Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
இந்தியாவிற்கு புதிதாக வந்துள்ள ஜான்சன் தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது?
பொதுவாக ஜான்சன் தடுப்பூசி ஒப்பீட்டளவில் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு இந்த தடுப்பூசி ஏற்றதாக இருக்காது. அத்தகையவர்கள் முன்பே அறிந்து கொண்டால், மாற்று தடுப்பூசிகளைப் பெறலாம்.
உருமாற்றமடைந்த கொரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையின் போது பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த ஒரு மாதமாக கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. உலகெங்கிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக உள்ளது. அதே சமயம் தடுப்பூசி பற்றாக்குறையும் உள்ளதால், சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஜான்சன் தடுப்பூசி இந்தியாவில் அவரசகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்பு விகிதங்களைக் கொண்ட ஒரு டோஸ் தடுப்பூசியான ஜான்சன் தடுப்பூசி, டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சில ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவதோடு, ஒரு டோஸ் ஊசியால் நோயெதிர்ப்பு அளவை அதிகரிக்க முடியும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. என்ன தான் சக்தி வாய்ந்த செயல்திறன் தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால், இதன் பயன்பாட்டில் சில விரும்பத்தகாத பக்கவிளைவுகள் காணப்பட்டன.
பொதுவாக ஜான்சன் தடுப்பூசி ஒப்பீட்டளவில் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு இந்த தடுப்பூசி ஏற்றதாக இருக்காது. அத்தகையவர்கள் முன்பே அறிந்து கொண்டால், மாற்று தடுப்பூசிகளைப் பெறலாம்.

ஜான்சன் தடுப்பூசியின் பக்கவிளைவுகள்
மற்ற தடுப்பூசிகளைப் போலவே ஜான்சன் தடுப்பூசியிலும் காய்ச்சல், உடல் சோர்வு, ஊசி போடும் இடத்தில் வலி போன்ற பக்கவிளைவுகள் காணப்பட்டன. இருப்பினும், இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பெற்ற சிலரிடம் சில அசாதாரண மற்றும் அரிய பக்க விளைவுகளும் தென்பட்டன. அதுவும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (கோவிஷீல்டு) போலவே, இந்த கோவிட் தடுப்பூசி அமெரிக்காவில் பயன்படுத்த முதலில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். ஆனால் இந்த தடுப்பூசி இரத்த உறைதல் கோளாறுகள் மற்றும் நரம்பியல் சிக்கல்கள் போன்ற பக்க விளைவுகளின் அபாயத்துடன் தொடர்பு கொண்டிருந்தன.

ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசி
ஜான்சன் கோவிட் -19 தடுப்பூசி, ஒரு அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசி. இந்த தடுப்பூசி சிலருக்கு பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இது நரம்பியல் தன்னுடல் தாக்க கோளாறான குய்லின்-பாரே நோய்க்குறி (Guillain-Barré Syndrome) ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. சில நாடுகளில் 50 வயதிற்குட்பட்ட பெண்களிடையே இந்த தடுப்பூசி த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறியை ஏற்படுத்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது.
என்ன தான் ஜான்சன் தடுப்பூசி வலுவான பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருந்தாலும், சில ஆபத்துக் காரணிகளும் இருப்பதால், இந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு முன் யாரெல்லாம் இந்த தடுப்பூசியை போடாமல் இருப்பது நல்லது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. கீழே ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

த்ரோம்போசிஸ் மற்றும் இரத்தக் கட்டிகளின் வரலாறு உள்ளவர்கள்
தற்போது இரத்த உறைதல் கோளாறுகளின் ஆபத்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைத் தொடர்ந்து, ஜே & ஜே தடுப்பூசிகளுடன் அதிகமாக உள்ளது. த்ரோம்போசிஸ் ஆபத்து அரிதானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டது. ஆகவே தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்பட்டது. அதுவும் இரத்த உறைவு ஆபத்தானது 50 வயதிற்குட்பட்ட இளைய மற்றும் ஆரோக்கியமான மக்களிடையே அதிகமாக காணப்பட்டது. எனவே த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் இரத்தக் கட்டிகளின் ஆபத்து உள்ள ஒருவர் ஜே & ஜே தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசி போடுவது பாதுகாப்பாக இருக்கும். எதுவாயினும், எந்த ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் முன்பும், மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது.

ஆட்டோ இம்யூன் நிலைமைகள்
ஆட்டோ இம்யூன் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது மற்றும் இத்தகையவர்கள் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் ஆட்டோ இம்யூன் நிலையானது நாள்பட்ட நோய்த்தொற்றுகள் ஊடுருவதை எளிதாக்குகிறது. மேலும் இத்தகையவர்கள் தடுப்பூசி போடுவதால், கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்கும் அபாயமும் அதிகம் உள்ளது. குறிப்பாக, அலர்ஜி அல்லது நரம்பு கோயாறுகள் போன்றவற்றின் ஆபத்து அதிகம் ஏற்படலாம். எதுவாயினும், தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தற்போது கோவிட்-19 தடுப்பூசியைப் பெற தகுதியானவர்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் தடுப்பூசியைப் போட அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தின் போது கோவிட் தொற்றுடன் தொடர்புடைய கடுமையான சிக்கல்களை தடுப்பூசிகள் குறைத்து காட்டினாலும், ஜே & ஜே தடுப்பூசி இரத்த உறைதல் கோளாறுகளுடன் தொடர்புடையதால், கர்ப்பிணிப் பெண்கள் இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி அலர்ஜி உள்ளவர்கள்
ஏற்கனவே தடுப்பூசிகளுக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு சில சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. இதற்கான சரியான சாத்தியக்கூறு இன்னும் தெரியவில்லை என்றாலும், உணர்திறன் கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தடுப்பூசியில் காணப்படும் ஒன்று அல்லது பிற பொருட்களுக்கு அலர்ஜ் கொண்டவர்கள் இந்த தடுப்பூசியைத் தவிர்க்கலாம்.
மேலே பட்டியலிடப்பட்டுள்ளவர்கள் ஜே & ஜே கொரோனா தடுப்பூசியால் தீவிர விளைவுகளை சந்திக்கக்கூடியவர்கள். இத்தகையவர்கள் கோவிட் தடுப்பூசியைப் போடும் முன் மருத்துவரை அணுகி, சோதித்து அவரின் அனுமதியுடன் போடுவதே பாதுகாப்பானது.



Click it and Unblock the Notifications











