கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தம் உங்க வயிறை எப்படி பாதிக்கும் தெரியுமா? அத இப்படி ஈஸியா சரிபண்ணலாம்!

மன அழுத்தம் கொண்ட இதுபோன்ற நேரங்களில் போதுமான தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம்.

உணர்ச்சி செரிமான அமைப்பு என்பது மூளைக்கும் குடலுக்கும் உள்ள தொடர்பு. நீங்கள் எப்போதாவது கவலை அல்லது மன அழுத்தத்தை உணரும்போது வயிற்று வலி ஏற்படுகிறதா? அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உணர்வும் அதிலிருந்துதான் உருவாகின்றன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடக்கின்றனர். இந்நிலையில், பல மக்கள் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.

Coronavirus stress causing stomach troubles?

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும் போது, ஏராளமான மக்களும் இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் மற்றும் பதட்டம் இரைப்பைக் குழாயில் சுருக்கங்களைத் தூண்டும், இது மன அழுத்தம் தொடர்பான செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் குமட்டல், நெஞ்செரிச்சல், வீக்கம் அல்லது மலக்குடல் வடிவங்களில் மாற்றம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும். இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுக்கு மன அழுத்தம் ஏன்?

வயிற்றுக்கு மன அழுத்தம் ஏன்?

உள்ளுறுப்பு நரம்பு மண்டலம் என்பது ஜி.ஐ. மூளைக்கும் நரம்பு மண்டலத்தின் இந்த பகுதிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. மன அழுத்தத்தின் போது, சிக்னல்கள் ஜி.ஐ. பாதையை வித்தியாசமாக நடந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடும். மன அழுத்தம் நரம்புகள் உணர்திறன் மிக்கதாக ஆக்குகிறது. இதனால் சாதாரண சூழ்நிலைகளில் மன அழுத்தமாக கருதப்படாத விஷயங்கள், பதட்டமான சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குடல் செயல்பாடு

குடல் செயல்பாடு

எல்லோரும் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது லேசான அறிகுறிகளை அனுபவிப்பது மிகவும் சாதாரணமானது. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உணவில் ஆறுதலையும் தேடுகிறோம். ஜி.ஐ. பாதை பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். ஆதலால், உங்கள் குடல் செயல்பாடு சரியாக இருப்பதை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும்.

மத்திய தரைக்கடல் உணவு

மத்திய தரைக்கடல் உணவு

இது போன்ற நேரங்களில் மத்திய தரைக்கடல் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இந்த உணவின் அடித்தளம் காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் தானியங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகும். உங்கள் உணவில் கோழி, முட்டை அல்லது பால் சேர்த்து நீங்கள் உட்கொள்ளலாம்.

அட்டவணையை உருவாக்கவும்

அட்டவணையை உருவாக்கவும்

உங்கள் உணவு மற்றும் சிற்றுண்டிக்கு சரியான அட்டவணையை நீங்கள் உருவாக்க வேண்டும். வீட்டிலேயே நீங்கள் இருப்பதால் அதிகமாக சாப்பிடலாம். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை முடித்து, ஏற்கனவே இருக்கும் இரைப்பை அறிகுறிகளை மோசமாக்குவீர்கள். ஆதலால், சரியான நேரங்களில் சரியான அளவு உணவு எடுத்துக்கொள்ள இந்த அட்டவணை உங்களுக்கு உதவும்.

தூக்கம்

தூக்கம்

மன அழுத்தம் கொண்ட இதுபோன்ற நேரங்களில் போதுமான தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம். இது உங்கள் உடல் அறிகுறிகளிலிருந்து மீளவும், அவற்றை முதலில் ஏற்படுத்திய மன அழுத்தத்திலிருந்து வெளியேறவும் உங்களுக்கு உதவுகிறது.

சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

இந்த நாட்களில் நீங்கள் படுக்கையில் உட்கார்ந்து டிவி பார்ப்பதில் எவ்வளவு ஈர்க்கப்பட்டாலும், நீங்கள்சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். வீட்டில் ஒரு சிறிய உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம் அல்லது ஏதாவது வீட்டு வேலைகளை செய்யலாம். சுறுசுறுப்பாக இருப்பது உங்களை நன்றாக உணரவைக்கும். மேலும், இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது மன அழுத்தம் தொடர்பான செரிமான சிக்கல்களையும் குறைக்கிறது.

மகிழ்ச்சியாக இருங்கள்

மகிழ்ச்சியாக இருங்கள்

இந்த நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பது, உங்களை மன அழுத்தத்திலிருந்து வெளியேற உதவும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுங்கள். வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தொடர்பில் இருப்பது முக்கியம். இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும் மற்றும் எல்லோரும் ஒன்றாக இருப்பதை நினைவூட்டுகிறது.

உதரவிதான சுவாசம்

உதரவிதான சுவாசம்

உதரவிதான சுவாசம் அல்லது ஆழ்ந்த சுவாசம் என்பது மார்புக் குழி மற்றும் வயிற்றுக் குழிக்கு இடையில் கிடைமட்டமாக உள்ள உதரவிதான தசையின் சுருக்கத்தால் ஏற்படுகிறது. இவ்வகை சுவாசத்தில் காற்று நுரையீரல்களுக்குள் நுழையும் போது மார்புக்கூடு உயர்ந்து வயிறு விரிவடைகிறது. பகலில் சிறிது நேரம் உதரவிதான சுவாசத்தைப் பின்பற்றுவது நல்லது. இது உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. உங்கள் வயிற்றை சுவாசிக்க பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரிபார்க்க, ஒரு கை உங்கள் வயிற்றிலும் மற்றொன்று உங்கள் மார்பிலும் வைக்கவும். நீங்கள் சுவாசிக்கும்போது வயிற்றில் உள்ள கை வயிற்றுடன் உள்ளேயும் வெளியேயும் செல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 3, 2020, 18:41 [IST]
Desktop Bottom Promotion