Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு வயசானாதான் பிபி வரணும்னு இல்ல...இந்த பழக்கம் உங்ககிட்ட இருந்தா...எந்த வயசுலையும் வருமாம்!
உப்பும் இரத்த அழுத்தமும் ஒன்றோடு ஒன்று சேராது. அதிக அளவு சோடியம் உங்கள் உடலில் இaரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. நமது உடல் செயல்பட சோடியம் தேவை. ஆனால் அதன் அதிகளவு ஆபத்தானது.
இன்றைய நாளில் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கவழக்கம் ஆகியவை நாள்பட்ட நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. ஏனெனில், நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 40 வயதிற்கு பிறகு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு ஆய்வு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு வரும் நாள்பட்ட நோய்கள், உங்களின் மோசமான பழக்கவழக்கங்களால் விரைவிலையே வரக்கூடும் எனத் தெரிவிக்கிறது. அதற்கு வயது முக்கியமல்ல. ஆதலால், ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

உயர் இரத்த அழுத்தம், இரத்த அழுத்தம் 120/80 mmHg ஐத் தாண்டும் போது, உடலுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. பலர் இரத்த அழுத்தம் முதுமையின் அறிகுறி என்று கருதுகிறார்கள். இரத்த அழுத்தத்தின் சில காரணிகள் வயது சார்ந்தவை. ஆனால், வயது இல்லாமல் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில காரணங்களால் உங்களுக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படலாம். அவை, என்னென்ன காரணங்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உப்பு அதிகமாக சாப்பிடுவது
உப்பும் இரத்த அழுத்தமும் ஒன்றோடு ஒன்று சேராது. அதிக அளவு சோடியம் உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. நமது உடல் செயல்பட சோடியம் தேவை. ஆனால் அதன் அதிகளவு ஆபத்தானது. உப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதால், உங்கள் உணவில் அதிகப்படியான உப்பை பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக தொகுக்கப்பட்ட உணவுகள் மூலம் அதன் நுகர்வை குறைக்க வேண்டும். சர்க்கரையைப் போலவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் மறைந்திருக்கும் உப்புகள் அதிகம். இவை உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும், உயர் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

புகைபிடித்தல்
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தவில்லை. இது உங்கள் நுரையீரலை முற்றிலும் பாதிக்கும். மேலும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது உங்கள் உயிருக்கே ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

உடல் பருமன்
ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டெண் என்பது நல்ல ஆரோக்கியத்தின் குறிகாட்டியாகும். பலர் தங்கள் எடையில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், காலப்போக்கில் தங்கள் உடலில் உருவாகும் ஆபத்துக்களைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். ஆம், உங்கள் உடல் எடை உங்கள் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவற்றை நீங்கள் சரியாக நிர்வகிக்காமல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் மட்டுமல்ல, நீரிழிவு நோய், இருதய பிரச்சினைகள் மற்றும் பிற பல உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உயர் உண்ணாவிரத இரத்த சர்க்கரை
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது மற்றும் இதய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு ஆய்வு அறிக்கையின்படி, நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரியவர்கள் 130/80 mm Hg க்கும் அதிகமான இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். ஆதலால், உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிகப்படியான ஆல்கஹால்
மது அருந்துவது எப்போதுமே விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. பொதுவாக மிதமான அளவு ஆல்கஹால் அருந்தலாம் எனக்கூறப்பபடுகிறது. அதேநேரம் அதிகளவு ஆல்கஹால் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை உருவாக்கும். ஆல்கஹால் உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் முழுவதுமாக பாதிக்கும். இது உங்கள் உறுப்புகளை செயலிழக்க வைக்கலாம். ஆதலால், மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

உட்கார்ந்த வாழ்க்கை
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் இருந்தால், மனித உடல் இயல்பான முறையில் செயல்படுவதை நிறுத்துகிறது. உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் முற்றிலும் பாதிக்கும். இது உங்கள் உடல் பருமனை அதிகரித்து சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

குறைவான மணிநேர தூக்கம்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவது, உங்கள் உடலை ஓய்வெடுக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள். இது உங்களுக்கு தேவையான ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் வழங்குகிறது. இரவில் தூங்காமல் இருந்தால், உங்களால் சில நாட்களுக்கு இயல்பான முறையில் செயல்பட முடியும். ஆனால் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் ஏற்படும் மன அழுத்தத்தால் உங்கள் உடல் செயலிழக்கும். இது பல்வேறு பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தும். அவற்றில் ஒன்று உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது.



Click it and Unblock the Notifications