Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
சற்றும் தாமதிக்காமல் உடனே சரிசெய்ய வேண்டிய சில செரிமான பிரச்சனைகள்!
நம்மில் பலர் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை, மருத்துவ ஆலோசனையை சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் இருந்தால், செரிமான மண்டலத்தை தாக்கிய நோய்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்
நம்மில் பலர் அன்றாடம் பலவிதமான செரிமான பிரச்சனைகளை சந்திப்போம். இவ்வாறு சந்திக்கும் செரிமான பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனையை சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் இருந்தால், செரிமான மண்டலத்தை தாக்கிய நோய்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.
Recommended Video

இன்று நம்மிடையே செரிமான பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான உணவுப் பழக்கம், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவை முக்கியமானவை. கீழே சற்றும் தாமதிக்காமல் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சில பொதுவான செரிமான பிரச்சனை கொடுக்கப்பட்டுள்ளன.

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி
நீண்ட காலமாக வயிற்று எரிச்சல் அல்லது தொடர்ச்சியான வயிற்று வலியை சந்தித்தால், அது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பிரச்சனையின் பொதுவான அறிகுறிகளாவன நாள்பட்ட மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் போன்றவை. உலக மக்கள் தொகையில் சுமார் 10-15 சதவீதத்தினர் இந்நோயால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

பித்தக்கற்கள்
இன்று ஏராளமானோர் பித்தப்பை கற்களால் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவருக்கு பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு காரணம் அதிகப்படியான கொழுப்பு அல்லது பித்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகள் தான். இந்த பிரச்சனைக்கு மருந்து அல்லது அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும்.

இரைப்பை உணவுக்குழாய் நோய் (GERD)
GERD என்பது மிகவும் பொதுவான செரிமான நோய்களுள் ஒன்றாகும். இது பெரும்பாலும் மார்பின் நடுப்பகுதி அல்லது அடிவயிற்றில் மேல் பகுதியில் எரிச்சலுடனான வலியை உண்டாக்கும். இப்படியான நிலையை நெஞ்செரிச்சல் என்று கூறுவர். நெஞ்செரிச்சலானது இரைப்பையில் உள்ள அமிலங்கள் உணவுக்குழாய் வழியே மேலே ஏறும் போது எரிச்சலை உண்டாக்கும். வழக்கமாக இந்த பிரச்சனைக்கு ஆன்டாசிட்டுகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்படுகிறது.

அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி
க்ளுட்டன் சென்சிட்டிவிட்டியுடன் தொடர்புடைய செலியாக் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்றவை பெருங்குடலில் அழற்சியை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு இப்பிரச்சனை இருந்தால், அது கடுமையான வயிற்று வலி, பிடிப்புகள், மலக்குடல் வலி மற்றும் இரத்தப்போக்கு, களைப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும்.

மூல நோய்
பலரும் வெளியே சொல்லத் தயங்கும் ஓர் செரிமான பிரச்சனை என்றால் அது மூல நோய் பிரச்சனையாகத் தான் இருக்கும். இந்நோய் ஒருவருக்கு இருந்தால், செரிமான மண்டலத்தில் உள்ள இரத்த நாளங்களில் வீக்கத்தையும், மலத்தில் இரத்தப்போக்கையும் ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், காரமான உணவுகள் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமான பிரச்சனைகளிலேயே மிகுந்த அவஸ்தைப்படச் செய்யும் முதன்மையான பிரச்சனையாக இதைக் கூறலாம்.
இவைத் தவிர, அசாதாரண ஆரோக்கிய பிரச்சனைகளின் கீழ் கட்டிகள் உருவாகுவது வயிற்றப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் செரிமான நோய்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?
பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் போன்றவை மனித ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் செரிமான நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. அரசாங்க தரவுகளின் படி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மக்கள், இந்திய மக்களிடையே சுமார் 20 சதவீத மக்களை பாதிக்கிறது.



Click it and Unblock the Notifications
