For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

|

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவது முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நோய்த்தொற்று விரைவாக பரவ ஆரம்பித்தது மற்றம் உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கி, ஒரு புதிய உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கிறது. பின்னர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட்-19-ஐ ஒரு பெருந்தொற்றுநோயாக அறிவித்தது. இந்த வைரஸ் தொற்று மிகவும் வேகமாக தொற்றக்கூடியது மற்றும் இத்தொற்று உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் இறப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 3.29 லட்ச மக்கள் இறந்துள்ளனர். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்த ஒரு வருடத்திற்குள் இது பலமுறை உருமாற்றமடைந்துள்ளது. இதனால் இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. 2020 இல் கொரோனாவின் முதல் அலைக்கு பின், இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

MOST READ: சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் எதுவும் வரக்கூடாதா? தினமும் 15 நிமிஷம் 'இத' செய்யுங்க போதும்...

இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கோவிட்-19 தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கியது. ஆனால் இன்று வரை பலருக்கு இந்தியாவில் என்னென்ன தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? எது சிறந்தது, எதில் பக்கவிளைவுகள் அதிகம் என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை இந்தியாவில் போடப்படும் கோவிட் தடுப்பூசிகளைப் பற்றி விரிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.

MOST READ: கடக ராசிக்கு செவ்வாய் செல்வதால் இந்த 4 ராசிக்கு சோதனை காலமா இருக்கப் போகுது... உங்க ராசியும் இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகள்

இந்தியாவில் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகள்

கொரோனாவின் இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், மறுபுறம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியும் வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி தான் ரஷ்யாவின் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) இந்த தடுப்பூசி மக்களிடையே பயன்படுத்த பாதுகாப்பானது என்று அறிவித்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி இந்தியாவில் கோவிஷீல்டாக தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் போலவே செயல்படுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

உலகிலேயே முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கோவிட் தடுப்பூசி தான் ஸ்புட்னிக்-வி ஆகும். ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி 91.6% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனையின் போது, இந்த தடுப்பூசி கொடிய கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க செயலில் நோய்த்தடுப்பை உருவாக்க முடியும் என்பது தெரிய வந்தது. இந்த தடுப்பூசியை 21 நாட்கள் இடைவெளியில் 0.5 மில்லி என்ற இரண்டு அளவுகளில் போடுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி ஜூன் 20 ஆம் தேதிக்கு பிறகு டெல்லிக்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைப்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர், "ஜூன் 20 க்குப் பிறகு சில தடுப்பூசிகள் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. தற்போது இந்த தடுப்பூசியை இறக்குமதி தான் செய்கிறோம். ஆகஸ்டு மாதத்தில் இந்த தடுப்பூசியின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவார்கள். ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவுகளில் ஒரு பகுதி டெல்லிக்கு வழங்கப்படும்." என்றும் கூறினார்.

கோவாக்சின்

கோவாக்சின்

பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தடைசெய்த அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்தடுப்பூசி இதன் தயாரிப்பாளர் கூறியதாவது, கோவாக்சின் ஒரு செயலற்ற தடுப்பூசியால் ஆனது, அதாவது தடுப்பூசி கொல்லப்பட்ட கொரோனா வைரஸால் ஆனது மற்றும் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும் திறன் இல்லை. இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் போது, ஏற்கனவே இது செயலில் உள்ள வடிவத்தில் இருப்பதால் நோயெதிர்ப்பு செல்கள் வைரஸை அங்கீகரிக்கின்றன. வைரஸ் தாக்குதலை அங்கீகரித்த பிறகு, நோயெதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கத் தூண்டும்.

கோவிஷீல்டு

கோவிஷீல்டு

கோவிஷீல்டு என்பது இந்தியாவில் போடப்படும் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும். இது இந்தியாவில் உள்ள புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தயாரிக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸின் போது கடுமையான ஒவ்வாமையை சந்தித்த எவரும் இரண்டாவது டோஸை போட வேண்டாம் அல்லது அவர்கள் மருத்துவரை அவசியம் அணுக வேண்டும்.

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள பொருட்கள் என்னென்ன?

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள பொருட்கள் என்னென்ன?

கோவிஷீல்டு தடுப்பூசியில் எல்-ஹிஸ்டைடின், எல்- ஹிஸ்டைடின் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மெக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசார்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு மற்றும் டிஸோடியம் எடேட் டைஹைட்ரேட் (EDTA) ஆகிய பொருட்கள் உள்ளன.

 கோவிட்-19 தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள்

கோவிட்-19 தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள்

கோவிட்-19 தடுப்பூசி போட்ட பின் சந்திக்கும் பக்கவிளைவுகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்ட பின் சந்திக்கும் பக்கவிளைவுகளாவன தலைவலி, அரிப்பு, காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியவை.

இருப்பினும் ஒருவர் தடுப்பூசியைப் போட்ட பின் பெரிய பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டால், அவர் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தடுப்பூசி போட்ட பின்பு சந்திக்கும் அசாதாரண பக்கவிளைவுகளாவன வயிற்று வலி, மயக்கம், பசியின்மை, வீங்கிய நிணநீர், அதிகப்பயடின வியர்வை, சரும அரிப்பு அல்லது தடிப்புகள் ஆகியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Complete List of COVID-19 Vaccines Available In India

There are many vaccines available in India which are being used against the novel coronavirus. Here is a list of COVID-19 Vaccines that you can get if you are in India.