்படும் என்பது அவசியமில்லை. எனவே, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் முறையான சிகிச்சை பெறுதல் ஆகியவை, கோவிட்-19 நோயால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தனித்திருங்கள், விழித்திருங்கள்...



Click it and Unblock the Notifications