Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது?
கொரோனா தடுப்பூசி போட போறீங்களா? எந்த கையில் போடணும் தெரியுமா?
தற்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் நிர்வாகத்தில் உதவுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பிற நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
சுமார் ஒரு வருட காலமாக கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடியுள்ள நிலையில், ஒரு வழியாக இந்த வைரஸிற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க உலகின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டும் வருகின்றன. தற்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் நிர்வாகத்தில் உதவுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பிற நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த கோவிட் தடுப்பூசி விரைவில் பொது மக்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன தான் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்தில் இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய வகை பரவ ஆரம்பித்துள்ளதால், கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்த புதிய வகை கொரோனாவிற்கும் எதிராக செயல்படுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது. அதோடு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை எந்த கையில் பெறுவது குறித்து மக்களுக்கு நிறைய கேள்விகள் மற்றும் அச்சங்களும் உள்ளன.

கொரோனா தடுப்பூசி
மற்ற தடுப்பூசிகளைப் போலவே, கொரோனா வைரஸ் தடுப்பூசியும் மேல் கையில் தான் போடப்படுகிறது. இன்று வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு-டோஸ் தடுப்பூசிகளாகும். அதில் இரண்டாவது டோஸ் முதல் டோஸ் போடப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கின்றன. அதுவும் அவை சமாளிக்க கொஞ்சம் சிரமமானதாகவும் உள்ளன. அதில் கொரோனா தடுப்பூசியால் பெரும்பாலான மக்கள் அனுபவித்தது தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் காயம் மற்றும் கடுமையான வலி ஆகும்.
இதில் சிலர் பல மணிநேரம் அல்லது நாட்கள் கைகளை நகர்த்தமுடியாமல் வேதனையை அனுபவித்ததாக கூறுகிறார். இந்த ஒரு காரணத்தினாலேயே, பலரது மனதிலும் தடுப்பூசியைப் பெறுவதற்கு எந்த கையை தேர்ந்தெடுப்பது என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கான பதிலான அறிய தொடர்ந்து படியுங்கள்.

கையில் கோவிட் தடுப்பூசி போடலாமா?
கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற விரும்புவர்கள் எந்த கையில் தடுப்பூசி போடுவது என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். கோவிட்-19 தடுப்பூசியும் மற்ற தடுப்பூசிகளைப் போன்றது தான். எனவே இந்த கையில் தான் போட வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. மருத்துவர் வேண்டுமானால் எந்த கையில் போடலாம் என்று பரிந்துரைக்கலாம். ஆனால் இறுதி முடிவு உங்களிடம் தான் உள்ளது.

எந்த கையில் தடுப்பூசி போடலாம்?
எந்த கையில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது முற்றிலும் உங்களுடைய விருப்பம். ஆனால் தடுப்பூசி போட்ட பின் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வலி இருக்கும் என்பதால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத கையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. பெரும்பாலானோருக்கு இடது கை அதிகம் பயன்படுத்தப்படாத கை என்பதால், இந்த கையை தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரானால், வலது கையில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

அதிகம் பயன்படுத்தும் கையிலும் போடலாம்
கையில் போட்ட தடுப்பூசியால் ஏற்பட்ட புண்ணை, கைகளை அதிகம் அசைப்பதன் மூலம் சரிசெய்யலாம் என்று பலர் நினைப்பார்கள். அத்தகையவர்கள் தடுப்பூசியால் ஏற்படும் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறவும், குறைக்கவும் அதிகம் பயன்படுத்தும் கையை தேர்வு செய்வார்கள். ஏனெனில் அதிகம் பயன்படுத்தும் கைகளில் தடுப்பூசியைப் போட்டு, அந்த கையை அதிகம் அசைத்தால், அந்த கையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் தடுப்பூசிக்கு பின் ஏற்படும் வலி மற்றும் புண்ணையும் போக்க உதவும்.

இரண்டாவது டோஸை மறுகையில் போடலாமா?
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஒரு கையில் போட்டால், இரண்டாவது டோஸை மற்றொரு கையில் போடலாமா என்ற ஒரு கேள்வி பலரது மனதிலும் எழலாம். நிச்சயம் போடலாம். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வெவ்வேறு கையில் போட்டுக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications