Latest Updates
-
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது!
எச்சரிக்கை! புதிய வகை கொரோனாவின் அபாயகரமான 5 அறிகுறிகள் இதுதான்... உஷாரா இருங்க...
மாற்றமடைந்து பரவும் கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதோடு அந்த அறிகுறிகளின் பட்டியலை மக்கள் அவசியம் தெரிந்து கொண்டு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறவும்.
கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றத் தொடங்கியவுடன், மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வைரஸ் பிறழ்வின் மூலத்தைக் கண்டறிந்து நிறுவுவதற்கு அயராது உழைத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் இந்த வைரஸ் குறித்து கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அதிகமாகவே உள்ளன.

எதுவாயினும், மாற்றமடைந்து பரவும் கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதோடு அந்த அறிகுறிகளின் பட்டியலை மக்கள் அவசியம் தெரிந்து கொண்டு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்துகிறது. இல்லாவிட்டால் நிலைமை தீவிரமாகி கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

கொரோனாவின் பொதுவான அறிகுறிகள்
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்ததில் இருந்து, மக்கள் வெவ்வேறு மற்றும் மாறுபட்ட அறிகுறிகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கொரோனா அறிகுறிகளின் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கும் போதிலும், மிகவும் பொதுவான சில அறிகுறிகள் இருக்கத் தான் செய்கின்றன. அப்படிப்பட்ட கொரோனாவின் சில பொதுவான முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு...
* காய்ச்சல்
* வறட்டு இருமல்
* தொண்டை வலி அல்லது தொண்டைப் புண்
* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு
* நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல்
* களைப்பு அல்லது சோர்வு
* இரைப்பை குடல் தொற்று
* வாசனை மற்றும் சுவை இழப்பு

புதிய வகை கொரோனா வைரஸ் என்றால் என்ன?
"VUI 202012/01" என்ற புதிய கொரோனா வைரஸ், அதன் "ஸ்பைக்" புரதத்தில் ஒரு மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ளது. இதனால் இது மக்களிடையே உடனடியாக மற்றும் எளிதில் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம். இந்த வைரஸ் மாறுபாடு என்ன தான் இங்கிலாந்தின் தென்கிழக்கில் முதன்முதலில் தோன்றியிருந்தாலும், இப்போது இந்த வைரஸ் உலகின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த அச்சத்தைத் தூண்டியுள்து. இந்த வைரஸ் மாறுபாட்டில் குறைந்தது 17 பிறழ்வுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இது வைரஸின் வடிவத்தைப் பாதிக்கக்கூடும். இருப்பினும் இதுக்குறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் இந்த புதிய திரிவு வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

புதிய கொரோனாவின் 5 ஆபத்தான அறிகுறிகள்
ஆரம்ப கால கொரோனா மற்றும் மாறுபட்ட புதிய கொரோனாவின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் பரவலாகவும் அதிக வேகத்திலும் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் கோவிட்-19 க்கான 5 ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) வெளியிட்டுள்ளது. அந்த 5 அறிகுறிகள் பின்வருமாறு..
* சுவாச பிரச்சனைகள்
* மனக்குழப்பம்
* தொடர்ச்சியான நெஞ்சு வலி
* சோர்வு மற்றும் விழித்திருக்க முடியாமை
* நீல நிற உதடுகள் அல்லது முகம்

மாறுபட்ட புதிய வைரஸ் எவ்வளவு ஆபத்தானது?
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, மாறுபட்ட புதிய கொரோனா இங்கிலாந்தில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தூண்டும். மேலும் 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் மாறுபட்ட புதிய கொரோனாவால் அதிக மருத்துவமனைகள் நிரம்புவதோடு, பல இறப்புகளுக்கும் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

குழந்தைகளை அதிகம் தாக்கும்
ஆரம்ப காலத்தில் பரவிய கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மாறுபட்ட வைரஸ் குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன. எனவே இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த வைரஸ் உடலினுள் நுழைந்தால் அவர்களின் நிலைமையை மோசமாக்கிவிடும்.

வைராலஜி நிபுணரின் கூற்று...
NERVTAG குழுவின் பேராசிரியரும், லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் வைராலஜி நிபுணருமான வெண்டி பார்க்லே கூறுகையில், இந்த வைரஸ் பிறழ்வுகள் மனித உயிரணுக்களில் எளிதில் நுழையும் வண்ணம் உருமாறியுள்ளன. எனவே குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் மற்றும் பெரியவர்கள் இந்நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம்.

மற்றொரு ஆய்வு
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் தொற்று நோய்களின் கணித மாடலிங் மையம் நடத்திய மற்றொரு ஆராய்ச்சி, மாறுபட்ட புதிய கொரோனா மற்ற விகாரங்களை விட 56 சதவீதம் அதிகமாக பரவும் என்று கூறுகிறது.

என்ன செய்வது?
சி.டி.சி பரிந்துரைத்த படி, கொரோனா அறிகுறிகளை சந்திக்கும் போது சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவ சிகிச்சையைப் பெறுவது மட்டுமே சரியானது. இது தவிர, ஒருவர் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கொரோனா என்னும் கோவிட்-19, யாரையும் தாக்கக்கூடிய ஒரு தொற்றுநோயாக இருப்பதால், சமூக இடைவெளியைப் பின்பற்றவும், மாஸ்க்குகளை அணியவும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications