Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
நடைப்பயிற்சி குறித்து நிலவி வரும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்…
ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு வீரியமான ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட விறுவிறுப்பான நடைபயிற்சியே மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஒரு புதிய ஆய்வின்படி, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு வீரியமான ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட விறுவிறுப்பான நடைபயிற்சியே மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியானது, ஆறு மாதங்களுக்கு ஆரம்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150 பேருடன் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு தொடங்குவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் இரத்த குளுக்கோஸ் அளவிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், குளுக்கோஸை எரிப்பதை விட, மிதமான உடற்பயிற்சி செய்வது, கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், அதி தீவிர பயிற்சி மேற்கொள்வதால், கொழுப்பை விட குளுக்கோஸ் தான் அதிக அளவில் குறைவது தெரிய வந்துள்ளது.
நீண்ட காலமாக, விறுவிறுப்பான நடைபயிற்சி (மிதமான உடற்பயிற்சி) இரத்த குளுக்கோஸை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைகின்றன. மேலும், விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது, இரத்தத்தில் குளுகோஸ் உறிஞ்சப்படுவதை குறைத்திடுகிறது.

கட்டுக்கதை #1
தீவிர உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியது. ஆனால், விறுவிறுப்பான நடைபயிற்சி செய்வது எவ்வித பலனையும் அளிக்காது.
உண்மை: வாரத்தில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு வெறும் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்தாலே போதும், அனைத்து ஆரோக்கிய பலன்களையும் பெற்றிடலாம். நிச்சயமாக, தீவிரமான உடற்பயிற்சி செய்வதாலும் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், எல்லோரும் அதை சுலபமாக செய்து விட முடியாது. ஆனால், விறுவிறுப்பான நடைபயிற்சியை வாழ்நாள் முழுவதும் கூட ஒருவரால் செய்ய முடியும்.எதுவும் செய்யாமல் இருப்பதைகாட்டிலும், இதனால் தேவையான அளவு ஆரோக்கிய நன்மையை ஆவது பெற்றிடலாம்.

கட்டுக்கதை #2
நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால், அதற்கு உங்களது கை, கணுக்கால் அல்லது மணிக்கட்டு எடைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
உண்மை: உடல் எடையை குறைப்பதற்கு, இது போன்ற ஆடம்பரமான உபகரணங்களைப் பயன்படுத்துவது என்பது ஆபத்து தான். ஏனென்றால், தசைப் பிடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? கணுக்கால் எடையானது, உங்கள் முழங்கால், கால் மற்றும் இடுப்பு தசைகளுக்கு, இயற்கைக்கு மாறான, அதிகப்படியான அழுத்தத்தை மேலும் மேலும் கொடுப்பதால் பாதிக்கக்கூடும். மணிக்கட்டு அல்லது கை எடையானது, ஒட்டுமொத்த உடல் எடையையும் தாங்கும் போது, கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு வழிவகுத்திடும். அதற்கு பதிலாக, அதிக கலோரிகளை எரிக்க, கூடுதலாக இரண்டு நிமிடங்கள் நடந்தாலே போதும். மேலும், உங்கள் உடலை வலுப்படுத்தவும், கட்டுக்கோப்பாக மேம்படுத்தவும் விரும்பினால், மேல் உடல் தசைகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு குறிப்பிட்ட எடை பயிற்சியை மேற்கொள்வதோடு, சிறிது நேர நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்.

கட்டுக்கதை #3
நடைபயிற்சியின் போது சாக்ஸ் அணிவது என்பது தேவையில்லாத ஒன்று.
உண்மை: சாக்ஸ் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாக்ஸ் அணிவதால், வியர்வை ஊறிஞ்சப்பட்டு, சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படாமல் தடுத்திடும். மேலும், வியர்வை தேங்குவதால் ஏற்படக்கூடும் கொப்புளங்கள் உருவாகாமலும் பாதங்களை காத்திடலாம். எப்போதும் சின்தெடிக் அக்ரிலிக் சாக்ஸ் அல்லது ட்ரை ஃபிட், கூல் மேக்ஸ் போன்றவற்றை அணியுங்கள்.

கட்டுக்கதை #4
நடைபயிற்சிக்கு எந்த வகை ஷூவையும் பயன்படுத்தலாம்.
உண்மை: ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் என்று வெவ்வேறு காலணிகள் உள்ளன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒவ்வொரு விளையாட்டின் தன்மைகேற்ப, அதற்கு தகுந்தாற்போல ஷூக்கள் வடிவமைக்கப்படும். எனவே, உங்களது செயல்பாட்டிற்கு ஏற்ற ஷூக்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அப்போது, எவ்வித அசௌகரியமும் ஏற்படாமல் தடுத்திடலாம்.

கட்டுக்கதை #5
நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரும், நிறைய திரவங்களை குடிப்பது நல்லது.
உண்மை: நீண்ட காலத்திற்கு முன்பு, நடைப்பயிற்சி குறித்த ஒரு தவறான கருத்து இருந்து வந்தது. வேகமாக ஓடும் போது அல்லது நடைபயிற்சியின் போது தண்ணீர் குடிப்பதால் செயல்திறன் குறைவதோடு மட்டுமல்லாது, தசைப் பிடிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபோநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கும் போது மட்டும் தான் (இரத்தத்தில் உள்ள திரவ-எலக்ட்ரோலைட் அளவுகளின் ஏற்றத்தாழ்வு) தேவையான அளவை விட அதிக அளவு திரவம் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியெனில் சரியான வழி தான் என்ன? உடலில் இழந்த திரவ அளவை மாற்றுவதற்கு, ஒருவர் போதுமான அளவு நீர் மட்டுமே குடிக்க வேண்டும். வெறும் நீரைக் குடிப்பதை காட்டிலும், சோடியம் கொண்ட விளையாட்டு பானங்களை உட்கொள்வது சிறந்தது.

கட்டுக்கதை #6
ஓடுவதால் அதிக அளவு கலோரிகளை எரித்திட முடியும்.
உண்மை: 60 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்றும் 30 நிமிட ரன்னிங் இரண்டுமே ஒரே அளவிலான கலோரிகளை தான் குறைத்திட கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சியில் ஈடுபடும் போது எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது, அந்த நபருடைய பாலினம், வயது, உடலமைப்பு, எடை மற்றும் செயல்திறன் போன்ற காரணிகளைப் பொறுத்ததாகும். எனவே, இது தனித்துவமான ஒன்று. ஒருவருக்கொருவர் இது மாறக்கூடும்.



Click it and Unblock the Notifications