For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா கண்டுபிடிச்ச கொரோனா தடுப்பூசி நவம்பரில் வந்துவிடுமாம்.. ஆனா அது இந்தியாவுக்கு கிடைக்குமா?

|

ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியைக் குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள தடுப்பூசிகளுள் சில பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. இந்நிலையில் சீனா கண்டுபிடித்துள்ள ஒரு சோதனை தடுப்பூசியை, சினோவாக்ஸ் பயோடெக் லிமிடெட் பொதுமக்களுக்கு தயாரிக்கத் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றன.

இது கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் உலகின் இரண்டாவது நாடாக சீனாவை உருவாக்கும். தற்போது சீனா ஐந்து முன்மாதிரிகளின் இறுதிக்கட்ட வேலைகளை மேற்பார்வையிட்டு வருகிறது. அவற்றில் குறைந்தது மூன்று வளர்ச்சியின் முக்கியமான கட்டங்களைத் தாண்டியுள்ளன.

MOST READ: குட்-நியூஸ்: கொரோனாவுக்கு சீனாவே தடுப்பூசி கண்டுபிடிச்சுடுச்சாம்.. எப்போது வரும்? எவ்வளவு ஆகும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனாவில் எத்தனை தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன?

சீனாவில் எத்தனை தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையில், இந்த நம்பிக்கைக்குரிய வளர்ச்சி உறுதி செய்யப்பட்டது. மேலும் சிடிசி அதிகாரி ஒருவர் "கொரோனாவுக்கான தடுப்பூசி மிக விரைவில் தயாராகிவிடும். தற்போது அதன் முன்னேற்றம் மிகவும் சுமூகமாக உள்ளது" என்றும் கூறினார்.

உலகில் அதிக அளவில் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் சீனா, தற்போது மனித பரிசோதனையில் உள்ள 30 தடுப்பூசிகளில் ஒன்பது தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் திரிபு

கொரோனா வைரஸ் திரிபு

சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், தடுப்பூசி சோதனை விரைவுபடுத்தப்பட்ட செய்தியை சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான் கூறியதை அடுத்து, கொடிய கொரோனா வைரஸ் திரிபு தற்போது உலகளவில் 29.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் கடந்த வாரம் வெளிவந்த அறிக்கையில், சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட ஒரு நாசி ஸ்ப்ரே தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனா கண்டுபிடித்துள்ள பிரதிபலிக்காத வைரஸ் திரிபுக்கு மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தடுப்பூசி, பரந்த அளவிலான சோதனைகளில் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முடிவுகளையே காட்டியுள்ளது. அதோடு உலகளாவிய போட்டிக்கு இணையாக, சீனாவின் பிற தடுப்பூசிகளும் ஈர்க்கக்கூடிய முடிவுகளைக் காட்டுகின்றன.

ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய அவசர அங்கீகார திட்டத்தின் ஒரு பகுதியாக அத்தியாவசிய தொழிலாளர்கள் உட்பட குறைந்தது 12,000 பேருக்கு சீனா தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. மேலும் சீன இராணுவம் கடந்த மாதங்களில் சோதனை தடுப்பூசியின் காட்சிகளையும் பெற்றுள்ளது. இது பொதுமக்களின் சில பகுதிகளுக்கு வழங்கப்படும் முதல் தடுப்பு மருந்துகளில் ஒன்றாகும்.

இது எவ்வளவு பாதுகாப்பானது?

இது எவ்வளவு பாதுகாப்பானது?

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா சோதனைகள் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்த அச்சங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், ஆசிய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் பயன்படுத்த முற்றிலும் பாதுகாப்பானவை என்று சீனா நம்பிக்கையுடன் கூறியுள்ளது.

பக்கவிளைவு இல்லாத சீன தடுப்பூசி

பக்கவிளைவு இல்லாத சீன தடுப்பூசி

சி.டி.சி-யின் விஞ்ஞானி மற்றும் உயிரியல் பாதுகாப்பு நிபுணர் குய்ஷென் வு, ஏப்ரல் மாதத்தில் தான் ஒரு தடுப்பூசி மருந்தை எடுக்க முன்வந்ததாகவும், எந்த தடுப்பூசி என்று குறிப்பிடாமல், தான் எவ்வித அசாதாரண பக்கவிளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் "கடந்த சில மாதங்களில், நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். எவ்வித மாற்றமும் இல்லை. நான் தடுப்பூசி போடும் போமுது எவ்வித உள் வலியையும் சந்திக்கவில்லை" என்றும் கூறினார்.

AD5-NCOV தடுப்பூசி

AD5-NCOV தடுப்பூசி

கேன்சினோ பயோலாஜிக்ஸின் AD5-NCOV என்னும் சீன தடுப்பூசியின் மீது சீன வல்லுநர்கள் அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த தடுப்பூசி 99% செயல்திறன் விகிதங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீன தடுப்பூசி மற்ற நாடுகளால் பயன்படுத்தப்படுமா?

சீன தடுப்பூசி மற்ற நாடுகளால் பயன்படுத்தப்படுமா?

கிட்டத்தட்ட தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதால், முன்னணி சுகாதார வல்லுநர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் வேலைத்திறன் குறித்த கவலைகளை வலியுறுத்தி வருகின்றனர். மேற்கத்திய மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி குழுக்களும், தங்களது தடுப்பூசிகளை மிக உயர்ந்த சோதனைத் தரத்திற்கு கொண்டு வர முன் வந்தாலும், சீனா அதன் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் அனைத்து தரங்களையும் பின்பற்றுகிறது என்று உறுதி அளிக்கிறது.

இது தவிர, சில நாடுகளில் சீன தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று வதந்திகளும் பரவுகின்றன. தென் கொரிய அதிகாரிகள் அதன் 30 மில்லியன் மக்கள் தொகைக்கு ஆரம்பகால அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரவு அமீரகம் 31,000 தன்னார்வலர்களை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் சீனா உருவாக்கிய தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதுக்குறித்த மற்ற கூட்டாளர் நாடுகளுடன் கூட்டாண்மை மற்றும் பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கும் சீன தடுப்பூசி கிடைக்குமா இல்லையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Vaccine: Chinese COVID-19 Vaccine Available By November?

Coronavirus vaccine: China's vaccine may hit the market by November, here's what we know so far..